26 சூலை 2011 செவ்வாய் அன்று திருவனந்தபுரம் நோக்கி பயணம்... எனது அலைபேசி இசையை என் காதுகளில் தெளித்துக் கொண்டே இருந்தது.... மாநில எல்லையான களியக்காவிளையைப் பேருந்து நெருங்கத் துவங்கியது.... பெண்ணிடம் காதல் புரிவதற்காக, தமிழ் கற்கும் ஐரோப்பியர்கள் பாடும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. (வள்ளியே.. சக்கர வள்ளியே!!) இடையே அருமையான வரிகள்: " உன்னைப் பார்த்ததும் ஊரை விட்டு ஆங்கிலம் ஓடிப்போவதென்ன? சீராய் செம்மொழி செந்தமிழ் தான் என் மொழி என்றே ஆனதென்ன? " மிகவும் சிலாகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்! கேரள எல்லை வந்தது.. பாடலும் முடிந்தது!! எல்லையைக் கடக்கவும் பாடலும் மாறியது.. என் அலைபேசியில் அடுத்து ஒலித்த பாடல்: ஆஹா... அடடா... பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் (ஹே) ஆனால் (ஹே) கண்டேன் ஏன் (ஹே) ஓர் ஆயிரம் கனவு (ஹே) கரையும் என் ஆயிரம் இரவு நீ தான் வந்தாய் சென்றாய் என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் ஓ ஹோ ஓமணப் பெண்ணே ஓமணப் பெண்ணே ஓமணப...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ