முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தனித் திரளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!

நண்பர்களே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகிள் பிளாக்கர் செய்த ஒரு காரியம் பலருக்குப் பெரும் இடியாய் விழுந்தது. blogspot.com என்கிற டொமைன்-ஐ அந்தந்த நாட்டின் தனி டொமைன்களாக மாற்றி விட்டது (இந்தியாவில் blogspot.in). இந்த மாற்றத்தை எவ்வித மின்னறிவிப்பும் இன்றி செய்து முடிந்தது பிளாக்கர். இதனால், பல பதிவர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர். பதிவுகளில் பார்வைகளை அளக்கும் அளவீடுகள் (அலெக்ஸா, அனலிடிக்ஸ்) அனைத்திலும் பலரும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். திரட்டிகளில் பதிவுகளை இணைக்கவும் படாத பாடு பட வேண்டி இருந்தது. தனி டொமைன் வைத்திருந்த அன்பர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை! இன்னும் சில நாட்களில் பிளாக்கரில் இல்லாத பதிவுகளுக்கு Google Friend Connect கிடைக்காது என்று கூகிள் அறிவித்துள்ளது. பிளாக்கருக்கான Friend Connect வசதியினையும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தும் சூழ்நிலை உள்ளது. இன்னும் சிறிது நாட்களில் பிளாக்கரையே மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிளாக்கரில் எந்த மாற்றம் வந்தாலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு சிறந்த வழிகளுள் ஒன்று நம் வலைப்பூவினைப் பிளாக்கர் அல்லாத டொமைனில் ...