முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய ரூபாயினைக் கணிணியில் உள்ளிடுவது எப்படி?

நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய சுதந்திர திருநாள் வாழத்துகள்!! இந்த இனிய நாளில், நமது இந்திய ரூபாயின் குறியீட்டைப் பற்றி அறிந்து கொள்வோமா? இந்திய அரசு 15 ஜூலை 2010 அன்று தனது ரூபாய் பண மதிப்பைக் குறிப்பதற்கு என தனியே ஒரு சிறப்பு குறியீட்டைக் கொண்டு வந்தது . இதன் மூலம் , ரூபாய் மதிப்பைப் பயன்படுத்தும் பிற நாடுகளிடம் ( பாகிஸ்தான் , இலங்கை , நேபாளம் ) இருந்து தனது மதிப்பை வேறுபடுத்திக் காட்டியது . கணிணிகளில் இந்திய ரூபாய்: விண்டோஸ் (Windows Vista/ Windows 7) : தற்போது  யூனிக்கோடு எழுத்துருவில் (Unicode-6) இந்திய ரூபாய் நாணயம் இடம் பெற்றுள்ளது. எனவே, எல்லா எழுத்துருக்களிலும் (Font) ரூபாய் வடிவத்தை எழுதலாம்.  நிறுவுவதற்கு: மைக்ரோசாப்ட் ஆதரவு பக்கம் சென்று, தகுந்த கோப்பைத் தரவிறக்கிக் நிறுவிக் கொள்ளுங்கள்.  எழுதுவதற்கு: கீழ்காணும் வரிசையினை அடித்தால், இந்திய ரூபாய் வடிவம் கிடைக்கும்: 20B9 + Alt + x  விண்டோஸ் XP: நிறுவுவதற்கு:   கொஞ்சம் பழைய வழி தான்.. முதலில், Foradian தளம்   சென்று,கோப்பைத் தரவி...

இந்தியப் பெண் பெற்ற 11 குழந்தைகள் (நம்பாதீங்க - பகுதி 11)

வணக்கம் நண்பர்களே.. நமது "நம்பாதீங்க" தொடர் வெற்றிகரமாக தனது 11 ஆம் பகுதியை வெளியிடுகிறது. 11 என்கிற எண்ணிற்கு என்ன சிறப்போ தெரியவில்லை.. இந்த பதிவும்  11 ஐப் பற்றியது தான்!! சில மாதங்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது. இந்தியப் பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார் என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர் அறிந்து இருப்பீர்கள். உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி இருக்கின்றன. இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம். இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித...

படை எடுக்காத ஒரே நாடு (நம்பாதீங்க - பகுதி 9 )

நமது இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த பரப்பபடுகிறது: இந்தியா என்கிற தேசம் தனது 10,000 ஆண்டு வரலாற்றில் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை  இது உண்மையல்ல என்பதை சில வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர். உண்மை பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின் மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்).. மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்: இராசராச சோழன் இலங்கையின் மீதும், மாலத்தீவின் மீதும் படையெடுத்து வெற்றி கண்டவன் 'கடாரம் கொண்டான்' எனப் புகழ் பெற்ற இராசேந்திர சோழன் தற்போதைய மலேசியா (ஸ்ரீவிஜயம்), இந்தோனேசியா (இலாமுரி தேசம்) ஆகியவற்றின் மீது படையெடுத்து கைப்பற்றினான். இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர...

தீபாவளி இரவினில் இந்தியா (நம்பாதீங்க - பகுதி 1)

நம்பாதீங்க......  (பகுதி 1) இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது.. இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு... மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது.. ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்... மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன... இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு.. பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்... பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!! பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதியனவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன.. அவற்றைப் பற்றி அலசுவதே  இந்த (சிறு) தொடரின் நோக்கம்.. தீப ஒளித்திருநாளாம் தீபாவளியை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருப்பீர்கள்!! நேற்று (26/10/2011) பலரது அஞ்சலுக்கும் (அல்லது முகநூல்/ ட்விட்டர்) ஒரு படம் வந்திருக்கும்.. இந்தியா தீபாவளி இரவினில் எப்படி ஒளிர்கிறது என்று நாசா எடுத்த புகைப்படம்:  சரி, ...