முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறந்த (ஒட்டு) படம்!! (நம்பாதீங்க- பகுதி 005)

 நம்பாதீங்க- பகுதி 5

 நிறைய பேர் உண்மை என்று நம்பிய செய்தி இது:

நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமத்தால், 2001 ஆம் ஆண்டு சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்ட படம்:
இது தென்னாப்பிரிக்க கடற்கரை அருகில் இங்கிலாந்து ராணுவம் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்தது!!


 உண்மை

இந்த படம் சிறந்த புகைப்படமாக பலரது பாராட்டுகளை அள்ளிய நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது..

நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமம் இந்த தகவலை மறுத்தது.
மேலும், இப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லை என்று அறிவித்தது.



அவர்கள் வெளியிட்ட மறுப்பு செய்தி : Shark "Photo of the Year" Is E-Mail Hoax..

 கீழ்காணும் இரண்டு படங்களையும் பாருங்கள்.. விடயம் புரியும்!!



படம்: லான்ஸ் சீயூங் (Lance Cheung), அமெரிக்க விமானப்படை
இடம்:சான்பிரான்ஸிஸ்கோ

முதலில் உள்ள படம் சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது.. இதில் பாலம் நன்கு தெளிவாகத் தெரிவதைக் கவனிக்கவும்..

 படம்: சார்லஸ் மாக்ஸ்வெல் (Charles Maxwell)
 இடம்: தென்னாப்பிரிக்கா

அடுத்த படம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது!!

இப்போது முதலில் காட்டப்பட்ட சிறந்த படத்தை மீண்டும்  பாருங்கள்..

 


ஹெலிகாப்டர் படத்தின் ஆடிவிம்பம் (mirror image) எடுக்கப்பட்டு சுறா உள்ளே புகுத்தப்பட்டது!!
இதன் காரணமாக வந்த படம் தான்  இது!
பாலத்தின் கீழ் பகுதி தெளிவாக இல்லையென்பதைக் கவனியுங்கள்!!

இப்போது புரிகிறதா இது உண்மையிலேயே சிறந்த ஒட்டுப் படம் என்று???



நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் வாசிக்க: நம்பாதீங்க!!

தொடரின் முந்தைய பதிவு:  


நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
 




மடல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்

கருத்துகள்

  1. ஹா...ஹா..ஹா... நல்ல எடிட் பண்ணிருக்காங்க...!

    :) :) :)

    பதிலளிநீக்கு
  2. ஒட்டு படம் என்பதை கண்டுபிடிக்க நம்மிடமே ஏகப்பட்ட சாப்ட்வேர் இருக்கும் போது எப்படி ஏமாந்தாங்க......!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, 2001 ஆம் ஆண்டுகளில் ஒட்டு படம் அறியும் மென்நிரலிகள் அவ்வளவு கிடையாது.
      இன்றும் சரி. நமக்கு அஞ்சலில் வரும் பல செய்திகளைப் படித்து உண்மை என்று நம்பி அதை முன் அனுப்புவர்களே (Forward) அதிகம். உண்மையா என்கிற தேடலில் பலரும் இறங்குவதில்லை

      நீக்கு
    2. படித்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. நீங்க உங்க பதிவுகளை தமிழ்மணத்தில இணைக்கலாமே! எல்லாரிடமும் போய்ச் சேருமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பதிவு எழுத வந்த புதிதில், அங்கு ஏதோ பிரச்சனை என்று அனைவரும் பதிவிட்டுக் கொண்டிருந்தனர்.சில பதிவுகளில் இருந்த வேண்டுகோளிற்கிணங்க நீங்கிக் கொண்டேன்!
      தற்போது மீண்டும் இணைய முயற்சிக்கிறேன்!

      நீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...