முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மின்னஞ்சல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

காக்க காக்க !!!

இன்றைய இணைய உலகில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு தேவையாக மாறி விட்டது. பணம் பெறுதல், காழ்ப்புணர்ச்சி மற்றும் வேறு பல காரணங்களால் பலரது மின்னஞ்சல்கள் களவாடப்படுகிறன (Hack).  அவற்றைத் தடுக்க பல வழிகள் இருந்தாலும், புதிய புதிய வழிமுறைகளால் களவாடல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன. களவாடப்பட்டதைத் திரும்ப பெற்றபின் மீண்டும் அதைத் தக்க வைத்துக் கொள்ள என்ன தான் வழி? பலர் தங்கள் மின்னஞ்சல் கணக்கை களவு கொடுத்திருக்கலாம்!! ஆனால், அதனை மீட்ட பின், நம்மவர்கள் செய்யும் முதல் விடயம் கடவுச்சொல்லை (Password)  மாற்றுவது தான் !! அப்படியும், சில நேரங்களில் நமது கணக்கு மீண்டும் சூறையாடப்படுவது உண்டு. என்ன காரணம்? அதனைத் தடுக்க என்ன வழி? பொதுவாக, கொந்தர்கள் (Hackers) பலர் ஒரு கணக்கை அபகரித்த உடன் முதலில் செய்யும் விடயமே, கணக்கின் கடவுச்சொல் தொடர்புடைய விவரங்களை மாற்றுவது தான்!! எனவே, வெறும் கடவுச்சொல்லை மாற்றினால், அதனால் எந்த பயனும் இல்லை.. என்ன செய்வது???? கீழ்காணும் வழிமுறையை அப்படியே செய்யுங்கள்!! முதலில், உங்கள் கணக்கில் "கடவுச்சொல் மாற்றல் ம...