மார்ச் 14
இன்றைய நாள் (மார்ச் 14) உலகெங்கிலும் உள்ள கணித ஆர்வலர்களால் "பை நாள்" என்று கொண்டாடப்படுகிறது. "பஸ் டே, கார் டே" போல அதென்ன "பை டே"..
"பை நாள்" என்பது "பை" (Pi) என்கிற கணித மாறிலியை நினைவுப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும் (Pi Day).
முதலில் "பை" யைப் பற்றி பார்ப்போம்!
பண்டைய மனிதன் பல வித வடிவங்களையும் பார்க்கத் துவங்கிய போது வட்ட வடிவம் மட்டும் அவனுக்கு வினோதமாகப் பட்டது.
இயற்கையில் அவன் கண்ட பல உருவங்களும் வட்ட வடிவில் இருந்தன.
சதுரம், செவ்வகம், முக்கோண்டம் முதலிய பல வடிவங்களின் அளவையும் எளிதாய் அளக்க முடிந்த அவனுக்கு, வட்டத்தை மட்டும் சரிவர அளக்க முடியவில்லை.
பெரும் முயற்சிக்குப் பின், அவன் ஒரு அதிசயத்தைக் கண்டறிந்தான்.
ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் அதன் விட்டத்திற்கும் இடையே ஒரு பொது எண் இருப்பதைக் கண்டான்.
எந்த அளவு வட்டம் என்றாலும், அந்த விகிதம் மாறாமல் இருப்பதைக் கண்டு அதிசயித்தான். அந்த எண் தான் கிரேக்கர்களால் "பை (Pi)" என்று அழைக்கப்படுகிறது!!
அந்த மாறிலியைக் கண்டுபிடித்தால் வட்டத்தின் பிரச்சனை தீர்ந்தது என்று எண்ணி அதனைக் கண்டறிய முனைந்தான். இன்று வரை அந்த மாறிலியின் முழு எண்ணை யாராலும் கண்டறிய முடியவில்லை!!
பை என்கிற மாறிலியின் பதிப்பைக் கண்டறிய பண்டைய காலத்தில் இருந்தே முயற்சிகள் நடக்கிறன.
ஆர்யபட்டர் கி.மு. 499 இல் பை ஒரு விகிதமுறா எண் (Irrational Number) என்பதைக் கண்டறிந்தார். அதன் மதிப்பைப் பற்றி அவரது உரை (தமிழில்):
"நூறோடு நாலைக் கூட்டு , அதை எட்டால் பெருக்கு மேலும் பிறகு 62,000 த்தை அதனுடன் கூட்டு. இந்த விதி முறையில் 20000 விட்டம் கொண்ட ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கண்டறியலாம்."
அதாவது: ((4+100)×8+62000)/20000 = 3.1416
இந்த விடை மேற்கூறிய ஐந்து இலக்கங்கள் வரை சரியாக பொருந்தும்!!
இதற்கு பல காலம் கழித்தே கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் பை இன் மதிப்பை 3.1418 என்றும், அதனைத் அறிஞர் தாலமி 3.1416 என்று செம்மைப்படுத்தினார். 12 ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் பை ஒரு விகிதமுறா எண் என்பதைக் கண்டறிந்தனர்.
(ஆனால், நாம் பாட புத்தகங்களில் 'பை' இன் மதிப்பைக் கண்டறிந்தவர்கள் கிரேக்கர்கள் என்று படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேறு விடயம்!!)
இன்றோ பல்வேறு கணித முறைகள் மற்றும் கணிணியின் பயன்பாட்டால், "பை" யின் மதிப்பை ஒரு இலட்சம் எண்கள் வரை கணித்தாகி விட்டது!
சரி, ஏன் மார்ச் 14 ஆம் தேதி Pi Day என்று கொண்டாடப்படுகிறது?
Pi மாறிலியின் முதல் மூன்று எண்கள் 3.14 ..
மார்ச் 14 என்பதை எழுதினாலும் இது தானே வரும்!!
எனவே தான், மார்ச் 14 Pi Day என கொண்டாடப்படுகிறது!!
"பை" என்கிற கணித மாறிலியின் மதிப்பை பத்து இலட்சம் எண்கள் வரைப் பார்க்க வேண்டுமா?
இதைப் பாருங்க: Pi 1 million digits
அனைவருக்கும் இனிய "பை நாள்" வாழ்த்துகள் !!
கொசுறுத் தகவல்:
மார்ச் 14 அறிவியலாளர்களுக்கு வேறொரு வகையில் சிறப்பு வாய்ந்த நாள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் பிறந்த தினம் அன்றே தான்!! (பிறந்த நாள் : மார்ச் 14, 1879)
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
![]() | ![]() | ![]() | ![]() |
மடல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்
பல தகவல்கள் எனக்கு புதியவை .., பகிர்வுக்கு நன்றி நண்பரே ...!
பதிலளிநீக்குarumaiyana thakaval nanba..
பதிலளிநீக்குபடித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பர்களே!
பதிலளிநீக்குதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html
karl marx died on the same day march 14th.
பதிலளிநீக்குபுதிய தகவல் நண்பரே..
நீக்குநன்றி!!
\\"பை" என்கிற கணித மாறிலியின் மதிப்பை ஒரு இலட்சம் எண்கள் வரைப் பார்க்க வேண்டுமா? இதைப் பாருங்க: Pi 1 million digits \\ பத்து லட்சம் எண்கள் வரை கொடுக்கப் பட்டுள்ளது போலத் தெரிகிறது!!
பதிலளிநீக்குவட்டத்தின் சுற்றளவுக்கும், விட்டத்துக்கும் இடையேயான விகிதம் இந்த எண் தான் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள்?
\\பத்து லட்சம் எண்கள் வரை கொடுக்கப் பட்டுள்ளது போலத் தெரிகிறது!!\\
நீக்குசுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே!!
\\வட்டத்தின் சுற்றளவுக்கும், விட்டத்துக்கும் இடையேயான விகிதம் இந்த எண் தான் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள்?\\
அப்படியல்ல...
வட்டத்தின் சுற்றளவுக்கும், விட்டத்துக்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அந்த எண் 3 ஐ விட சற்று அதிகம் என்பதையும் அறிந்திருந்தனர்.
எண்ணின் மதிப்பை இன்னும் துல்லியமாக கண்டறியும் முயற்சியின் விளைவே இன்றைய 'பை'