வணக்கம் நண்பர்களே, திருமண தேவதையான ஜூனோவின் பெயர் கொண்ட இந்த ஜூன் மாதத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஜூன் 2012 ஐப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கு.. தெரியுமா? ஒரே மாதத்தில் 5 வெள்ளி, 5 சனி, 5 ஞாயிறு வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அரிய சிறப்பைப் பெற்றது ஜூன் 2012 !! சந்தேகம் என்றால் நீங்களே காலண்டரைப் பாருங்க! இந்த அரிய நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள். சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் ! என்னங்க? நிச்சயமா இது ஜூன் ஸ்பெ ஷல் தானே? கொஞ்சம் இருங்க!!மேலே இருப்பது சுத்த அக்மார்க் பொய்!! உண்மை: இந்த செய்தியை மின்னஞ்சலில் பார்த்து எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியாது!! முதலில், ஜூன் மாதத்தில் 30 நாட்கள் தான். இது நடக்க சாத்தியம் இல்லை. மே ம...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ