முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நம்பாதீங்க லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செவ்வாய் கிரகத்தில் இரட்டை சூரியன்கள் (நம்பாதீங்க - பகுதி 13)

சமீபத்தில், நாசா அனுப்பிய கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக  தரையிறங்கியதை அறிந்திருப்பீர்கள். கியூரியோசிட்டி படங்களாக எடுத்து தள்ளுவதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். அப்படி அனுப்பிய படம் ஒன்றைப் பார்த்த நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  பல வானியலாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறனர். படத்தைப் பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். என்ன? ஆச்சரியமாக இருக்கிறதா? செவ்வாய் கிரகத்தில் தெரியும் இந்த இரட்டை சூரியன்கள் தான் தற்போதைய சூடான சர்ச்சை (Hot topic). என்னங்க? நீங்களும் ஆராயப் போறீங்களா? கொஞ்சம் பொறுங்க!! யாரோ சும்மா விளையாட்டுக்குச் செய்த படம்!!! இது தான் சமீப காலத்தில் அதிகமாக பரப்பப்படும் படம்.  உண்மை படத்தின் பிண்ணனியில் இருக்கும் மலை / மேடு  ஆகியவை மெய்யாலுமே செவ்வாயில் உள்ளவை தான். (நம்புங்க!!). இந்தக் காட்சியை நாசாவின் தளத்திலும் காணலாம்.   இந்தப் படம் கூட கியூரியோசிட்டி எடுத்ததல்ல! 2005 மே 19 அன்று மாலை (செவ்வாய்), நாசா அப்போது அனுப்பியிருந்த ஸ்பிரிட் தரையுளவி (NASA's Mars Explor...

நிலா அது வானத்து மேலே (நம்பாதீங்க - பகுதி 12)

சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.படத்தில் நீங்கள் காண்பது, பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் . நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!! கொஞ்சம் பொறுங்க.. வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் உண்மையில் இப்படித் தான் இருக்குமா?இங்கு அலசுவோம்!                          சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் இப்படித் தான் இருக்கும்!! இதைக் காண கண்கோடி வேண்டும்... பார்த்து மகிழுங்கள்... படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!!  என்ன நண்பர்களே!! சூரிய அஸ்தமனம் எப்படி? ரொம்ப நல்லா இருக்கா!! ஆனால், இது உண்மை இல்லை!! ஏன்? மேலும் படிங்க!! உண்மை உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல... ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை... இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!! (படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!) இ...

இந்தியப் பெண் பெற்ற 11 குழந்தைகள் (நம்பாதீங்க - பகுதி 11)

வணக்கம் நண்பர்களே.. நமது "நம்பாதீங்க" தொடர் வெற்றிகரமாக தனது 11 ஆம் பகுதியை வெளியிடுகிறது. 11 என்கிற எண்ணிற்கு என்ன சிறப்போ தெரியவில்லை.. இந்த பதிவும்  11 ஐப் பற்றியது தான்!! சில மாதங்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது. இந்தியப் பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார் என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர் அறிந்து இருப்பீர்கள். உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி இருக்கின்றன. இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம். இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித...

ஜூன் 2012 ஸ்பெ ஷல் (நம்பாதீங்க- பகுதி 10) June Special

வணக்கம் நண்பர்களே, திருமண தேவதையான ஜூனோவின் பெயர் கொண்ட இந்த ஜூன் மாதத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.  ஜூன் 2012 ஐப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கு.. தெரியுமா? ஒரே மாதத்தில் 5 வெள்ளி, 5 சனி, 5 ஞாயிறு வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அரிய சிறப்பைப் பெற்றது ஜூன் 2012 !! சந்தேகம் என்றால் நீங்களே காலண்டரைப் பாருங்க! இந்த அரிய நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள். சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் ! என்னங்க? நிச்சயமா இது ஜூன் ஸ்பெ ஷல் தானே? கொஞ்சம் இருங்க!!மேலே இருப்பது சுத்த அக்மார்க் பொய்!! உண்மை: இந்த செய்தியை மின்னஞ்சலில் பார்த்து எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியாது!! முதலில், ஜூன் மாதத்தில் 30 நாட்கள் தான். இது நடக்க சாத்தியம் இல்லை.  மே ம...

படை எடுக்காத ஒரே நாடு (நம்பாதீங்க - பகுதி 9 )

நமது இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த பரப்பபடுகிறது: இந்தியா என்கிற தேசம் தனது 10,000 ஆண்டு வரலாற்றில் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை  இது உண்மையல்ல என்பதை சில வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர். உண்மை பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின் மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்).. மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்: இராசராச சோழன் இலங்கையின் மீதும், மாலத்தீவின் மீதும் படையெடுத்து வெற்றி கண்டவன் 'கடாரம் கொண்டான்' எனப் புகழ் பெற்ற இராசேந்திர சோழன் தற்போதைய மலேசியா (ஸ்ரீவிஜயம்), இந்தோனேசியா (இலாமுரி தேசம்) ஆகியவற்றின் மீது படையெடுத்து கைப்பற்றினான். இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர...

கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் (நம்பாதீங்க - பகுதி 8 )

புராணக்கதைகளில் ராட்சதர்கள் பற்றிய கதைகளைப் படித்திருப்போம். அவர்கள் மனிதர்களை விட மிக உயரமாவும், திடமாகவும் இருந்ததாக இருக்கும். வேதங்கள் அசுரர்களை ராட்சதர்களாக சித்தரிக்கிறன. பீமனின் மகன் கடோத்கஜன் கூட ராட்சதன் தான்.. அப்படிப் பட்ட ராட்சதர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா?அதற்கு எதுவும் ஆதாரம் உண்டா? இதோ இந்த எலும்பு கூடுகள் உங்களுக்குப் பதில் சொல்லும்!!                                                                                                           ...

நெற்றிக் கண் (நம்பாதீங்க - பகுதி 7)

இறைவனின் இருப்பைப் பற்றிய விவாதங்களும் சர்ச்சைகளும் இன்னும் தீர்ந்த பாடில்லை. இறைவனை நம்புபவர்கள் அதற்காக பல விவாதங்களை முன்வைக்கிறனர். நாத்திகர்களும் அதற்கு இணையான விளக்கங்களின் மூலம் மறுக்கிறனர். நாசாவின் ஒரு புகைப்படத்தை வைத்து பலர் கடவுளைக் காட்டிய கதை இது: படத்தில் இருக்கும் பொருள் கண் போலவே தோன்றுகிறது அல்லவா? இந்த படம் பலருக்கு இறைவனைக் காட்டியது. அதைப் பற்றிய  செய்தி (தமிழாக்கம்):  கடவுள் இருக்கிறார்!! கடவுள் உண்டா இல்லையா என்பது இன்று வரை சர்ச்சையாக இருக்கிறது.. ஆனால், நாசா எடுத்த ஒரு புகைப்படம் மூலமாக கடவுள் இருப்பது உறுதியாகி விட்டது!! இது நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி எடுத்த அரிய படம். இது 3000 வருடங்களுக்கு ஒரு முறையே நடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது! இது "கடவுளின் கண்" என்றழைக்கப்படுகிறது.. இதை எளிதாக அஞ்சல் பெட்டியில் இருந்து அழிக்கலாம்.. ஆனால், அதை விட எளிதாக பரப்பலாம்.. கடவுள் நம்மையெல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்! உண்மை இது தான்          இந்த படம் நாசாவால் எடுக்கப்பட்டது தான்!! இந்தப் பட...

பிராட் ஹாக் வாங்கிய சச்சினின் கையெழுத்து (நம்பாதீங்க - பகுதி 6)

  சாதனைகள் செய்வது அளப்பரிய செயல். சாதனையாளர்கள் மேல் எழும் குற்றச்சாட்டை மறுக்கும் போது, புள்ளிவிவரங்கள் மூலமே பலரும் மறுப்பர். ஆனால், அந்த விவரங்களில் சில தவறுகள் இருக்க வாய்ப்பு உண்டு. இந்த வார ஆனந்த விகடனில் (மார்ச் 28, 2012) வந்த செய்தியும் அது போலத் தான். சச்சினைப் புகழ்ந்து "இனி, இரண்டாவது இன்னிங்ஸ்!" என்கிற கட்டுரை வெளிவந்துள்ளது. 2004 இல் ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் சச்சினை சுழல்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் அவுட் ஆக்கி விட்டார், போட்டி முடிந்ததும் சச்சினின் விக்கெட்டைப் பறித்த அந்தப் பந்தைக் கொண்டு வந்து அவரிடமே ஆட்டோகிராஃப் கேட்டு இருக்கிறார் பிராட் ஹாக். 'வாழ்த்துக்கள்... ஆனால், இது இன்னொரு முறை நடக்காது!' என்று எழுதிக் கையெழுத்துப் போட்டார் சச்சின். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, 21 போட்டிகளில் ஹாக்கின் பந்து வீச்சை எதிர்கொண்டு இருக்கிறார் சச்சின். அதில் ஒரு முறை கூட ஹாக்கின் பந்து வீச்சில் அவுட் ஆனது இல்லை.       சில நாட்கள் முன்பு வரை இந்த சம்பவம் பற்றி What is Confidence and Dedication?      என்க...

சிறந்த (ஒட்டு) படம்!! (நம்பாதீங்க- பகுதி 005)

  நம்பாதீங்க- பகுதி 5   நிறைய பேர் உண்மை என்று நம்பிய செய்தி இது: நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமத்தால், 2001 ஆம் ஆண்டு சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்ட படம்: இது தென்னாப்பிரிக்க கடற்கரை அருகில் இங்கிலாந்து ராணுவம் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்தது!!   உண்மை இந்த படம் சிறந்த புகைப்படமாக பலரது பாராட்டுகளை அள்ளிய நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.. நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமம் இந்த தகவலை மறுத்தது . மேலும், இப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லை என்று அறிவித்தது. அவர்கள் வெளியிட்ட மறுப்பு செய்தி : Shark "Photo of the Year" Is E-Mail Hoax ..   கீழ்காணும் இரண்டு படங்களையும் பாருங்கள்.. விடயம் புரியும்!! படம்: லான்ஸ் சீயூங் (Lance Cheung), அமெரிக்க விமானப்படை இடம்:சான்பிரான்ஸிஸ்கோ முதலில் உள்ள படம் சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது.. இதில் பாலம் நன்கு தெளிவாகத் தெரிவதைக் கவனிக்கவும் ..   படம்: சார்லஸ் மாக்ஸ்வெல் ( Charles Maxwell )   இடம்: த...