உபுண்டு (Ubuntu) என்கிற ஒப்பற்ற இயங்கு தளத்தின் அருமை பெருமைகளை அதனை பயன்படுத்துபவர்கள் அறிவர்!! திறமூல இயங்குதளங்களில் ஒன்றான உபுண்டுவின் முக்கிய சிறப்பம்சங்கள்: விண்டோஸ் தளத்தில் இருந்தே நிறுவ முடியும். எந்த மென்பொருளையும் அதிக சிரமம் இன்றி எளிதாக நிறுவவும், பயன்படுத்தவும் முடியும். MP3 முதலிய காப்புரிமை பெறப்பட்ட கோடெக் போன்றவற்றுக்கும் நல்லதொரு ஆதரவு தருகிறது. (சில வகை லினக்ஸ் இயங்குதளங்களில் இது கடினம்!) மிகவும் முக்கியமான சிறப்பம்சம்- கணிணி உங்கள் தாய் மொழியில் உங்களுடன் உரையாடும் (விண்டோஸ் தளத்தில் இதனைப் பெற எவ்வளவு கடினம் என்பதை பயனாளர்கள் அறிவர்) "பாமரர்களின் லினக்ஸ்" என்று புகழ் பெற்ற உபுண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய பதிப்பை வெளியிடுவது வழக்கம்.. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் வெளியான பதிப்பு தான் உபுண்டு 11.10 ஒவ்வொரு பதிப்பிற்கும் வித்தியாசமான ஒரு பெயர் இடுவது உபுண்டு குழுவின் சிறப்பு. உபுண்டு 11.10 Oneiric Ocelot என்று பெயரிடப்பட்டு உள்ளது.. உபுண்டு 11.10 Oneiric Ocelot பதிப்பின் சிறப்ப...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ