முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அலைபேசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அணுத் தமிழ்

“பழையன கழிதலும் புதியன புகுதலும்  வழுவல கால வகையினானே”                                                                - நன்னூல் மொழிகளின் தொன்மைக்குச் சான்றே அவற்றின் பழம்பெரும் இலக்கியங்ளே . எனவே , அவற்றிற்கு " பழையன கழிதல் " என்பது பொருந்தா . ஆனால் , மொழிகளின் உய்விற்கு புதியன புகுதல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் . பண்டைய மொழிகளின் தற்கால நிலை : ஆசியா , ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே அறியப்பெற்றிருந்த காலங்களில் உலகில் கோலோச்சிய பண்டைய மொழிகள் ஆறு என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகிறனர் . அவை தமிழ் , சமஸ்கிருதம் , சீனம் , கிரேக்கம் , இலத்தீன் மற்றும் எபிரேயம் (ஹீப்ரு) ஆகியன .   இவற்றில் , இலத்தீன் மொழி சமஸ்கிருதமும் வழக்கொழிந்து போய் பிரார்த்தனைக்கு மட்டுமே பயன்படுகிறன . கிரேக்கமும்...

அலைபேசியின் தயாரிப்பு இடம் தெரியணுமா? (நம்பாதீங்க- பகுதி 4)

இன்று அலைபேசி (Cellphone) பயன்படுத்தாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். எந்த ஒரு பொருளைப் போலவும், அலைபேசியிலும் தரம் மிக முக்கியம். ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு நாட்டுக் கிளைகளில் தயாரிக்கப்படும் அலைபேசிகளின் தரத்தில் வேறுபாடு இருக்குமா ? நமது அலைபேசி எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டறிய எதுவும் வழி உண்டா ? அதன் மூலம் தரத்தை அறிய முடியுமா?                                        நம்பாதீங்க - பகுதி 4 அலைபேசியின் தயாரிப்பைப் பற்றி அறிய வழிசொல்லும் இந்த செய்தியைப் பலரும்  மின்னஞ்சல் வடிவிலோ, குறுஞ்செய்தி வழியாகவோ பெற்று இருக்க வாய்ப்பு உண்டு (தமிழாக்கம்): உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் ச...

பயணச்சீட்டால் பயங்கர பல்பு வாங்கிய பிரபல பதிவர்

இது ஒரு உண்மைச் சம்பவம்.. மின்னணு ரயில் பயணச்சீட்டைப் பயன்படுத்த நினைத்து ஏமாந்த பதிவரின் கதை!! 22 ஜனவரி 2012                       அலுவல் நிமித்தமாக பல நாட்கள் வெளியூரில் தங்க வேண்டிய சூழல். ஒரு வழியாய் வேலை முடிந்து திரும்ப தயாரானேன். "ரயில் டிக்கெட் பிரிண்ட் எடுத்தாச்சா?" என்று ஒரு சகா கேட்டார். "நீங்க எந்த காலத்தில் சார் இருக்கீங்க? இப்ப ரயில்ல போக டிக்கெட் எல்லாம் தேவை இல்லை. உங்க அலைபேசியிலோ, இல்லை மடிக்கணிணியிலோ டிக்கெட் ஸாப்ட் காப்பியைக் காட்டினால் போதும்" என்றேன். "இருந்தாலும்.. ஒரு பாதுகாப்பிற்கு!!! " "உங்களைப் போன்ற ஆட்களால் தான் சார் நாட்டில் மரங்களோட எண்ணிக்கை குறையுது" என்றேன்.          அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை. பின்னே,இதற்கு மேல் யாராவது பேசுவார்களா?          புறநகர் ரயிலில் ஏறி சில நிமிடங்கள் கழித்து தான் முதல் சந்தேகமே வந்தது.  "நாம பாட்டுக்கு வந்துட்டோம். கொஞ்சம் ஊர்...

அணைக்காமல் அணையுங்கள்!!!

நான் சொல்லப்போகும் செய்தி பலருக்குத் தெரிந்திருக்கலாம்... தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்திலேயே பதிவிடுகிறேன்!!  நீங்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பல இடங்களில் கீழ்காணும் சொற்தொடரைக் காணலாம்: பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாடுத் தளங்கள், தன்னியக்க வங்கி இயந்திரம், எரிபொருள் கிடங்குகள், எனப் பல இடங்களில் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்லி வற்புறுத்தும் வாசகங்கள் இருக்கும்!!! நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டி வந்தால், கண்டிப்பாக உங்கள் அலைபேசியை அணைக்க சொல்வார்கள்!!! ஏன் அவர்கள் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.... அலைபேசியில் பேசுவது பிறருக்கு இடையூராக இருக்கலாம் அலைபேசியின் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அங்கே உள்ள மின்னணு சாதனங்கள் சரி வர இயங்காமல் போகலாம்.. பிறருக்கு இடையூறாக இருக்கும் என்றால் அலைபேசியை அமைதி முறையில் வைப்போம் (Silent) அமைதி முறையில் அலைபேசி இருக்கும் போது, அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்தால் ஒலி மூலம் அறிவிப்பதற்கு பதிலாக...