சாதனைகள் செய்வது அளப்பரிய செயல். சாதனையாளர்கள் மேல் எழும் குற்றச்சாட்டை மறுக்கும் போது, புள்ளிவிவரங்கள் மூலமே பலரும் மறுப்பர். ஆனால், அந்த விவரங்களில் சில தவறுகள் இருக்க வாய்ப்பு உண்டு.
இந்த வார ஆனந்த விகடனில் (மார்ச் 28, 2012) வந்த செய்தியும் அது போலத் தான். சச்சினைப் புகழ்ந்து "இனி, இரண்டாவது இன்னிங்ஸ்!" என்கிற கட்டுரை வெளிவந்துள்ளது.
2004 இல் ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் சச்சினை சுழல்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் அவுட் ஆக்கி விட்டார், போட்டி முடிந்ததும் சச்சினின் விக்கெட்டைப் பறித்த அந்தப் பந்தைக் கொண்டு வந்து அவரிடமே ஆட்டோகிராஃப் கேட்டு இருக்கிறார் பிராட் ஹாக். 'வாழ்த்துக்கள்... ஆனால், இது இன்னொரு முறை நடக்காது!' என்று எழுதிக் கையெழுத்துப் போட்டார் சச்சின். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, 21 போட்டிகளில் ஹாக்கின் பந்து வீச்சை எதிர்கொண்டு இருக்கிறார் சச்சின். அதில் ஒரு முறை கூட ஹாக்கின் பந்து வீச்சில் அவுட் ஆனது இல்லை.
சில நாட்கள் முன்பு வரை இந்த சம்பவம் பற்றி What is Confidence and Dedication? என்கிற பெயரில் ஒரு மின்னஞ்சல் உலாவிக் கொண்டிருந்தது.
உண்மை என்ன???
மேலே கூறப்பட்டுள்ள செய்தியில் பாதி உண்மை.. மீதி பொய்!!
அந்த செய்தியில் உள்ள உண்மைகள்:
- சச்சினின் விக்கெட்டை பிராட் ஹாக் ஒரு முறை மட்டுமே கைப்பற்றி உள்ளார்.
- அதன் பிறகு, சச்சினிடம் பிராட் ஹாக் ஒரு முறை ஆட்டோகிராஃப் வாங்கினார். அதில் சச்சின் கையெழுத்திட்டார்.
- அதன் பின், சச்சினின் விக்கெட்டைப் பிராட் ஹாக் எடுக்கவில்லை.
ஆனால், சம்பவம் தவிர கூறப்பட்டுள்ள எந்த செய்தியிலும் உண்மை இல்லை
என்ன தான் நடந்தது?
சற்று முழுமையாய் அலசுவோம்.ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் பிராட் ஹாக் (Brad Hogg) இதுவரை இந்தியாவிற்கு எதிராக 26 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் சச்சின் கலந்து கொண்டவை 23 !!
போட்டிகளின் பட்டியலைக் கீழே காணலாம் (சச்சின் இல்லாத போட்டிகள் சிவப்பு நிறத்தில் உள்ளன):
நாள்
|
இடம்
|
ஆட்டம்
|
6 செப் 1996
| கொழும்பு | 0 / 33 (5.0) |
10 அக் 1996
| தில்லி [டெஸ்ட்] | 1 / 69 (17.0) |
21 அக் 1996
| பெங்களூர் | 0 / 45 (10.0) |
3 நவ 1996
| மொகாலி | 0 / 12 (2.0) |
15 பிப் 2003
| சென்சூரியன் | 1 / 16 (4.4) |
23 மார்ச் 2003
| ஜொஹன்னஸ்பர்க் | 1 / 61 (10.0) |
26 அக் 2003
| குவாலியர் | 0 / 47 (10.0) |
1 நவ 2003
| மும்பை | 1 / 28 (5.2) |
23 ஆக 2004
| அம்ஸ்தல்வீன் | -- |
16 செப் 2006
| கோலாலம்பூர் | -- |
22 செப் 2006
| கோலாலம்பூர் | 2 / 48 (10.0) |
29 செப் 2007
| பெங்களூர் | -- |
2 அக் 2007
| கொச்சின் | 3 / 40 (9.3) |
5 அக் 2007 | ஹைதராபாத் | 3 / 46 (9.0) |
8 அக் 2007
| சண்டிகர் | 0 / 46 (9.0) |
11 அக் 2007
| வதோதரா | 1 / 28 (9.0) |
14 அக் 2007
| நாக்பூர் | 4 / 49 (10.0) |
17 அக் 2007
| மும்பை | 0 / 40 (8.0) |
26 டிச 2007
| மெல்பர்ன் [டெஸ்ட்] | 4 / 133 (38.0) |
2 ஜன 2008
| சிட்னி [டெஸ்ட்] | 2 / 176 (44.0) |
24 ஜன 2008
| அடிலெய்ட் [டெஸ்ட்] | 2 / 172 (43.0) |
17 பிப் 2008
| அடிலெய்ட் | 2 / 30 (8.0) |
24 பிப் 2008
| சிட்னி | 1 / 62 (9.0) |
2 மார்ச் 2008
| சிட்னி | 1 / 38 (7.0) |
1 பிப் 2012
| சிட்னி [ T20I ] | 1 / 21 (4.0) |
3 பிப் 2012
| மெல்பர்ன் [ T20I ] | 1 / 19 (3.0) |
-- → பந்து வீசவில்லை ( ரத்து செய்யப்பட்ட ஆட்டம்)
ஆட்டம்: விக்கெட் / ரன்கள் (ஓவர்)
|
அந்த கனியும் ஒரு நாள் அவருக்குக் கிடைத்தது - அந்த நாள் அக்டோபர் 5 , 2007.
ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் அது. ஏழு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாம் போட்டி அது. போட்டி நடந்த இடம்: ஹைதராபாத்
43 ரன்கள் எடுத்திருந்த சச்சினை 25 ஆம் ஓவர் முடிவில் பிராட் ஹாக் போல்டாக்கினார். அன்றைய ஸ்கோர் கார்டை இங்கு காணலாம்: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் - மூன்றாம் ஒரு நாள் போட்டி
போட்டி முடிந்த பின்னர், சச்சினின் ரசிகரான பிராட் ஹாக் சச்சினிடம் சென்றார். தான் அவரை அவுட் ஆக்கிய படத்தை அவரிடம் கொடுத்து அதில் ஆட்டோகிராப் கேட்டார்.
அதில் சச்சின் "இது இன்னொரு முறை நடக்காது ஹாக்" (This will never happen again, Hoggy) என்று எழுதி கையெழுத்திட்டார்.
இந்த செய்தியை ஹாக் "சன்டே ஏஜ்" என்கிற இதழிற்கு அளித்த பேட்டியில் (இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், டிசம்பர் 2007) தெரிவித்தார். சச்சின் கையெழுத்திட்ட அந்த புகைப்படம் ஒரு விலைமதிக்க இயலாத பரிசு என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த பேட்டி: Hogg ready for the challenge (23 டிச 2007)
இதைப் பற்றிய செய்தி அன்றைய ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களில் வெளியானது:
அக்டோபர் 5 , 2007 க்குப் பிறகு...
நாள்
|
இடம்
|
ஆட்டம்
|
8 அக் 2007
| சண்டிகர் | 5 (9) |
11 அக் 2007
| வதோதரா | 3 (7) |
14 அக் 2007
| நாக்பூர் | 19 (16) |
17 அக் 2007
| மும்பை | -- |
26 டிச 2007
| மெல்பர்ன் [டெஸ்ட்] | 30 (25) & -- |
2 ஜன 2008
| சிட்னி [டெஸ்ட்] | 49 (70) & -- |
24 ஜன 2008
| அடிலெய்ட் [டெஸ்ட்] | 54 (53) & 5 (6) |
17 பிப் 2008
| அடிலெய்ட் | -- |
24 பிப் 2008
| சிட்னி | -- |
2 மார்ச் 2008
| சிட்னி | 20 (19) |
ஆட்டம்: ரன்கள் (பந்துகள்)
-- → சந்திக்கவில்லை
|
சச்சினும், பிராட் ஹாக்கும் 10 போட்டிகளில் சேர்ந்து விளையாடி உள்ளனர். 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். ஆனால், பிராட் ஹாக் சச்சினின் விக்கெட்டைக் கைப்பற்ற முடியவில்லை என்பது உண்மை தான்!!
இந்த பதிவின் சாராம்சம்: சம்பவம் நிகழ்ந்தது உண்மை தான். ஆனால், அதனைப் பலப்படுத்தச் சொல்லப்பட்ட விடயம் தவறு.
நம்பாதீங்க தொடரின் அனைத்து பக்கங்களையும் பார்க்க: நம்பாதீங்க
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
![]() | ![]() | ![]() | ![]() |
மடல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்
தகவலுக்கு நன்றி நண்பா ..!
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குதகவலுக்கு நன்றி நண்பரே ! நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்கன்னு புரியலை சார் !
பதிலளிநீக்குசெய்தியில் பாதி உண்மை இருக்கு.. ஆனா, மீதி தவறு! அதைத் தான் சொல்ல வரேன்!
நீக்குவரலாறு மிகவும் முக்கியம்!
பதிலளிநீக்கு