முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விண்வெளி அதிசயங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரு சூரியன்களுடன் ஒரு கோள்- விண்வெளி அதிசயம்

ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது, இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும் ? சற்று கற்பனை செய்து பாருங்கள்!! உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் ஒரு கோள் இருக்கிறது.. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஒரு கற்பனை உண்மையாகிறது!!!! அமெரிக்காவில் உள்ள  நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்த ஒரு அதிசயத்தக்க உண்மை தான் இந்த கோள்!! கெப்லர் 16 B என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள், அருகருகில் இருக்கும் இரு சூரியன்களைச் சுற்றி வருகிறது. பாறைகளாலும், வாயுக்களாலும் நிரம்பியுள்ள அந்த கோள் கிட்டத்தட்ட சனிக்கிரகத்தின் அளவில் உள்ளது. அது இரு சூரியன்களையும் 10.4 கோடி கி.மீ தூரத்தில் இருந்து கொண்டு சுற்றுகிறது!!  (நம் வெள்ளி கிரகத்தின் தூரம்) கெப்லர் 16 B சுற்றி வரும் சூரியன்கள் நம் பகலவனின் அளவில் இல்லை. ஒரு சூரியன் சூரியனில் 20% எடையிலும், பெரிதொன்று 69% எடையிலும் உள்ளன. கெப்லர் 16 B அவை இரண்டையும் ஒரு முறை சுற்ற 229 நாட்...