முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தொலைக்காட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதிகையின் எதிரொலி

06 மே 2012 சாப்பிடும் போது மட்டுமே தொலைக்காட்சி சேனல்களை நோண்டும் பழக்கம் உடையவன் நான். (மீதி நேரத்தில் தொலைக்காட்சியில் வீட்டிலுள்ளவர்கள் ராஜ்ஜியம் தான் என்பதால், அங்கு அமர்வதே இல்லை) ஞாயிறு அன்று இரவு சன் டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" என்று ஓடிக்கொண்டிருந்தது. 'வர வர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே சூதாட்டம் போல் ஆகி விட்டன' என்று சொல்லிக் கொண்டே ரிமோட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தேன். அப்போது தான் "பொதிகை தொலைக்காட்சி" வந்தது. முன்பு DD5 ஆக இருந்த காலத்தில், தொலைக்காட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்று வாசகர்களிடம் ஆலோசனை கேட்டு, வாக்கெடுப்பு நடத்தி 'பொதிகை' என்ற அழகான பெயரைத் தொலைக்காட்சிக்கு சூட்டினர் நிலையத்தார். கேபிள் டிவி வருவதற்கு முன் அரசனாக கோலோச்சிய பொதிகையைத் தற்போது பார்ப்பவர்கள் அரிது. இந்த பதிவினை எழுதத் தூண்டியதே அவர்கள் தொன்று தொட்டு செய்து வரும் ஒரு செயல் தான். அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா? தங்களுக்கு நேயர்கள் எழுதிய கடிதங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் பெயர் "...