முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

லினக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டிலஸ் மூலமும் வட்டில் எழுதலாம்! (உபுண்டு)

அண்மைக் காலங்களில் , விரலிகளின் (USB Drive) பயன்பாடு அதிகரித்துள்ளது . எனினும் , குறுவட்டு (CD) மற்றும் இறுவட்டு (DVD) ஆகியவற்றின் தேவை இன்னும் குறையவில்லை .   லினக்ஸ் பயனாளர்கள் பலரும் வட்டில் தரவுகளை எழுத பிராஸரோ (Brasero) , K3B போன்ற பயன்பாடுகளையே பயன்படுத்துகிறோம் .  ஆனால் , நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டிலஸ் கோப்பு மேலாளர் (Nautilus File Manager) மூலம் இதை எளிதாகச் செய்யலாம் தெரியுமா ? எப்படி செய்வது ? நாட்டிலஸ் மேலாளரில் மெனுப்பட்டியலில் உள்ள Go→Location என்பதற்குச் செல்லுங்கள் . தோன்றும் முகவரிப்பட்டையில் (Address bar), burn:/// என்று உள்ளிட்டு Enter விசையை அழுத்துங்கள் . உடனே , வட்டு உருவாக்கி (CD/DVD Creator) திறக்கும் . அதில் , தேவையான கோப்புகளை இடுங்கள் .   கோப்புகளை இட்ட பின் , “Write To Disc” என்பதைச் சொடுக்குங்கள் . திறக்கும் உரையாடல் பெட்டியில் (Dialog box), தகுந்த வட்டைத் தேர்வு செய்யுங்கள் . வெற்று வட்டு எனில் , Blank Disc என்பதைத் தேர்ந்தெடுங்கள் . பிம்...

இந்திய ரூபாயினைக் கணிணியில் உள்ளிடுவது எப்படி?

நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய சுதந்திர திருநாள் வாழத்துகள்!! இந்த இனிய நாளில், நமது இந்திய ரூபாயின் குறியீட்டைப் பற்றி அறிந்து கொள்வோமா? இந்திய அரசு 15 ஜூலை 2010 அன்று தனது ரூபாய் பண மதிப்பைக் குறிப்பதற்கு என தனியே ஒரு சிறப்பு குறியீட்டைக் கொண்டு வந்தது . இதன் மூலம் , ரூபாய் மதிப்பைப் பயன்படுத்தும் பிற நாடுகளிடம் ( பாகிஸ்தான் , இலங்கை , நேபாளம் ) இருந்து தனது மதிப்பை வேறுபடுத்திக் காட்டியது . கணிணிகளில் இந்திய ரூபாய்: விண்டோஸ் (Windows Vista/ Windows 7) : தற்போது  யூனிக்கோடு எழுத்துருவில் (Unicode-6) இந்திய ரூபாய் நாணயம் இடம் பெற்றுள்ளது. எனவே, எல்லா எழுத்துருக்களிலும் (Font) ரூபாய் வடிவத்தை எழுதலாம்.  நிறுவுவதற்கு: மைக்ரோசாப்ட் ஆதரவு பக்கம் சென்று, தகுந்த கோப்பைத் தரவிறக்கிக் நிறுவிக் கொள்ளுங்கள்.  எழுதுவதற்கு: கீழ்காணும் வரிசையினை அடித்தால், இந்திய ரூபாய் வடிவம் கிடைக்கும்: 20B9 + Alt + x  விண்டோஸ் XP: நிறுவுவதற்கு:   கொஞ்சம் பழைய வழி தான்.. முதலில், Foradian தளம்   சென்று,கோப்பைத் தரவி...