முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சூரியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரட்டைச் சூரியன்களைச் சுற்றும் இரட்டைக் கோள்கள் (மெய்யாலுமே நம்புங்க!)

ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தில்  இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும் ? உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் கோள்கள் உண்டு!! அமெரிக்காவில் உள்ள  நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்தது தான் இந்த அதிசயத்தக்க உண்மை!! ஒரு சூரியனைச் சுற்றும் கோள்களைக் கொண்ட சூரிய குடும்பங்களையோ ( Multi-planet systems)   , அல்லது  இரு சூரியன்களைச் சுற்றும் ஒரே கோளையோ (Circumbinary planetary system) கொண்ட சூரிய குடும்பங்களையோ தான் இதுவரை கெப்லர் கண்டறிந்துள்ளது.   தற்பொழுது  கெப்லர் கண்டறிந்துள்ள சூரிய குடும்பம் மிகவும் வினோதமானது! அதில் இரண்டு சூரியன்கள் இருப்பது விசித்திரமல்ல! இரட்டைச் சூரியன்களை இரண்டு  கோள்கள் சுற்றுவது தான் அதிசயம்!! அந்த கண்கொள்ளாக் காட்சி எப்படி இருக்கும்? ஒரு ஓவியரின் கற்பனை இதோ:   என்ன நண்பர்களே? ' நம்பாதீங்க ' படித்து படித்து இதை நம்ப மனம் மறுக்கிறதா? ஆனா, மெய்யாலுமே இதை நம்...

செவ்வாய் கிரகத்தில் இரட்டை சூரியன்கள் (நம்பாதீங்க - பகுதி 13)

சமீபத்தில், நாசா அனுப்பிய கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக  தரையிறங்கியதை அறிந்திருப்பீர்கள். கியூரியோசிட்டி படங்களாக எடுத்து தள்ளுவதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். அப்படி அனுப்பிய படம் ஒன்றைப் பார்த்த நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  பல வானியலாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறனர். படத்தைப் பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். என்ன? ஆச்சரியமாக இருக்கிறதா? செவ்வாய் கிரகத்தில் தெரியும் இந்த இரட்டை சூரியன்கள் தான் தற்போதைய சூடான சர்ச்சை (Hot topic). என்னங்க? நீங்களும் ஆராயப் போறீங்களா? கொஞ்சம் பொறுங்க!! யாரோ சும்மா விளையாட்டுக்குச் செய்த படம்!!! இது தான் சமீப காலத்தில் அதிகமாக பரப்பப்படும் படம்.  உண்மை படத்தின் பிண்ணனியில் இருக்கும் மலை / மேடு  ஆகியவை மெய்யாலுமே செவ்வாயில் உள்ளவை தான். (நம்புங்க!!). இந்தக் காட்சியை நாசாவின் தளத்திலும் காணலாம்.   இந்தப் படம் கூட கியூரியோசிட்டி எடுத்ததல்ல! 2005 மே 19 அன்று மாலை (செவ்வாய்), நாசா அப்போது அனுப்பியிருந்த ஸ்பிரிட் தரையுளவி (NASA's Mars Explor...

நிலா அது வானத்து மேலே (நம்பாதீங்க - பகுதி 12)

சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.படத்தில் நீங்கள் காண்பது, பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் . நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!! கொஞ்சம் பொறுங்க.. வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் உண்மையில் இப்படித் தான் இருக்குமா?இங்கு அலசுவோம்!                          சூரிய உதயமும், மறைவும் காண்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். பூமியின் வட துருவத்தில் நிகழும் சூரிய அஸ்தமனம் இப்படித் தான் இருக்கும்!! இதைக் காண கண்கோடி வேண்டும்... பார்த்து மகிழுங்கள்... படத்தில் நிலாவுக்கு நேர்கீழே சூரியனைக் காணலாம்!!  என்ன நண்பர்களே!! சூரிய அஸ்தமனம் எப்படி? ரொம்ப நல்லா இருக்கா!! ஆனால், இது உண்மை இல்லை!! ஏன்? மேலும் படிங்க!! உண்மை உண்மையில் இப்படி இது ஒரு புகைப்படமே அல்ல... ஒட்டுவேலையோ என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை... இது இங்கா நீல்சன் (Inga Nielsen) எனும் ஓவியரால் வரையப்பட்ட அழகிய ஓவியம்!! (படத்தின் கீழே பாருங்கள்.. கருப்பு பட்டியில் அவர் பெயர் இருக்கும்!!) இ...

சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)

நண்பர் "கோவை நேரம்" ஜீவானந்தம் அவர்கள் தனது வலைப்பூவில் தான் வானில் கண்ட அதிசயம் பற்றி " வானில் ஓர் அதிசயம்  என்கிற பதிவில் எழுதியிருந்தார்.  அது என்ன அதிசயம்? எப்படி நிகழ்கிறது? இங்கு பார்ப்போம்!! (அப்பாடா!! நாமளும் ஒரு பதிவு தேற்றியாச்சு) இந்த நிகழ்வு பரிவேடம் (Halo) என்று அழைக்கப்படுகிறது!!ஒளிவட்டம் என்றும் சொல்லலாம்! இது 22 டிகிரி (22 º) ஹாலோ ஆகும். இவை சூரியனில் மட்டுமல்ல, நிலவைச் சுற்றியும் வரும்.!!  இது எப்படி ஏற்படுகிறது? நமக்கு மேலே வானத்தில் சுமார் 5.5 கி.மீ உயரத்தில் உள்ள மேகங்கள்  மென்னடுக்கு முகில் ( Cirrostratus cloud) என்று அழைக்கப்படுகிறன. இவை பெரும்பான்மையாக பனித்துளிகளால் ஆனவை. இவற்றை வெறும் கண்ணால் பார்ப்பது அரிது. மேகங்களில் உள்ள பனிக்கட்டிகள் அனைத்தும் அறுகோண (Hexagon) வடிவில் இருக்கும். மேலும், அவை அனைத்தும் அடுக்கி வைத்தது போல ஒரே வரிசையில் இருக்காது!! ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு திசையில் இருக்கும்.  சூரியனின் ஒளிக்கதிர்கள் பனித்துகள்களின் மீது விழும் போது, அவை சூரிய ஒளியை திசை திருப்புகிறன (refraction). நாம் இந்த காட...

வெள்ளி இடைமறிப்பு (Venus transit) - 2012 - காணத்தவறாதீர்!!

இந்த ஜூன் மாதம் உண்மையிலேயே அரிய மாதம் என்று சென்ற பதிவிலேயே சொல்லியிருந்தேன் அல்லவா? அது ஏன்? ஜூன் 6 , 2012 இந்த நாள் அன்று வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) ஏற்படவுள்ளது. அது என்ன வெள்ளி இடைமறிப்பு? நமது சூரிய குடும்பத்தில் எட்டு கோள்களும் , அவற்றின் துணைக்கோள்களும், மற்றும் சில சிறிய கோள்களும் உள்ளன. இவை அனைத்தும் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறன. இந்த  நகர்வின் போது அபூர்வமாக மூன்று கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வருவதுண்டு. அப்படி வரும் போது, இடையில் உள்ள பொருள் மற்றதை மறைக்கும். இதற்கு இடைமறிப்பு (Astronomical Transit) என்று பெயர். வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) என்பது, வெள்ளி கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும், இடையில் வருவது ஆகும். அதாவது, சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். [ஒரு கோளும், அதன் துணைக்கோளும் சூரியனும் ஒரே கோட்டில் வந்தால் அது கிரகணம் (Eclipse). அதுவே, இரு கிரகங்களும் சூரியனும் வந்தால் அது இடைமறிப்பு (Transit) ]  அதில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? வெள்ளியும், பூமியும் சூரியனை...