2004 ஆம் ஆண்டு

என்னுடன்
இயந்திரவியல் படித்த மாணவர்கள்
அனைவராலும் இன்றும் எங்கள்
சக தோழர் ஒருவர் "அப்பா"
என்று
அன்புடன் அழைக்கப்படுகிறார்.
அவரை
அனைவரும் தந்தை என்று அழைக்கும்
படி என்ன செய்தார்???
எல்லா
வகுப்புகளையும் போல எங்கள்
வகுப்பிலும் "மாப்ள
பெஞ்ச்"
உண்டு.
அந்த
பெஞ்சின் பிதாமகரே எங்க
"அப்பன்"
தான்!!
(பெயர்
வேண்டாம்..
பட்டப்பெயரான
'அப்பன்'
என்றே
வைத்துக் கொள்வோம்)
எங்கள்
கணக்கு ஆசிரியர் விடுப்பில்
சென்றிருந்தார்.
அவருக்குப்
பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர்
வந்தார்.
வந்தவர்
அப்போது தான் இளங்கலைப் பட்டம்
பெற்று இருந்தார்.
எங்கள்
வகுப்புக்கு வந்தவுடன்,
“நான்
ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும்.
என்கிட்ட
ரொம்ப வாலாட்டாதீங்க"
என்கிற
ரீதியில் பேசினார்.
(அதை
நாங்க யாரும் சட்டை செய்யவில்லை
என்பது வேறு விஷயம்!)
நேரே
பலகைக்குப் போய் ஒரு கணக்கைப்
போடத் துவங்கினார்.
எப்போதும்
போல எங்க மாப்ள "அப்பன்"
பக்கத்தில்
இருக்கும் நண்பனிடம் அரட்டை
அடிக்க ஆரம்பித்தான்.
புதிதாய்
வந்த ஆசிரியருக்கு வந்ததே
கோபம்..
நேரே
அப்பன்கிட்ட போய்..
"என்ன
நினைச்சுக்கிட்டு இருக்க??
நான்
B.Sc
Maths முடிச்சுட்டு
வந்து உங்களுக்குப் பாடம்
எடுத்துக்கிட்டு இருக்கேன்!!
உனக்கு
விளையாட்டா போச்சா ?”
"...”
"நான்
போடுற பிராப்ளம் எவ்வளவு
கஷ்டமானது என்று தெரியுமா?
“
"...”
"என்ன?
நான்
கேட்கிறேன்..
ஒண்ணும்
சொல்லாம நீ பாட்டுக்கு
நிக்கிற!!
போ
!!
போர்ட்ல
போய் இந்த கணக்கைப் போடு!”
அப்பன்
தயங்கிக் கொண்டே போனான்..
அவரோ
"போ
!!
நீ
எப்படி ஆன்ஸர் கொண்டு வரன்னு
பார்க்கலாம்!!”
என்று
கோபமாக விரட்டினார்....
அப்பன்
பலகை அருகில் போனான்.
கணக்கைப்
பார்த்தான்.
என்ன
நினைத்தானோ,
கடகடவென
எழுதத் துவங்கினான்.
வேகமாக
எழுதினான்.
பலகை
நிரம்பியது.
ஒரு
பக்கத்தை அழித்த பின் மீண்டும்
தொடர ஆரம்பித்தான்..
ஆசிரியர்
மூக்கின் மேல் விரல் வைத்தார்.
கீழே
உட்கார்ந்திருந்த எங்களுக்கோ
சிரிப்பு வந்தாலும் சிரிக்க
முடியவில்லை.
ஏனெனில்,
அந்த
கணக்கிற்கான விடை இரண்டு
வரிகளில் வந்து விடும்.
அவனோ
பலகையில் பக்கம் பக்கமாகஎழுதிக்
கொண்டு இருந்தான் (இதில்
விளக்கப்படமும்,
கிராப்
ஒன்றும் வேறு)..
ஆசிரியர்
புல்லரித்துப் போய் பார்த்துக்
கொண்டிருந்தார்..
மணி
அடித்தது..
எல்லாரும்
கிளம்ப தயாராக இருந்தும்
அவன் விடவில்லை ..
எழுதிக்கொண்டே
போனான்..
ஆசிரியர்
"
போதும்
தம்பி..
உன்னைப்
பத்தி ரொம்ப தப்பா நினைச்சுட்டேன்..
ஆனா
,
you are a gem of students “ என்றார்.
"பரவாயில்ல
சார்.
விடுங்க!!
இந்த
பிராப்ளம் முழுசா முடிக்காம
நான் வரமாட்டேன்"
(??!!)
"போதும்பா!!
இத
ரொம்ப சிம்பிளா சால்வ் (Solve)
பண்ணலாம்...
நீ
ரொம்ப கஷ்டப்படுற!!"
"தெரியும்
சார்...
ஆனா
,
எப்பவுமே
கணக்கை வேற ஆங்கிள்ல இருந்து
பார்க்கணும்"
"இது
வெறும் 2
மார்க்
பிராப்ளம்.
இத
நீ எவ்வளவு பெருசா போட்டாலும்
ரெண்டு மார்க் தான்”
“சார்!!
மார்க்
வாங்குறது பெருசில்லை...
கான்செப்ட்ட
நல்லா.
புரிஞ்சுக்கணும்.
அதான்
முக்கியம்!!"
"உன்னைப்
போய்...
ச்ச...
சாரிப்பா!!
ஆனாலும்,
ஒரு
பிரண்டா அட்வைஸ் பண்றேன்!!
எக்சாம்ல
இவ்வளவு பெருசா போட்டு டைம்
வேஸ்ட் பண்ணக் கூடாது!!
என்ன
ஓகேவா ?”
"ஓகே
சார் ..”
ஆசிரியர்
மிகவும் உணர்ச்சிவயப்பட்ட
நிலையிலேயே வெளியேறினார்.
அவர்
போய் விட்டார் என்பதை உறுதி
செய்த பின் வகுப்பே சிரித்தது...
கடைசி
வரை அவன் விடையை எழுதவில்லை
!!
"மச்சான்!!
எப்படி
மச்சான்?
ரெண்டே
வரில ஆன்ஸர் வரும்!!
அதை
வச்சு ஒரு ஹவரையே (Hour)
ஓட்டிட்ட!!"
"எவ்வளவோ
செஞ்சுட்டோம்..
இதைச்
செய்ய மாட்டோமா!!"
என்றான்
அப்பன் சிரித்துக் கொண்டே
இதன்
காரணமாகவே,
அவனுக்கு
"
Father
of Dave's Theorem”
(அவன்
போர்டில் எழுதும் போதும்,
ஒரு
Flow-வில்,
According to Dave's theorem என்று
எழுதினான்..
அப்படி
ஒரு தியரியைன்ற நாங்கள்
கேட்டதில்லை … )
என்ற
பட்டம் சூட்டப்பட்டு நாளடைவில்
மறுவி,
“அப்பன்"
என்று
நிலைத்தது!!
பி.
கு:
"காதல்
கொண்டேன்"
படத்தில்
வருவது போலவே உள்ளதே என்று
யோசிப்பவர்களுக்கு....
இந்த
காட்சியை செல்வராகவன் எங்களிடம்
இருந்து தான் எடுத்திருப்பாரோ
என்ற ஐயம் இன்றளவும் உண்டு..
இந்த
சம்பவம் நடந்து சுமார் 8
மாதங்கள்
கழித்து தான் "காதல்
கொண்டேன்"
திரைப்படமே
வந்தது..
படத்தைப்
பார்த்த அனைவரும்,
தனுஷ்
கணக்கு போடும் காட்சியைப்
பார்த்து விழுந்து விழுந்து
சிரித்தோம்!!
அட...! அருமை நண்பரே...!
பதிலளிநீக்கு