முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படிக்காத மேதை

படிக்காத மேதை அவர் படிக்கட்டாய் நின்று பலரைப் படித்திட வைத்தவர் கல்விக் கண் திறக்க பள்ளித் திட்டம் தீட்டிட அள்ளித் தெளித்தவர்! பசியோடு பள்ளி வந்தவர்கள் புசித்து படித்திட செய்து ரசிக்க செய்தவர் முதல்வனாய் ஆண்ட போதும் முதல்வானாய் பதவியிலே இருக்காமல் முதல்வனாய் விலகியவர். தாயே ஆனாலும் சரிதான் வாய் மாறாது - அரசின் பாய் கிடையாது! அவர் தான் கர்மவீரர் காமராஜர்

சிரிக்கும் காந்தி

அத்தனை முகங்களையும் பார்த்து அழகாய் சிரிக்கிறார் காந்தி அகிம்சை வழியில் சுதந்திரம் அதனை விற்கும் தந்திரம் அமைதியின் பெயரில் போர் அதற்கு ஆய்தம் விற்போர் கருப்பு வெள்ளையென பணம் பெற்றும் மகிழவில்லை மனம் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை இருப்பினும் தேடல்கள் முடியவில்லை! பி.கு:  இதனை கவிதை என்கிற பெயரில் வெளியிடுகிறேன். "இது ஒரு கவிதையா" என்பது போல் இருந்தால் மன்னிக்கவும்!!

கடவுள்

 கடவுளைத் தொழுதபின் செதுக்கினான் சிற்பி            கடவுள் இல்லை இல்லவே இல்லை 

மாணவர்களின் பெற்றோருக்கு..

நண்பர்களுடன் ஒன்றாய் அமர்ந்து அரட்டையும் கும்மாளமும் கலந்து நம் அணிக்குக் கைத்தட்டி எதிர் அணிக்கு நகைத்தட்டி ஒவ்வொரு பந்தாய் விவாதிப்பதற்கு மாணவப் பருவம் தவிர்த்து வேறுபருவம் உலகினில் உண்டோ? அதைத் தடுத்தல் நன்றோ? ஆட்டக் காட்சியை பார்க்கவிடில் விவாதிக்கும் பொருள் எதில்? சிறு வாதங்களைத் தடைசெய்வதாலே குழுவிவாதத்தில் பலர் தோற்பதே!! மாணவனாய் இருந்தது விடவே நல்மாதவம் செய்து இடனுமே. மாணவப் பருவம் முடித்து பசிக்கு வேலை எடுத்து தனக்கென வாழ்க்கை அமைத்து பருவம் முற்றி காய்த்து வேலைப் பளுவில் மூழ்கியபின் மட்டை பந்தைத் தான் அதைப் பார்க்கத் தான் நமக்கு நேரம் ஏது? மாணவப் பருவ ஆர்வங்கள் பிறிதொரு நாளில் என்றேனும் கிட்டுமா? மாணவப் பருவ இன்பங்கள் அன்றே நுகரும் பண்டங்கள் பிறிதோரு நாளில் எட்டா.. என்றும் எளிதில் கிட்டா பருவத்திலே பயிர் செய்வோம்.. அப்போதே அறுவடையும் செய்வோம்.. அனைவரும் இதைச் சிந்தியுங்கள் உலகத்தை ஒன்றாய் சந்தியுங்கள் -இப்படிக்கு  மாணவப் பருவத்தைப் படிப்பிலேயே தொலைத்த பின் மீண்டும் கிட்டாதா என்று ஏங்குபவரில் ஒருவன்..

திறப்பு விழா

நகைக்கடை  திறப்பு விழா திறந்து வைக்க  நடிகை அலைக் கடலென கூட்டம் கூட்டத்தின் கூவல் கண் கடைத் திறப்பா நடிகையின் கடைக் கண் திறப்பா