முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாழ்த்துகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாசற்ற தீபாவளி கொண்டாடுவோம்

தீப ஒளித் திருநாள்.. பண்டைய காலத்தில் தீபங்களின் மூலம் ஒளியை வரவேற்ற நாள் இது. எனவே தான் "தீப ஒளி" என்று கொண்டாடத் துவங்கிய பண்டிகை இன்று தீபாவளி என்று மருவிக்கிடக்கிறது (அசுரனை அழித்த பண்டிகை என்பதில் எனக்கு உடன்பாடில்லை!) எந்த ஒரு நடைமுறை என்றாலும், சமகால மனிதருக்கும், வருங்காலச் சந்ததியினருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்றால், அந்நடைமுறைகளை மாற்றுவதில் தவறில்லை  அல்லவா!! பண்டிகைகள் என்றாலே புத்தாடை அணிந்து பலகாரம் உண்டு பிறருடனும் பகிர்ந்து மகிழ வேண்டிய நாளன்றோ!! தீப ஒளித்திருநாள் அன்றோ பலரும் பட்டாசுகளைக் கொளுத்தியும் நம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் தீங்கினை யாரும் யோசிப்பதில்லை.. பட்டாசுகள் தீபாவளி அன்று மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், அவற்றால் பின்னாளில் பல கேடுகள் காத்து இருக்கிறன. பட்டாசில் கந்தகம், நைட்ரேட் போன்றவற்றுடன் காப்பர், மெர்க்குரி, அமோனியம் போன்ற உலோகங்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் சுவாசம் தொடர்புடைய பல நோய்கள் ஏற்படுகிறன. பட்டாசு வெடிக்கையில் திடீரெனக் கேட்கும் அதீத ஒலி, கேட்கும் திற...