முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வலைப்பூ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா - 50 வது பதிவு

அன்பு நண்பர்களே, எனது பிறந்த நாளான 13 ஜூலை 2011 அன்று இந்த வலைப்பூவினைத் துவங்கினேன்.  ஏதோ ஓர் ஆர்வத்தில் துவங்கிய எனது வலைப்பூவில் இதோ எனது ஐம்பதாம் பதிவினை (50*) எழுதும் பொன்னான தருணம் வந்துவிட்டது.  எனது பணிசூழல் காரணமாகவும், தமிழக மின்சூழல் காரணமாகவும் அடிக்கடி  பதிவு எழுதுவதற்கு விடுப்பு எடுக்க வேண்டி வந்தது. எப்போதாவது எழுதும் எனக்கு பல பதிவர்கள் ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தனர். வலைப்பூக்களைத் தொடுத்து உருவாக்கப்பட்ட வலைச்சரத்தில் எனது மூன்று பதிவுகள்  இடம்பெற்றுள்ளன. கடவுளே!   - அறிமுகம் செய்தவர்: சகோதரி ' குட்டி சுவர்க்கம்' ஆமினா [ வித்தியாசமாய் ] பயணச்சீட்டால் பயங்கர பல்பு வாங்கிய பிரபல பதிவர்   - அறிமுகம் செய்தவர்: நண்பர் வீடு சுரேஷ்  குமார் [ பதிவுலகில் விழிப்புணர்வு! ] வண்ணங்களும் பெண்களும்   - அறிமுகம் செய்தவர்: கீதமஞ்சரி அக்கா [ ஆசை அன்பு இழைகளினாலே... ]  எனது தானியக்க வங்கி இயந்திரத்தில் திருடர்களை தவிர்ப்பது எப்படி? பதிவினைப் பாராட்டி நண்பர் ' வீடு சுரேஷ்  குமார் ' அவர்கள் எனக்கு லிப்ஸ்டர் பிளாக் (L...

இயக்கக் காட்சிகள்- புதுப்பொலிவுடன் உபகரண வசதியுடன் (Dynamic Views with Gadgets)!!

பிளாக்கரில் இயக்கக் காட்சி முறை (Dynamic Views)என்ற புதிய காட்சி முறை இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த முறையை செப்டம்பர் 2011 இல் பிளாக்கர் அறிமுகப்படுத்தியது. இந்த காட்சி முறை பலரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், பதிவர்கள் அதனைத் தங்கள் வலைப்பூவில் பயன்படுத்த தொடர்ந்து தயங்கி வந்தனர். அதன் காரணம்   உபகரணங்களை (Gadgets) சேர்க்க முடியாது. Javascript நிரல்கள் வேலை செய்யவில்லை பக்கப் பட்டி (Side bar) காணாமல் போனது. ஒரு வழியாக, பல மாதங்களுக்குப் பிறகு, பிளாக்கர் தான் வழங்கும் சில உபகரணங்களுக்கு (Gadget) மட்டும் இயக்கக் காட்சியில் இடம் அளித்துள்ளது.  அதற்காக ஒரு மறைநிலை பட்டியை உருவாக்கியுள்ளது. இயக்கக்காட்சி வைத்தவுடன் வலது ஓரத்தில் ஒரு கருப்பு பட்டி தெரிவதைக் காணலாம். அதன் அருகில் சுட்டியைக் (mouse) கொண்டு சென்றால், பட்டி விரியும். இயக்கக்காட்சி ஆதரவு பெற்ற அந்த கெட்ஜெட்கள் இதோ: Profile: நம்மைப் பற்றிய அறிமுகம் கொடுக்கும் விட்ஜெட். Blog Archive: நமது அனைத்து பதிவுகளையும் ஒரு காப்பகத்தில் சேர்த்து காட்டும் உபகரணம்   Labels...

அவிழ்மடல் பெறும் முதல் விருது - லிபெஸ்டர் பிளாக் (Liebester Blog) - நண்பர்களுக்கு நன்றி!

அன்பு நண்பர்களே, ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல். என்பது வள்ளுவர் வாக்கு .    ( உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை) ஒரு ஆர்வத்தில் வலைப்பூ ஆரம்பித்து, பல நாட்கள் கழித்து நண்பர்கள் சிலர் கொடுத்த ஊக்கத்தால் பதிவுகள் எழுதத் துவங்கினேன். எனது முதல் சில பதிவுகளுக்கு என் நண்பர்கள் மட்டுமே வாசகர்கள். அதன் பின் வந்த வாசகர்களும் என் நண்பர்கள் ஆனார்கள். நண்பர் ' வீடு சுரேஷ் ' அவர்கள் எனக்கு லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) என்கிற விருதினை அளித்துள்ளார். இந்த விருதினை அவர்  விருதுகள் எனும் ஊக்கமருந்து!   என்கிற  பதிவின் மூலம்  அளித்துள்ளார். விருதிற்குக் காரணமான பதிவு:   தானியக்க வங்கி இயந்திரத்தில் திருடர்களை தவிர்ப்பது எப்படி? வலையில் எழுதத் துவங்கிய பின், எனக்கு கிடைத்த முதல் விருது இது தான்.  எனது பதிவுகளை அங்கீகரித்து எனக்கு இந்த விருதினை வழங்கிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள். < லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog)  ...

பதிவுகளில் திரட்டிகளை அழகாய் அடுக்குவோம்!!

வலைப்பூக்களில் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகள் ஒழுங்கு இல்லாமல் இருக்கா? அவற்றை அழகாய் அடுக்குவோம்!     பதிவர்கள் எழுதும் பதிவுகளைப் பிற பதிவர்களிடமும், வாசகர்களிடமும் கொண்டு சேர்ப்பதில் பெரும் துணை புரிவன திரட்டிகள். தங்கள் பதிவுகளைப் பல தளங்களிலும் பரப்ப ஏதுவாக பதிவர்கள் பலரும் தங்கள் பதிவுகளில் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை வைப்பது வழக்கம்..     பெரும்பாலும் நாம் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை நிரலாக மட்டுமே இணைப்பதால் , அவை ஒரே வரிசையில்  அமர்வது இல்லை.  அவை ஒரே வரிசையில் அமர்ந்தால் எவ்வளவு அழகாய் இருக்கும்? இதைப் பற்றி ஏற்கனவே சில பதிவர்கள் எழுதி இருக்கிறார்கள். எனினும், அந்த நிரலில் சிறு மாற்றம் செய்து அனைவருக்கும் பயன்படி இதை எழுதுகிறேன்.     1. முதலில் உங்கள் டெம்பிளேட்டை  ஒரு காப்புப்படி (Backup) எடுத்துக்கொள்ளவும்.  பழைய பிளாகர்  இடைமுகம் எனில், Blogger-->Design-->Edit HTML செல்லவும். அங்கிருக்கும் "Download Full Template " ஐச் சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளவும் புதிய பிளாகர்  இடைமுகம் எனில்...