சமீபத்தில், நாசா அனுப்பிய கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை அறிந்திருப்பீர்கள். கியூரியோசிட்டி படங்களாக எடுத்து தள்ளுவதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். அப்படி அனுப்பிய படம் ஒன்றைப் பார்த்த நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பல வானியலாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறனர். படத்தைப் பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். என்ன? ஆச்சரியமாக இருக்கிறதா? செவ்வாய் கிரகத்தில் தெரியும் இந்த இரட்டை சூரியன்கள் தான் தற்போதைய சூடான சர்ச்சை (Hot topic). என்னங்க? நீங்களும் ஆராயப் போறீங்களா? கொஞ்சம் பொறுங்க!! யாரோ சும்மா விளையாட்டுக்குச் செய்த படம்!!! இது தான் சமீப காலத்தில் அதிகமாக பரப்பப்படும் படம். உண்மை படத்தின் பிண்ணனியில் இருக்கும் மலை / மேடு ஆகியவை மெய்யாலுமே செவ்வாயில் உள்ளவை தான். (நம்புங்க!!). இந்தக் காட்சியை நாசாவின் தளத்திலும் காணலாம். இந்தப் படம் கூட கியூரியோசிட்டி எடுத்ததல்ல! 2005 மே 19 அன்று மாலை (செவ்வாய்), நாசா அப்போது அனுப்பியிருந்த ஸ்பிரிட் தரையுளவி (NASA's Mars Explor...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ