முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Filtering லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழைச் சிதைக்கும் புதர்களைக் களை எடுப்போம் !! (Google Report Offensive Content))

கூகிளின் சிறப்பே அது பல மொழிகளையும் கற்று வரும் தேடல் களம் என்பது தான். ஆனால், எல்லா மொழிகளையும் அதனால் முழுமையாகக் கற்க முடியவில்லை. மனிதர்களாகிய நமக்கே கடினமாக இருக்கும் போது, கணிணி எந்த பட்சம்? அதனாலோ என்னவோ, சில மானிடப் பதர்கள்  அதனைச் சற்று ஏமாற்றி தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். நீங்கள் பாதுகாக்கப்பட்ட தேடலைத் (SafeSearch Filtering) துவங்கிய பிறகும், சில தகாத வலைத்தளங்களை தேடலில் காண வாய்ப்பு உண்டு.. சில உதாரணங்கள்: தமிழ் என்று தேடிப் பாருங்கள்... முதலில் வரும் பதில் உங்களைத் திகைக்க வைக்கும். தமிழ் மொழியின் உறவுகள் பெயரைத்  தேடிப் பாருங்கள். கிடைக்கும் பதில்கள் உங்களை முகம் சுளிக்க வைக்கும்  மேலே கூறப்பட்ட செய்திகள் Moderate Filter மட்டும் அல்ல.. Strict Filter முறையிலும் வரும் என்பது தான் சோகமான செய்தி!! பதில்களில் வரும் 'அது' போன்ற வலைத்தளங்கள் மிக வில்லத்தனமானவை.. அவற்றை எழுதி பிறரைக் குறி வைப்பவர்கள் மனிதர்களாக வாழவே லாயக்கு அற்றவர்கள். சில குறிசொற்களைக் கொண்டு வடிப்பானை (Filter) ஏமாற்றி வந்து விடுகிறன... இவற்றைக் கு...

கூகிள் தேடலில் (Google Search) விரும்பத்தகாத தளங்களை தவிர்ப்பது எப்படி? (Safe search)

கூகிள் ஒரு அருமையான தேடல் களம். அதே நேரம் ஒரு கண்ணாடி. நாம் என்ன விரும்புகிறோமோ அதனை பிரதிபலிக்கும் திறம் கொண்டது. நீங்கள் கூகிள் தேடுபொறியில் (Google Search Engine) சில குறிச்சொற்களைக் (keywords) கொண்டு தேடும் போது, உங்களுக்காக பல அதிர்ச்சிகள் காத்து இருக்கலாம். நீங்களே விரும்பாத தளங்கள்,  சொற்களின் பயன்பாட்டால்,  தேடலின் முதல் பக்கத்தில் குவியலாம்.   காமக்களியாட்டங்கள் அல்லது விரும்பத்தகாத செய்திகளை உள்ளடக்கிய வலைத்தளங்களை உங்கள் தேடலில் வராமல் எப்படி தவிர்ப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்ப சரியான இடத்திற்குத் தான் வந்து இருக்கீங்க!! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்: கூகிள் தேடலின் போது வலது பக்கம் பாருங்கள். அங்கு இருக்கும் சக்கரத்தைச்   சுட்டுங்கள். அதில் ' Search Settings' ஐ சொடுக்குங்கள். அடுத்து வரும் பக்கத்தின் முதலிலேயே "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!! வரும் பக்கத்தில் , "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு...