“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” - நன்னூல் மொழிகளின் தொன்மைக்குச் சான்றே அவற்றின் பழம்பெரும் இலக்கியங்ளே . எனவே , அவற்றிற்கு " பழையன கழிதல் " என்பது பொருந்தா . ஆனால் , மொழிகளின் உய்விற்கு புதியன புகுதல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் . பண்டைய மொழிகளின் தற்கால நிலை : ஆசியா , ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே அறியப்பெற்றிருந்த காலங்களில் உலகில் கோலோச்சிய பண்டைய மொழிகள் ஆறு என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகிறனர் . அவை தமிழ் , சமஸ்கிருதம் , சீனம் , கிரேக்கம் , இலத்தீன் மற்றும் எபிரேயம் (ஹீப்ரு) ஆகியன . இவற்றில் , இலத்தீன் மொழி சமஸ்கிருதமும் வழக்கொழிந்து போய் பிரார்த்தனைக்கு மட்டுமே பயன்படுகிறன . கிரேக்கமும்...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ