முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மரபுத்திரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வண்ணங்களும் பெண்களும்

மூன்று நிறமிகளின் துணை கொண்டே வண்ணங்களின் கலவையான உலகினை நம் கண்கள் காட்டுகிறன. வண்ணங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு நிகர் அவர்களே தான். அவர்கள் அணியும் உடைகளும், அணிகளுமே அதற்குச் சான்று. எப்படி பெண்களால் மட்டும் மிகவும் ஒரே வண்ணத்தின் இருவேறு சாயல்களை மிகவும் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது? இங்குப் பார்ப்போம்!! "எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்" "உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை. இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்?" "நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் Magenta வா இருந்தா நல்லா இருந்திருக்கும்" என்னங்க? உங்க வீட்டிலும் இப்படி கலர் தொடர்பான போராட்டங்கள் நடக்குதா? வண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது அல்லல்படுகிறார்கள்! வண்ணங்களைப் பற்றிய ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்கலும் எப்படி பார்க்கிறார்கள் என்று...