வேலன் அந்த சாலையைக் கடக்க முயற்சித்த போது ...... அவன் செல்போன் ஒலித்தது .. சாலையைக் கடந்து கொண்டே எடுத்து "ஹலோ " என்றான். அப்போது ..... அவன் எதிரே புயல் வேகத்தில் ஒரு ஆட்டோ ! கிட்டத்தட்ட அவனை உரசிக் கொண்டு சென்றது ... "மவனே வீட்ல சொல்லிட்டு வந்தியா?" ஆட்டோ காரன் கத்திக்கொண்டே சென்றான் எதிரில் காவல் துறை வாசகம் : "சாலையைக் கடக்கும் போது செல்போனில் பேசாதே ..கூப்பிடுவது 'எமன்' ஆக இருக்கலாம் " செல்போன் எதிர் முனையில் இருந்து வந்த குரல் : "ச்ச ... ஜஸ்ட்ல மிஸ் ஆயிட்டான் " வேலன் உறைந்து நின்றான்!! பி.கு: இது இணையத்தில் நான் முதன் முதலாக (வேறொரு தளத்தில்) எழுதிய குறுங்கதை.. சில மாற்றங்களுடன் மீண்டும்!
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ