முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிதறல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

பயணச்சீட்டால் பயங்கர பல்பு வாங்கிய பிரபல பதிவர்

இது ஒரு உண்மைச் சம்பவம்.. மின்னணு ரயில் பயணச்சீட்டைப் பயன்படுத்த நினைத்து ஏமாந்த பதிவரின் கதை!! 22 ஜனவரி 2012                       அலுவல் நிமித்தமாக பல நாட்கள் வெளியூரில் தங்க வேண்டிய சூழல். ஒரு வழியாய் வேலை முடிந்து திரும்ப தயாரானேன். "ரயில் டிக்கெட் பிரிண்ட் எடுத்தாச்சா?" என்று ஒரு சகா கேட்டார். "நீங்க எந்த காலத்தில் சார் இருக்கீங்க? இப்ப ரயில்ல போக டிக்கெட் எல்லாம் தேவை இல்லை. உங்க அலைபேசியிலோ, இல்லை மடிக்கணிணியிலோ டிக்கெட் ஸாப்ட் காப்பியைக் காட்டினால் போதும்" என்றேன். "இருந்தாலும்.. ஒரு பாதுகாப்பிற்கு!!! " "உங்களைப் போன்ற ஆட்களால் தான் சார் நாட்டில் மரங்களோட எண்ணிக்கை குறையுது" என்றேன்.          அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை. பின்னே,இதற்கு மேல் யாராவது பேசுவார்களா?          புறநகர் ரயிலில் ஏறி சில நிமிடங்கள் கழித்து தான் முதல் சந்தேகமே வந்தது.  "நாம பாட்டுக்கு வந்துட்டோம். கொஞ்சம் ஊர்...

தம்பிக்கு எந்த ஊரு?

நான் எனது பணியில் சேர்ந்த புதிது!!! அன்று ஏதோ பணி காரணமாக வேறொரு புதிய களத்திற்கு (அப்போது)செல்ல நேர்ந்தது!! புதிய களம்.. நான் உள்ளே நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அறியாமல் மிரள மிரள விழித்து கொண்டு இருந்தேன்.. என்னை நோக்கி ஒருவர் வந்தார்.. "தம்பி.. இங்க எல்லாம் அனுமதி (Permission) இல்லாம வர கூடாது! நீங்க யார்?" என்று கேட்டார்.. நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. நான் வந்த நோக்கத்தையும் கூறினேன். அவர் "அப்படியா!! சார் மேனேஜரைப் பார்க்க போய் இருக்கார். கொஞ்ச நேரத்தில வந்து விடுவார்" என்றார்..  சிறிது நேர மெளனத்திற்குப் பின், அவர் என்னைப் பார்த்து "உங்களுக்கு எந்த ஊரு?" என்று கேட்டார்... நான் புதியவன் என்பதால், பலரும் என்னைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.. நான் "திருச்சி" என்று பதிலளித்தேன்.   அவர் உடனே கேட்டார்: "அப்படியா!!! திருச்சியில் எங்கே?" "வயலூர் பக்கம்"  "அடடே!! அங்க எங்கே?" எனக்கு உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது... ! பார்க்க திருச்சிக்காரர் போல் தெரியாவிட்ட...

பெஸ்டம்பர் (Festember)

9 செப்டம்பர்  2005, வெள்ளிக் கிழமை என்னுடன் இயந்திரவியல் படித்த நண்பர்களால் மறக்க முடியாத நாள்.. அந்த நாள் பெற்ற சிறப்பினை அறியும் முன்னர், சில தகவல்களை அறிவோம்!! திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology - NIT, Trichy) அதன் கல்விக்கு மட்டுமன்றி கலை நிகழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது. அந்த கல்லூரி நடத்தும் கலை நிகழ்ச்சி தான் பெஸ்டம்பர் (Festember) - செப்டெம்பர் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வார இறுதியில் நடைபெறும் கலை நிகழ்ச்சி.    இந்திய அளவில் அனைத்து கல்லூரி மாணவர்களும் கூடும் நிகழ்ச்சி என்பதால், அரங்கமே களைகட்டும்.. பெஸ்டம்பர்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, பார்க்கவாவது கல்லூரி இளவட்டம் குவிவது வழக்கம்! இப்படி பலராலும் எதிர்பார்க்கப்படும் பெஸ்டம்பர் செப்டம்பர் 8 ஆம் தேதி (2005) துவங்குவதாக தகவல் பலகையில் ஒரு அழைப்பிதழ் தொங்கியது! பார்த்த உடனே அனைவருக்கு மனதிலும் நிகழ்ச்சியைக் காண ஆசை! வெறும் 150 கி.மீ தூரம் எங்களைப் பார்க்க விடாமல் இருக்க செய்து விடுமா? 8 ஆம் தேதி துவக்க விழ...

மொழி

26 சூலை 2011 செவ்வாய் அன்று திருவனந்தபுரம் நோக்கி பயணம்...  எனது அலைபேசி இசையை என் காதுகளில் தெளித்துக் கொண்டே இருந்தது.... மாநில எல்லையான களியக்காவிளையைப் பேருந்து நெருங்கத் துவங்கியது....   பெண்ணிடம் காதல் புரிவதற்காக, தமிழ் கற்கும் ஐரோப்பியர்கள் பாடும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. (வள்ளியே.. சக்கர வள்ளியே!!)  இடையே அருமையான வரிகள்:   " உன்னைப் பார்த்ததும் ஊரை விட்டு ஆங்கிலம் ஓடிப்போவதென்ன? சீராய் செம்மொழி செந்தமிழ் தான் என் மொழி என்றே ஆனதென்ன? " மிகவும் சிலாகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்! கேரள எல்லை வந்தது.. பாடலும் முடிந்தது!! எல்லையைக் கடக்கவும் பாடலும் மாறியது.. என் அலைபேசியில் அடுத்து ஒலித்த பாடல்:   ஆஹா... அடடா... பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் (ஹே) ஆனால் (ஹே) கண்டேன் ஏன் (ஹே) ஓர் ஆயிரம் கனவு (ஹே) கரையும் என் ஆயிரம் இரவு நீ தான் வந்தாய் சென்றாய் என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் ஓ ஹோ ஓமணப்  பெண்ணே  ஓமணப்  பெண்ணே  ஓமணப...

தாமரையைக் காணவில்லை

ஆண்டு விடுமுறை!! வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. ஏதாவது உருப்படியாக படிக்கலாம் என்று தோன்றியது. "கம்ப்யூட்டர்ல எதாவது படித்தால் பின்னாளில் பயன்படும்" என்று அறிவுரை கூறினார்கள்!! அப்போது கணிணி பரவலாக பிரபலமடைய துவங்கி இருந்த காலம்...  எனது வீட்டின் அருகிலும் ஒரு கணிணி மையம் முளைத்து இருந்தது. அங்கு சென்று எதாவது படிக்கலாம் என்று நினைத்தேன்.. "இங்க கம்ப்யூட்டர் சம்பந்தமாக நிறைய சொல்லிக் கொடுக்கிறோம்ங்க.. டாஸ்,  லோட்டஸ், வேர்ட் ஸ்டார்.." என்று அடுக்கிக் கொண்டே போனார் நிறுவனர் . "இதில் எதைப் படித்தால் பின்னாளில் நல்ல எதிர்காலம்?" என்று அப்பாவியாய்க் கேட்டேன்! "எதைப் படித்தாலும் உங்க எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்" பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பு கணிணி பயிற்சியில் "டாஸ்" படித்து இருந்தேன்.. "லோட்டஸ் என்றால் என்ன சார்?" "அது ஒரு ஸ்ப்ரெட் சீட் தம்பி. டேட்டா வச்சு நிறைய கணக்குகளை எளிதா போடலாம். நம்ம டேட்டாவை வச்சு கிராப் கூட வரையலாம்" வேர்ட் ஸ்டார் என்பது தட்டச்சு செய்ய உதவும் ஒரு மென்பொர...

மூன்றாவது ரேங்க்!

17 வருடங்களுக்கு முன்பு... இதே நாள் (13 ஜூலை 1994).. நான் நான்காம் வகுப்பு என்ற பெரிய படிப்பு படித்த காலம்... வகுப்பறைக்குள் ஆசிரியை  உள்ளே நுழைந்தார்... "யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே" என்பார்களே.. அது போல, முன்னால் எங்கள் டீச்சர் கையில் ரிப்போர்ட் கார்டு கொண்டு வந்தார்... பின்னாலேயே,ஸ்கேலும்  வந்தது!! எங்கள் ரிப்போர்ட் கார்டுக்கும், ஸ்கேலிற்கும்  ஒரு தொடர்பு   உண்டு.. கார்டில் எத்தனை சிவப்பு கோடுகள் உண்டோ அத்தனை சிவப்பாக உங்கள் கைகள் மிளிர ஸ்கேல் உதவி செய்யும்!! எங்கள் டீச்சருக்கு ஒரு பழக்கம் உண்டு... முதலில், நான்காம் ரேங்க் முதல் பாஸ் ஆனவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர்.. அதன் பிறகு,  பெயில் ஆனவர்களுக்கு அதகளம் ஆரம்பிக்கும். இறுதியாக, முதல் மூவர். நான் ஏனோ தானோ ரகம் தான்... எப்பாடுபட்டாவது பாஸ் ஆகிடுவோம்.. ஆனா, ரேங்க் எல்லாம் கேட்டா ரேகிங் தான் நடக்கும்.. என்ன ஓகேவா? அழைப்பு ஆரம்பமானது... அனைவரும் கார்டு வாங்க வாங்க  மனதுக்குள் போராட்டம் அதிகமானது... நம்ம வீட்டு அம்மா அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாததா... இங்கும் ஒரு ...