பிளாக்கரில் இயக்கக் காட்சி முறை (Dynamic Views)என்ற புதிய காட்சி முறை இருப்பதை அனைவரும் அறிவோம்.
இந்த முறையை செப்டம்பர் 2011 இல் பிளாக்கர் அறிமுகப்படுத்தியது. இந்த காட்சி முறை பலரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், பதிவர்கள் அதனைத் தங்கள் வலைப்பூவில் பயன்படுத்த தொடர்ந்து தயங்கி வந்தனர். அதன் காரணம்
- உபகரணங்களை (Gadgets) சேர்க்க முடியாது.
- Javascript நிரல்கள் வேலை செய்யவில்லை
- பக்கப் பட்டி (Side bar) காணாமல் போனது.
ஒரு வழியாக, பல மாதங்களுக்குப் பிறகு, பிளாக்கர் தான் வழங்கும் சில உபகரணங்களுக்கு (Gadget) மட்டும் இயக்கக் காட்சியில் இடம் அளித்துள்ளது.
அதற்காக ஒரு மறைநிலை பட்டியை உருவாக்கியுள்ளது.
இயக்கக்காட்சி வைத்தவுடன் வலது ஓரத்தில் ஒரு கருப்பு பட்டி தெரிவதைக் காணலாம். அதன் அருகில் சுட்டியைக் (mouse) கொண்டு சென்றால், பட்டி விரியும்.
இயக்கக்காட்சி ஆதரவு பெற்ற அந்த கெட்ஜெட்கள் இதோ:
- Profile: நம்மைப் பற்றிய அறிமுகம் கொடுக்கும் விட்ஜெட்.
- Blog Archive: நமது அனைத்து பதிவுகளையும் ஒரு காப்பகத்தில் சேர்த்து காட்டும் உபகரணம்
- Labels: வலைப்ப்பூவில் உள்ள அனைத்து குறிசொற்களையும் (Keywords) தொகுத்து காட்டும் உபகரணம்
- LinkList: பிற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க பயன்படும் உபகரணம்
- மற்றும் மிக முக்கியமான இரண்டு தேவைகள்:
- Followers: நமது தளத்தின் பதிவுகளைப் பின்பற்ற உதவும் உபகரணம். (பலரும் முன்பு கண்ட தளங்களின் அடுத்த பதிவுகளைப் படிக்க உதவுவது இந்த கலன் தான்)
- Subscribe: தளத்தின் பதிவுகளை ஓடை (RSS Feed) மூலம் பெறவும், கூகிள் ரீடரில் படிக்கவும், மின்னஞ்சல் மூலம் பெறவும் வழிவகை செய்யும் கலன். முன்பு தனித்தனியே இருந்தவற்றை ஒன்றாக சேர்த்து வழங்கப்பட்டுள்ளது
இதன் மூலம் பெரும்பாலான பதிவர்களின் எதிர்பார்ர்பு பூர்த்தி அடைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால், இத்துடன் அனைத்து தேவைகளும் நிறைவடையவில்லை..
- முகநூல் (Facebook) மற்றும் கூகிள் பிளஸ் (G+) மூலம் தொடர பட்டியிலேயே வழி வேண்டும் [ தற்போது அதற்கென தனியே பக்கம் அமைத்து தொடரலாம்]
- குறைந்த பட்சம் இரண்டு விட்ஜெட்டாவது (பிற) இணைக்க வழிவகை செய்ய வேண்டும்
- Javascript வேலை செய்யாததால் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை நிறுவ முடியவில்லை. இதற்கு வேறு ஏதேனும் வழி செய்ய வேண்டும்
இவற்றை எல்லாம் செய்து முடித்தால் இயக்கக் காட்சி முறை பெரிய வெற்றியினைப் பெறும்.
மாற்றங்கள் செய்வதில் வல்லவர்கள் கூகிள் பிளாக்கர் குழுவினர். மாற்றங்களை விரைவில் செயல்படுத்துவர் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்!
குறிப்பு:
பழைய வார்ப்புருவில் (Template) மேற்கூறப்பட்ட உபகரணங்கள் இருந்தால் மட்டுமே அவை இயக்கக்காட்சியில் தெரியும். தேவையானவற்றைச் சேர்த்த பின் முயற்சிக்கவும்!
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
![]() | ![]() | ![]() | ![]() |
மடல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்
தேவையான தகவல் நண்பா.
பதிலளிநீக்குநண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
பதிலளிநீக்குநன்றி
யாழ் மஞ்சு
தங்களின் பதிவிற்கு நன்றி. ஆனால் என்னால் என் வலைப்பூவின் தோற்றப் பொலிவினை சாதாரண நிலையில் வைத்துக் கொண்டிருந்தாலும் சரி, டைனமிக் பொலிவில் வைத்திருந்தாலும் சரி, என்னால் பின் தொடர்பவர்கள் பட்டியலை இணைக்க முடியவில்லையே!
பதிலளிநீக்குஇதோ பிழைச்செய்தி: Followers
Experimental
Displays a list of users who follow your blog.
This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!
By Blogger
என் வலைப்பூ: http://sivahari.blogspot.com/
உங்கள் வலைப்பூவின் மொழி ஆங்கிலமாக இருந்தால் மட்டுமே அது வேலை செய்யும் அன்பரே!
நீக்குஅதற்கு ஈடாக மாற்று வழியிலே பின் தொடரும் உறவுகள் என்ற தலைப்போடே ஒன்று இணைத்திருக்கின்றேன். பாருங்களேன்!
பதிலளிநீக்குhttp://sivahari.blogspot.com/
நன்றி
தற்போது தான் பார்த்தேன்...
நீக்குநன்றால இருக்கிறது! நன்றி!
அருமையான பதிவு.
பதிலளிநீக்கு