முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மூத்த மொழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் என்றார் பாரதியார். பல மொழிகளைக் கற்று உணர்ந்த பாரதியால், தமிழ் மொழியின் இனிமையை உணர முடிந்தது.    தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகளை  ஒன்று முதல் எட்டு வரை பார்ப்போமா? ஒரே மொழி: 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' உதித்த மூத்த மொழி நம் தமிழ் மொழி. கி.மு 200 ஆம் ஆண்டிற்கு முன்னரேயே இலக்கணத்திற்கு என தனி நூல் (தொல்காப்பியம்) கொண்ட ஒரே மொழி நம் தமிழ் மொழி தான்! இரு வாழ்க்கை: தமிழர் தன் வாழ்க்கையை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்து வாழ்ந்தனர். இல்லத்தில் இருக்கும் அன்பும், காதலும் இயைந்த வாழ்க்கை அக வாழ்க்கை. வெளியே நடக்கும் வீரம், கொடை முதலிய கொண்ட வாழ்க்கை புற வாழ்க்கை. முத்தமிழ்: இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று களங்களிலும் தமிழை வளர்த்தனர் தமிழர். இயல் என்பது எழுத்து மற்றும் பேச்சில் பயன்படுத்தப்படும் தமிழ்.  இசை என்பது பண் இசைத்துப் பாடப்படும் தமிழ். நாடகம் என்பது கூத்து மற்றும் ஆடலால் உணர்த்தப்படும் தமிழ். நான்மறை: அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை நான்கு உறுதிப...