இறைவனின் இருப்பைப் பற்றிய விவாதங்களும் சர்ச்சைகளும் இன்னும் தீர்ந்த பாடில்லை. இறைவனை நம்புபவர்கள் அதற்காக பல விவாதங்களை முன்வைக்கிறனர். நாத்திகர்களும் அதற்கு இணையான விளக்கங்களின் மூலம் மறுக்கிறனர். நாசாவின் ஒரு புகைப்படத்தை வைத்து பலர் கடவுளைக் காட்டிய கதை இது: படத்தில் இருக்கும் பொருள் கண் போலவே தோன்றுகிறது அல்லவா? இந்த படம் பலருக்கு இறைவனைக் காட்டியது. அதைப் பற்றிய செய்தி (தமிழாக்கம்): கடவுள் இருக்கிறார்!! கடவுள் உண்டா இல்லையா என்பது இன்று வரை சர்ச்சையாக இருக்கிறது.. ஆனால், நாசா எடுத்த ஒரு புகைப்படம் மூலமாக கடவுள் இருப்பது உறுதியாகி விட்டது!! இது நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி எடுத்த அரிய படம். இது 3000 வருடங்களுக்கு ஒரு முறையே நடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது! இது "கடவுளின் கண்" என்றழைக்கப்படுகிறது.. இதை எளிதாக அஞ்சல் பெட்டியில் இருந்து அழிக்கலாம்.. ஆனால், அதை விட எளிதாக பரப்பலாம்.. கடவுள் நம்மையெல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்! உண்மை இது தான் இந்த படம் நாசாவால் எடுக்கப்பட்டது தான்!! இந்தப் பட...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ