முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாழ்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

பயணச்சீட்டால் பயங்கர பல்பு வாங்கிய பிரபல பதிவர்

இது ஒரு உண்மைச் சம்பவம்.. மின்னணு ரயில் பயணச்சீட்டைப் பயன்படுத்த நினைத்து ஏமாந்த பதிவரின் கதை!! 22 ஜனவரி 2012                       அலுவல் நிமித்தமாக பல நாட்கள் வெளியூரில் தங்க வேண்டிய சூழல். ஒரு வழியாய் வேலை முடிந்து திரும்ப தயாரானேன். "ரயில் டிக்கெட் பிரிண்ட் எடுத்தாச்சா?" என்று ஒரு சகா கேட்டார். "நீங்க எந்த காலத்தில் சார் இருக்கீங்க? இப்ப ரயில்ல போக டிக்கெட் எல்லாம் தேவை இல்லை. உங்க அலைபேசியிலோ, இல்லை மடிக்கணிணியிலோ டிக்கெட் ஸாப்ட் காப்பியைக் காட்டினால் போதும்" என்றேன். "இருந்தாலும்.. ஒரு பாதுகாப்பிற்கு!!! " "உங்களைப் போன்ற ஆட்களால் தான் சார் நாட்டில் மரங்களோட எண்ணிக்கை குறையுது" என்றேன்.          அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை. பின்னே,இதற்கு மேல் யாராவது பேசுவார்களா?          புறநகர் ரயிலில் ஏறி சில நிமிடங்கள் கழித்து தான் முதல் சந்தேகமே வந்தது.  "நாம பாட்டுக்கு வந்துட்டோம். கொஞ்சம் ஊர்...

தம்பிக்கு எந்த ஊரு?

நான் எனது பணியில் சேர்ந்த புதிது!!! அன்று ஏதோ பணி காரணமாக வேறொரு புதிய களத்திற்கு (அப்போது)செல்ல நேர்ந்தது!! புதிய களம்.. நான் உள்ளே நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அறியாமல் மிரள மிரள விழித்து கொண்டு இருந்தேன்.. என்னை நோக்கி ஒருவர் வந்தார்.. "தம்பி.. இங்க எல்லாம் அனுமதி (Permission) இல்லாம வர கூடாது! நீங்க யார்?" என்று கேட்டார்.. நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. நான் வந்த நோக்கத்தையும் கூறினேன். அவர் "அப்படியா!! சார் மேனேஜரைப் பார்க்க போய் இருக்கார். கொஞ்ச நேரத்தில வந்து விடுவார்" என்றார்..  சிறிது நேர மெளனத்திற்குப் பின், அவர் என்னைப் பார்த்து "உங்களுக்கு எந்த ஊரு?" என்று கேட்டார்... நான் புதியவன் என்பதால், பலரும் என்னைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.. நான் "திருச்சி" என்று பதிலளித்தேன்.   அவர் உடனே கேட்டார்: "அப்படியா!!! திருச்சியில் எங்கே?" "வயலூர் பக்கம்"  "அடடே!! அங்க எங்கே?" எனக்கு உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது... ! பார்க்க திருச்சிக்காரர் போல் தெரியாவிட்ட...

பயணங்கள் முடிவதில்லை

வாழ்க்கை எனும் ஓடம் தன் பயணத்தைத் தொடர்ந்த படியே உள்ளது. பயணம் செய்பவர்களைப் பற்றி என்றும் கவலைப்படுவதில்லை!! பயணத்தின் வழிகளில் மென்மையான அலைகளின் தீண்டலும் உண்டு; அதே சமயம், மிகவும் ஆபத்தான புயல்களும் உண்டு. ஓடத்தில் இருப்பவர்கள் அவற்றால் பல்வேறு மனநிலைகளில் இருக்கலாம்.. ஆனால், ஓடம் அவை அனைத்தையும் கடந்து செல்கிறது. அவற்றைக் கடந்த சுவடுகளே சில சமயம் தெரிவதில்லை! இந்த பயணத்தின் போது இனிய இன்பங்களும், கொடிய துன்பங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும், மறக்கக் கூடாத அனுபவங்களும் அனைவருக்கும் ஏற்படுகிறன. ஆனால், ஓடமோ அவற்றை சிறிதும் லட்சியம் செய்யாமல், தன் வழியில் சென்று கொண்டே இருக்கிறது.. சுற்றி நிகழும் நிகழ்வுகளின் தாக்கம் சற்று இருந்தாலும், வாழ்க்கை ஓடம் அவற்றால் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. தன் இலக்கை நோக்கிய அதன் பயணமும் முடிவதில்லை. அதன் இலக்கை அறிந்து கொள்ள முயல்வது கடினம். அறிய முற்பட்டவர்கள் அறிய முடிந்தது இல்லை. அறிந்தவர்கள் யாரும் நம்மிடையே இல்லை. இலக்கின் தன்மையைப் பற்றி விவாதிப்பவர்கள் தான் உண்டு. ஆனால், வாழ்க்கை எனும் ஓடம் விவாதங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதன...