
நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி தரையுளவி (Curiosity Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா?
சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர் நாசா விஞ்ஞானிகள்.
நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம்.
புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!)!!
செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் (Mars Science Laboratory - MSL):
செவ்வாய் கிரகத்தினை உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதே செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் என்கிற திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக கியூரியோசிட்டி (Curisoity)என்கிற பெயரில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட தரையுளவி (Rover) பயன்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் காலம் 686பூமி நாட்கள் ஆகும்.
திட்டத்தின் குறிக்கோள்கள் (Mission Objectives):
1. உயிர் வாழ்தகுமை சாத்தியக் கூறுகள் (Biological Potential) குறித்த ஆய்வு
- கரிமச் சேர்மங்கள் (Organic Compounds) இருப்பு மற்றும் தன்மை குறித்த அலசல்
- உயிர் வாழ்க்கைக்குத் தேவையான வேதியியல் கூறுகளை ஆய்வு செய்தல் [கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், சல்பர்]
- உயிர்கூறுகளின் இருப்பை (Bio-signatures of Life) அறிய முயலுதல்
- செவ்வாயின் காற்று மண்டலத்தின் பரிணாம வளர்ச்சியினை (Evolution of Martian atmosphere) அலசுதல்
- நீர் மற்றும் கரிம வாயு (Carbon di oxide) ஆகியவற்றின் தற்போதைய இருப்பு, பகிர்மானம் மற்றும் சுழற்சி முறை குறித்து ஆராய்தல்.
- செவ்வாயின் மேற்பரப்பின் வேதியியல் (Chemical), சம இயல் (Isotopic) மற்றும் கனிமவியல் (Minerology) பொதிவினைக் கண்டறிதல்
- செவ்வாயில் உள்ள பாறை மற்றும் மண் உருவாகிய முறையினை அலசுதல்
- செவ்வாய் மேற்பரப்பின் கதிரியக்கத்தின் அகன்ற அலைக்கீற்றை (Broad Spectrum of Surface Radiation) குறித்த ஆய்வு
கியூரியோசிட்டி தரையுளவி (Curisoity Rover):
- உலகிலேயே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய தரை ஊர்தி (Rover)
- 3 மீ நீளம் கொண்டது. மொத்த எடை 899 கிலோ
- முதல் முறையாக சக்கரங்களைக் கொண்டே தரையிறக்கம் (Landing on Wheels)
- செவ்வாயினை ஆய்வு செய்வதற்காக 10 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது
- 6 தனி சக்கரங்களைக் கொண்ட ஸ்டியரிங் (இதன் மூலம் 360 டிகிரியும் சுழல முடியும்)
- அணுசக்தி (Nuclear Power) மூலம் இயங்கும் கலன்
ஏவுதல் (Launch) :
பயணம் (Cruise):
விண்ணில் செலுத்தப்பட்ட MSL விண்கலன் செவ்வாயை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தது. 56.7 கோடி கிமீ தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்தது. |
நெருங்குதல் (Approach):
2012 ஜூன் 22 அன்று விண்கலன் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்தது. செவ்வாயின் மையத்திலிருந்து 3500 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. தரையிறக்கத்திற்குத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்பட்டன |
நுழைவு மற்றும் தரையிறக்கம் (Entry, Descent and Landing): 06 ஆகஸ்ட் 2012 அன்று விண்கலன் தனக்கு இடப்பட்ட முக்கிய பணியினைச் செய்தது.
தான் சுமந்து வந்த கியூரியோசிட்டி தரையுளவியினை (Curisoity Rover) பத்திரமாக செவ்வாய் கிரகத்தின் தரையில் இறக்கி விட்டது.
இந்த செயல் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது:
2. வான்குடை இறக்கம் (Parachute Descent) 3. ஏவுதல் மூலம் இறக்கம் (Powered Descent) 4. வான் பளு தரையிறக்கம் (Sky Crane)
இதில் முக்கிய விடயம்...
இதுவரை நாசா அனுப்பிய தரையுளவிகள் காற்றுப்பைகளின் (Airbags) துணை கொண்டு தரையிறக்கப்பட்டன.
முதல் முறையாக, ஊர்தியின் சக்கரங்களைக் கொண்டே தரையிறக்கம் (Landing on Wheels) செய்யப்பட்டதால், செயல் நடைபெற்ற 06:39 நிமிடங்களும் மிகப் பதட்டமானதாகவே கருதப்பட்டது.
இறக்கத்தின் போது, செவ்வாய் கிரகத்தின் மீது படிந்த தனது நிழலைப் படமெடுத்த ஊர்தி:
|
இனி.........

Curiosity இரண்டு வருடங்கள் செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வுகளைத் தொடரும். இதனால், புதிய கண்டறிதல்கள் நிகழுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
கொசுறு:
படத்தில் இருக்கும் 15 வயது சிறுமியின் பெயர் கிளாரா மா (Clara Ma). செவ்வாய் சென்ற Curisoity ஊர்திக்குப் பெயர் சூட்டியவர் இவர் தான்!!
2009 ஆம் ஆண்டு நாசா நடத்திய பெயர் சூட்டல் போட்டியில் "Curiosity" என்கிற பெயரைப் பரிந்துரை செய்து பரிசைத் தட்டி சென்றவர்.
தற்போது செவ்வாயில் இருக்கும் கலனில் இவரது பெயரும், கையொப்பமும் பொறிக்கப்பட்டுள்ளன.
|
குசும்பு:
இடது பக்கம் இருப்பது சமீபத்தில் செம ஹிட்டடித்த "நான் ஈ" ..
வலது பக்கம் இருப்பது? செவ்வாய் குறித்த ஆய்வில் ஈடுபடும் நாசா விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வலர்களின் லோகோ (Mart-ஈ-an)!!
'ஈ' சாரி.. இவற்றை ஒப்பிட்டு உங்கள் மனதில் எதுவும் தோன்றினால், அடியேன் பொறுப்பல்ல :D
டிஸ்கி:
இன்னும் எழுத ஆசை தான். எனினும், பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன்.
பதிவு மிகவும் நீண்டு போனதாக கருதினால் மன்னிக்கவும்!
நன்றி:
- NASA - MSL Mission Page
- Mars Science Laboratory
- MSL Science Corner
- Curiosity Takes Us Back to Mars
- Why NASA's Mars Curiosity Rover landing will be "Seven Minutes of Absolute Terror"
- Mars Rover Landing 2012 - Curiosity Landing Information
- Mars Science Laboratory - Wikipedia
- பிளாகர் நண்பன் (பதிவின் துவக்கம்!)
செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த புதிய அப்டேட்:
![]() |
கேல் எரிமலைப்பள்ளத்தாக்கு (Gale Crater) |
![]() | ||
மவுண்ட் ஷார்ப் (Mount Sharp) [3.4 கிமீ உயரமான மலை] |
மேலும் பல படங்களைப் பெற தொடர்ந்து NASA - MSL Mission Page பக்கத்தில் இணைந்திருங்கள்!!
அறிவியல் என்றாலே ஒதுக்கி, மற்றப் பதிவுகளை படிக்கும் வழக்கம் உள்ளவர்கள் கூட இந்த பதிவைப் படிக்கும் விதத்தில் எளிமையாக எழுதியிருக்கிறீர்கள்..
பதிலளிநீக்குவானம் வசப்படுவதைப்போல, தங்களுக்கு அறிவியல் செய்திகள் அழகு தமிழில் வசப்பட்டிருக்கிறது.. வாழ்த்துகள் அன்பு நண்பரே..!
பதிவில் நாசா விஞ்ஞானிகள் உருவாக்கிய கியூரியோசிட்டி தரையுளவி முதல், அதற்குப் பெயர் வைத்த பெண், இறுதியாக செவ்வாயில் தரையிறக்கம் செய்து சாதித்த தருணங்கள் அனைத்து தகவல்களையும் தொய்வில்லாமல் எழுதி, பதிவை நிறைவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்..
கூடவே தாங்கள் ஒப்பிட்ட நான் ஈ படத்தையும் நாசா குழுவினரின் லோகோப் படத்தையும் காணும்போது எனக்கும் ஒரு எண்ணம் வந்து போனது. அதை இங்கே குறிப்பிடவில்லை..
தங்கள் வலைத்தளத்திலுள்ள பதிவுகள் அனைத்தும் ஆசிரியர் முதல் மாணவர்கள் வரைஅனைவருக்கும் பயன்படும் விதத்தில் உள்ளது.. தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை பதியுங்கள்.. நன்றி.. வாழ்த்துகள்..!
நன்றி நண்பரே!!
நீக்குதங்களைப் போன்றவர்களின் ஊக்கமே எனது ஆக்கத்தின் காரணம்!
அமர்க்களமான பகிர்வு...
பதிலளிநீக்குநண்பர் தங்கம் பழனி சொன்னது போல் விரிவான விளக்கம்...
படங்கள் எல்லாம் அருமை... குறிப்பாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொண்டது... (மனிதனின் சாதனை அல்லவா ?)
குசும்பு ரசித்தேன்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி (T.M. 3)
நன்றி நண்பரே!
நீக்கு////சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர் நாசா விஞ்ஞானிகள்.///
பதிலளிநீக்குஅப்போ, நாஸா விஞ்ஞானிகளுக்கே வழிகாட்டிய அப்துல் பாஸித்னு சொல்லுங்க...
அப்படித் தானே சொல்லியிருக்கேன்!
நீக்கு\\புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம்.\\ நீங்க இங்கே போட்டிருக்கும் படத்தைத் தவிர, Curiosity எடுத்த வேறெந்த படமோ, வீடியோவோ எங்கு தேடியும் கிடைக்கவில்லை, இருந்தால் தெரியப் படுத்துங்கள்.
பதிலளிநீக்கு\\விண்ணில் செலுத்தப்பட்ட MSL விண்கலன் செவ்வாயை நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தது. 24.8 கோடி கிமீ தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்தது.\\ இது பூமிக்கும், செவ்வாய்க்குமிடையேயான தற்போதைய shortest distance , உண்மையில் அது சூரியனைச் சுற்றிக் கொண்டு 50 கோடி கிலோமீட்டர்கள் பயணித்து செவ்வாயைச் சென்றடைந்ததாகச் சொல்கிறார்கள்.
\\Curiosity இரண்டு வருடங்கள் செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வுகளைத் தொடரும். \\ ஒரு சந்தேகம், இது மூன்று மைல் உயரமுள்ள மலையை பாதி உயரம் வரை சென்று ஆராயும் என்கிறார்கள். மலை எப்படி இருக்கும்னு நமக்கே தெரியும், அவ்வாறு செல்லும் போது ஒருவேளை இடறி வீல்கள் மேலே இருக்கும் படி மல்லாக்க கவிழ்ந்து [Turtle ] விட்டால் என்ன நடக்கும், திரும்ப பழைய நிலைக்கு எப்படி வரும்?
//24.8 கோடி கிமீ //
நீக்குதவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...
56.7 கோடி என மாற்றி விட்டேன்!
நண்பரே,
நீக்குதற்போது புதிதாய் இரண்டு படங்களைச் சேர்த்திருக்கிறேன். கியூரியோசிட்டி எடுக்கும் படங்கள் நாசாவினைச் சென்றடையும். அவர்கள் தணிக்கை செய்து வெளியிடும் படங்கள் மட்டுமே பொது மக்களின் பார்வைக்குக் கிடைக்கும்.
தொடர்ந்து அப்டேட் பெற NASA - MSL Mission Page இல் இணைந்திருங்கள்! (இணைப்பு பதிவில்)
//ஒருவேளை இடறி வீல்கள் மேலே இருக்கும் படி மல்லாக்க கவிழ்ந்து [Turtle ] விட்டால் என்ன நடக்கும், திரும்ப பழைய நிலைக்கு எப்படி வரும்?//
நீக்குஅவ்வாறு நடக்க வாய்ப்பு மிக குறைவு.
ரோவரின் ஒவ்வொரு சக்கரமும் தனித்தனி மோட்டார்களால் இயங்குகிறன. மேலும், முன் பக்கம், பின்பக்கம் என தனித்தனியே ஸ்டியரிங் உண்டு. இதன் மூலம் ரோவரால் 360 டிகிரியும் திரும்ப முடியும்.
அதுமட்டுமன்றி, ரோவருக்கு சமநிலை (Balance) அளிக்கும் பொருட்டு Differential கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், சக்கரங்கள் எந்த நிலையில் இருந்தாலும், ரோவர் சமநிலையில் இருக்கும்.
நீங்கள் சொல்வது போல் நடந்தால், முன்னால் உள்ள ஒரு சக்கரமோ, இரு சக்கரங்களோ தான் இடறும். இடறிய உடனேயே, ரோவர் அந்த நிலைக்கான சமநிலைக்கு வந்து விடும். எனவே, மல்லாக்க கவிழ வாய்ப்புகள் இல்லை.
நல்லப் பதிவு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா....
நீக்குஇந்த தகவல்களை இத்தனை எளிமையாக ஒரு ஆசிரியர் விளக்குவது போல அருமையாக தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு//தற்போது செவ்வாயில் இருக்கும் கலனில் இவரது பெயரும், கையொப்பமும் பொறிக்கப்பட்டுள்ளன.// "பெருமைப்படுத்தல்" என்பதற்கு சரியான உதாரனம்தானே!
அறிய பல தகவல்களை, அழகான எழுத்துநடையில், எளிமையாக தொகுத்தளித்திருப்பது மிக மிக அருமையான செயல் நண்பரே! பகிர்வுக்கு நன்றி நண்பரே!
நன்றி நண்பரே!
நீக்குஎல்லோரும் புரியும் வகையில் எழுதியிருந்தமைக்கு மிகவும் நன்றி நண்பரே......
பதிலளிநீக்குஎல்லோரும் புரியும் தமிழில் எழுதியமைக்குநன்றி நண்பரே...படிக்க படிக்க ஆச்சரியம்..................................
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குசூப்பர் பாஸ் நீங்க எவ்ளோ எழுதினாலும் நாங்க படிப்போம் தொடர் பதிவா போடுங்க தொடர வாழ்த்துக்கள்... நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குதற்போது எழுதும் "நம்பாதீங்க" தொடர் குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு அடுத்த தொடர் துவங்கலாம் என்று எண்ணியிருக்கிறேன்!
//அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர் நாசா விஞ்ஞானிகள்.//
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ்...
உங்களின் இந்த அருமையான பதிவில் என் மொக்கை பதிவை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே!
Curiosity பற்றி விளக்கமாக உள்ளது.
என்ன இருந்தாலும், எனது Starting Trouble க்கு தகுந்த கைகொடுத்தது பிளாகர் நண்பன் தான்!!
நீக்குசெவ்வாய் என்றதுமே உடனே உங்கள் பதிவின் ஞாபகம் தான் முதலில் வந்தது!
நன்றி நண்பா!
நீக்குஎளிமையான விளக்கம். நன்றி நண்பா.
பதிலளிநீக்குசெவ்வாய்ல தண்ணி இருக்கோ, காத்து இருக்கோ. பேஸ்புக் இருக்கான்னு கேட்டு சொல்லுங்க :-)
என்னது? செவ்வாயில் பேஸ்புக் இல்லையா?
நீக்குநம்ம அப்துல் பாஸித் அங்க இருந்து அப்டேட் பண்ணாரே.. நீங்க கவனிக்கலையா?
ஹிஹிஹிஹி....
நீக்குஅது பேக்புக் ;-))))
நீக்குGood one.
பதிலளிநீக்குஅறிவியல் தகவல் இப்படி ஆங்கிலத்தில் பகிரும் தளங்களை தான் பார்த்திருக்கிறேன் ..
பதிலளிநீக்குதமிழில் பகிர்ந்ததற்கு நன்றிகள்
நன்றி....
நீக்கு"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்போம்" என்ற பாரதியின் கனவை நனவாக்க ஆசை..
பார்ப்போம்!
இதைப படித்த உடன் என் மனதில் தோன்றியதை எழுதலாம் என முயன்ற போது எனக்கு முன் எழுதியவர்களின் பின்னுாட்டம் படித்தேன் என் மனதில் ஓடியதை அவர்கள் எழுதி விட்டார்கள்.ஆனால் உங்களது எழுத்து என்னை எதையாவது எழுதச்சொல்கிறது.ஆதலால் தயவுசெய்து எனக்கு நேரம் கொடுங்கள்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
SnR.DeVaDaSs
கருத்திற்கு நன்றி நண்பரே!!
நீக்குநண்பரே, இன்று “எனக்கு பிடித்த வலைப்பூ” என்ற தலைப்பில் நண்பர் தங்கம் பழனி அவர்கள் தங்களின் தளத்தை பற்றி பதிவிட்டுள்ளார். அதைப் படித்துவுடன் தங்களின் “இப்படிக்கு” படித்து அசந்துவிட்டேன். நண்பர் குறிப்பிட்டுள்ளப்படி எளியநடையில் தாங்கள் கூறும் அறிவியல் கருத்துக்கள் அனைத்தும் அருமையிலும் அருமை. எனக்கும் பிடித்த வலைப்பூக்களில் தங்களின் அவிழ்மடலும் ஒன்றாகும்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்குதொடர்ந்து இணைந்திருங்கள்!
இன்ஃபோக்ராபிக்ஸ்,தகவல்கள் எல்லாமெ சூப்பர்
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஅருமை அருமை தேவையான பதிவு. தெளிவான விளக்கம். நன்று.
பதிலளிநீக்குஇப்படித்தான் நண்பா கியுரியாசிட்டியின் பெருமைகளையும் நாசாவின் முயற்சிகளையும் வகுப்பில் விளக்கிவிட்டு... நாமும் தான் இருக்கிறோம்...
இன்னும் நிலாவில பாட்டி தோசை சுட்டிட்டு இருக்கு என்று சொல்லி குழந்தைகளுக்குச் சோறூட்டிக்கொண்டு என்று சொன்னேன்..
ஒரு மாணவருக்குக் கோபம் வந்துவிடடது..
ஐயா... பாட்டி நிலாவில் தோசை சுடல.. வடைதான் சுட்டிட்டு இருக்காங்க என்று..
நான் சொன்னேன் எத்தனை வருடமா அந்தப் பாட்டி வடையே சாப்பிட்டு இருப்பாங்க.. ஒரு மாற்றத்துக்கு அவங்களும் கொஞ்ச நாளைக்கு தோசை சாப்பிட்டக்கூடாதா என்று கேட்டேன்..
மிகவும் பயனுள்ள பதிவு நண்பா.
கருத்திற்கு நன்றி ஐயா!
நீக்குவான் பளு தூக்கி, மற்றும் சங்கரங்களினுடான தரையிறக்கம் நாசாவின் புதிய முயற்சி மற்றும் புதிய வளர்ச்சி. அருமையாக பட விளக்கத்துடன் கூடிய பதிவாக்கம் பாராட்டுகள். இந்திய வம்சாவளி இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பும் இதில் உள்ளது கவனிக்கத்தக்கது.
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி நண்பரே!
நீக்குகலாகுமரன் சார் எதையும் கவனிச்சு வாசிப்பார் போலிருக்கே! :)
நீக்குவிரிவான பதிவு! நன்றி!
பதிலளிநீக்குகருத்திட்ட அனைவருக்கும் நன்றி!
பதிலளிநீக்குநன்றி! அருமையாக பட விளக்கத்துடன் கூடிய பதிவாக்கம்..
பதிலளிநீக்கு