11 டிசம்பர் 2011 சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும் அளவு தகுதி எனக்கில்லை. எனவே , அவரது கவிதை ஒன்றையே இங்கு பதிந்து அவரை நினைவு கூறுவோம்!! பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது. சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை அழகாக பாடியுள்ளார் என்று பாருங்கள்.... // வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால் மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம் // மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது??? ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது? பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார் சரணங்கள் 1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் ...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ