கூகிளின் சிறப்பே அது பல மொழிகளையும் கற்று வரும் தேடல் களம் என்பது தான். ஆனால், எல்லா மொழிகளையும் அதனால் முழுமையாகக் கற்க முடியவில்லை. மனிதர்களாகிய நமக்கே கடினமாக இருக்கும் போது, கணிணி எந்த பட்சம்? அதனாலோ என்னவோ, சில மானிடப் பதர்கள் அதனைச் சற்று ஏமாற்றி தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். நீங்கள் பாதுகாக்கப்பட்ட தேடலைத் (SafeSearch Filtering) துவங்கிய பிறகும், சில தகாத வலைத்தளங்களை தேடலில் காண வாய்ப்பு உண்டு.. சில உதாரணங்கள்: தமிழ் என்று தேடிப் பாருங்கள்... முதலில் வரும் பதில் உங்களைத் திகைக்க வைக்கும். தமிழ் மொழியின் உறவுகள் பெயரைத் தேடிப் பாருங்கள். கிடைக்கும் பதில்கள் உங்களை முகம் சுளிக்க வைக்கும் மேலே கூறப்பட்ட செய்திகள் Moderate Filter மட்டும் அல்ல.. Strict Filter முறையிலும் வரும் என்பது தான் சோகமான செய்தி!! பதில்களில் வரும் 'அது' போன்ற வலைத்தளங்கள் மிக வில்லத்தனமானவை.. அவற்றை எழுதி பிறரைக் குறி வைப்பவர்கள் மனிதர்களாக வாழவே லாயக்கு அற்றவர்கள். சில குறிசொற்களைக் கொண்டு வடிப்பானை (Filter) ஏமாற்றி வந்து விடுகிறன... இவற்றைக் கு...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ