முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குறியீடு (சவால் சிறுகதைப் போட்டி 2011)

யுடான்ஸ் திரட்டி குழுமம் (ஆதி மற்றும் பரிசல் அவர்களுடன் இணைந்து) நடத்தும் "சவால் சிறுகதைப் போட்டி 2011"  போட்டிக்காக எழுதப்பட்டுள்ள கதை சவால் சிறுகதைப் போட்டி 2011 குணா விஷ்ணுவின் அழைப்புக்காக எதிர்பார்த்து காத்து இருந்தான்.. அவன் எதிர்பார்த்த மாதிரியே,விஷ்ணு அழைத்தான்.. அலைபேசி "Vishnu Informer" என்று சிமிட்டியது.   "குணா.. நான் சொன்னபடி செஞ்சுட்டியா?" "எல்லாம் ரெடி.." "சரி... ரெண்டையும் தனித்தனியா கவர்ல போடு.. ஒண்ணு கோகுலுக்கு இன்னொன்று மாதவனுக்கு.. கவனம் " "ஓகே" "இன்னும் கொஞ்ச  நேரத்தில அங்க கோகுல் வருவான்!! அவன்கிட்ட ரெண்டையும் குடுத்து விடு" குணாவிற்குத் தலை  சுற்றியது... இரண்டையும் கோகுலிடம் கொடுத்தால்?? "தெரிஞ்சு தான் பேசறியா?? " "ஆமா...ரெண்டையும் அவன்கிட்ட கொடு.. மாதவனுக்கு உள்ளதை மாதவன்கிட்ட கொடுத்துட சொல்லு" "சரி.. உன் இஷ்டம்"  அரை மணி நேரத்தில் கோகுல் வந்தான்.. அவனிடம் இரண்டு கவர்களையும் குணா ஒப்படைத்தான்... "விஷ்ணு ஏதும்?" ...

கடவுளே!

சில வருடங்களுக்கு முன்பு நடந்த கதை... பத்தாம் வகுப்பு இறுதித் தேர்விற்குச் சில நாட்கள் முன்னர்.. அன்று தான் பள்ளியில் அனைவருக்கும் நுழைவுச்சீட்டு கொடுத்து இருந்தனர்.. பயபக்தியோடு என் அப்பாவிடம் கொடுத்தேன்... " பரிட்சை ஹால் டிக்கெட்டா? நல்லது.. நல்லது... எல்லாரும் இந்த ஞாயிற்றுக் கிழமை நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் வேண்டிகிட்டு வருவோம்" " இல்லப்பா... ஸ்டடி லீவ் கொஞ்சம் நாள் தான் குடுத்து இருக்காங்க... படிக்கணும்" " பரவாயில்லைப்பா... நாம் காலையில சீக்கிரமா கிளம்பி போய்ட்டு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்" " இல்லப்பா.." "அரை நாள் படிக்கலைனா ஒண்ணும் ஆகாது.. நீ தான் சில நாள் நைட் முழிச்சு படிப்பல? அப்படி படி" அதற்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை... "அப்பா... இந்த ஞாயிற்றுக் கிழமை சக்திமான் இருக்குப்பா... சக்திமானுக்கும், தன்ராஜ் கில்விஷருக்கும் சண்டைப்பா" "அதானே பார்த்தேன் என்னடா பையன் படிப்பில ரொம்ப ஆர்வமா இருக்கான்னு... ஏண்டா சாமியை விட சக்திமான் உனக்கு அதிகமா மார்க் வாங்கி கு...

அமெரிக்கா

விமானம் தரையிரங்கியது ... ரகுவரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான் .. ரகுவரன் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை புரிபவன் . கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான் .. நினைத்தது போலவே வெளியே அவன் நண்பன் சங்கர் அவன் வரவை எதிர்பார்த்து இருந்தான் ... விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் சங்கரின் காரில் ஏறி புறப்பட்டனர் . ************************************* வழியில் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic signal) குறுக்கிட்டது .. சிவப்பு ஒளி ஒளிர்ந்தும் பைக்கில் வந்த ஒருவன் முந்திக்கொண்டு சென்றான் " என்ன இது ! மக்கள் ரூல்ஸ மதிக்கவே மாட்டேங்கிறாங்க ! அமெரிக்கால எல்லாரும் ரூல்ஸ மதிக்கிறதால தான் அங்க டிராபிக் சீரா இருக்கு " என்றான் ரகுவரன் . சங்கர் புன்னகைத்தான் ************************************* " உன்கிட்ட தான் டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கே !! அப்புறம் , எதுக்கு அந்த போலிஸ்க்கு நூறு ரூபா கொடுத்த ? அமெரிக்கால யாரும் இப்படி கேக்க மாட்டாங்க ! உன்கிட்ட சரியா இல...

தம்பிக்கு எந்த ஊரு?

நான் எனது பணியில் சேர்ந்த புதிது!!! அன்று ஏதோ பணி காரணமாக வேறொரு புதிய களத்திற்கு (அப்போது)செல்ல நேர்ந்தது!! புதிய களம்.. நான் உள்ளே நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அறியாமல் மிரள மிரள விழித்து கொண்டு இருந்தேன்.. என்னை நோக்கி ஒருவர் வந்தார்.. "தம்பி.. இங்க எல்லாம் அனுமதி (Permission) இல்லாம வர கூடாது! நீங்க யார்?" என்று கேட்டார்.. நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. நான் வந்த நோக்கத்தையும் கூறினேன். அவர் "அப்படியா!! சார் மேனேஜரைப் பார்க்க போய் இருக்கார். கொஞ்ச நேரத்தில வந்து விடுவார்" என்றார்..  சிறிது நேர மெளனத்திற்குப் பின், அவர் என்னைப் பார்த்து "உங்களுக்கு எந்த ஊரு?" என்று கேட்டார்... நான் புதியவன் என்பதால், பலரும் என்னைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.. நான் "திருச்சி" என்று பதிலளித்தேன்.   அவர் உடனே கேட்டார்: "அப்படியா!!! திருச்சியில் எங்கே?" "வயலூர் பக்கம்"  "அடடே!! அங்க எங்கே?" எனக்கு உடனே ஆர்வம் தொற்றிக் கொண்டது... ! பார்க்க திருச்சிக்காரர் போல் தெரியாவிட்ட...

வடையை 'சுட்டது' யார்?

சிறப்பு  பட்டிமன்றம் அது.. தலைப்பு:"பாட்டி வடை சுட்ட கதையில் ஏமாந்தது யார்?'" காகம்  தான் ஏமாந்தது என்று மூவரும், இல்லை நரி தான் பாவம் என்று வேறு மூவரும் மிக அழகாக வாதிட்டனர்.. பாவம், யார் கண்ணிற்கும் வடை சுட்ட பாட்டி தெரியவில்லை !! பி.கு: இது எங்கோ எப்போதோ படித்தது!

சாகாவரம்

அவன் கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான்... கடவுள் அவன் முன் தோன்றினார்... "பக்தா!! உன் தவம் கண்டு மெச்சினேன். உனக்கு வேண்டிய வரம் கேள்" "கடவுளே!! எனக்கு சாகா வரம் வேண்டும்" "பக்தா!! நான் பல யுகங்களாக கூறி வருவது போல சாகா வரம் மட்டும் கொடுக்க முடியாது. வேறு ஏதாவது கேள்" "இறைவா!! இந்த பூமியில் தோன்றிய எந்த பொருளாலும்- உயிருள்ளதோ உயிர் அற்றதோ- நான் இறக்க கூடாது" "அப்படியே ஆகட்டும்!! " கடவுள் மறைந்தார்!! அவன் சிரித்தான்.. "எப்படியோ கடவுளை ஏமாற்றி சாகா வரம் வாங்கி விட்டேன். இனி என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது" தூரத்தில் ஒரு விண்கல் அவன் தலையைக் குறி வைத்து வேகமாக வந்து கொண்டு இருந்தது!! 

மரண மயக்கம்

வேலன் அந்த சாலையைக் கடக்க முயற்சித்த போது ......  அவன் செல்போன் ஒலித்தது .. சாலையைக் கடந்து கொண்டே எடுத்து "ஹலோ " என்றான். அப்போது ..... அவன் எதிரே புயல் வேகத்தில் ஒரு ஆட்டோ ! கிட்டத்தட்ட அவனை உரசிக் கொண்டு சென்றது ... "மவனே வீட்ல சொல்லிட்டு வந்தியா?" ஆட்டோ காரன் கத்திக்கொண்டே சென்றான் எதிரில் காவல் துறை வாசகம் : "சாலையைக் கடக்கும் போது செல்போனில் பேசாதே ..கூப்பிடுவது 'எமன்' ஆக இருக்கலாம் " செல்போன் எதிர் முனையில் இருந்து வந்த குரல் : "ச்ச ... ஜஸ்ட்ல மிஸ் ஆயிட்டான் " வேலன் உறைந்து நின்றான்!! பி.கு: இது இணையத்தில் நான் முதன் முதலாக (வேறொரு தளத்தில்) எழுதிய குறுங்கதை.. சில மாற்றங்களுடன் மீண்டும்!

மொழி

26 சூலை 2011 செவ்வாய் அன்று திருவனந்தபுரம் நோக்கி பயணம்...  எனது அலைபேசி இசையை என் காதுகளில் தெளித்துக் கொண்டே இருந்தது.... மாநில எல்லையான களியக்காவிளையைப் பேருந்து நெருங்கத் துவங்கியது....   பெண்ணிடம் காதல் புரிவதற்காக, தமிழ் கற்கும் ஐரோப்பியர்கள் பாடும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. (வள்ளியே.. சக்கர வள்ளியே!!)  இடையே அருமையான வரிகள்:   " உன்னைப் பார்த்ததும் ஊரை விட்டு ஆங்கிலம் ஓடிப்போவதென்ன? சீராய் செம்மொழி செந்தமிழ் தான் என் மொழி என்றே ஆனதென்ன? " மிகவும் சிலாகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்! கேரள எல்லை வந்தது.. பாடலும் முடிந்தது!! எல்லையைக் கடக்கவும் பாடலும் மாறியது.. என் அலைபேசியில் அடுத்து ஒலித்த பாடல்:   ஆஹா... அடடா... பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் (ஹே) ஆனால் (ஹே) கண்டேன் ஏன் (ஹே) ஓர் ஆயிரம் கனவு (ஹே) கரையும் என் ஆயிரம் இரவு நீ தான் வந்தாய் சென்றாய் என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் ஓ ஹோ ஓமணப்  பெண்ணே  ஓமணப்  பெண்ணே  ஓமணப...

தாமரையைக் காணவில்லை

ஆண்டு விடுமுறை!! வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. ஏதாவது உருப்படியாக படிக்கலாம் என்று தோன்றியது. "கம்ப்யூட்டர்ல எதாவது படித்தால் பின்னாளில் பயன்படும்" என்று அறிவுரை கூறினார்கள்!! அப்போது கணிணி பரவலாக பிரபலமடைய துவங்கி இருந்த காலம்...  எனது வீட்டின் அருகிலும் ஒரு கணிணி மையம் முளைத்து இருந்தது. அங்கு சென்று எதாவது படிக்கலாம் என்று நினைத்தேன்.. "இங்க கம்ப்யூட்டர் சம்பந்தமாக நிறைய சொல்லிக் கொடுக்கிறோம்ங்க.. டாஸ்,  லோட்டஸ், வேர்ட் ஸ்டார்.." என்று அடுக்கிக் கொண்டே போனார் நிறுவனர் . "இதில் எதைப் படித்தால் பின்னாளில் நல்ல எதிர்காலம்?" என்று அப்பாவியாய்க் கேட்டேன்! "எதைப் படித்தாலும் உங்க எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்" பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பு கணிணி பயிற்சியில் "டாஸ்" படித்து இருந்தேன்.. "லோட்டஸ் என்றால் என்ன சார்?" "அது ஒரு ஸ்ப்ரெட் சீட் தம்பி. டேட்டா வச்சு நிறைய கணக்குகளை எளிதா போடலாம். நம்ம டேட்டாவை வச்சு கிராப் கூட வரையலாம்" வேர்ட் ஸ்டார் என்பது தட்டச்சு செய்ய உதவும் ஒரு மென்பொர...