முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

'பை' நாள் (Pi Day) கொண்டாடுவோம் வாங்க!!

மார்ச் 14 இன்றைய நாள் (மார்ச் 14) உலகெங்கிலும் உள்ள கணித ஆர்வலர்களால் "பை நாள்" என்று கொண்டாடப்படுகிறது. "பஸ் டே, கார் டே" போல அதென்ன "பை டே".. "பை நாள்" என்பது "பை" (Pi) என்கிற கணித மாறிலியை நினைவுப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும் (Pi Day). முதலில் "பை" யைப் பற்றி பார்ப்போம்! பண்டைய மனிதன் பல வித வடிவங்களையும் பார்க்கத் துவங்கிய போது வட்ட வடிவம் மட்டும் அவனுக்கு வினோதமாகப் பட்டது. இயற்கையில் அவன் கண்ட பல உருவங்களும் வட்ட வடிவில் இருந்தன. சதுரம், செவ்வகம், முக்கோண்டம் முதலிய பல வடிவங்களின் அளவையும் எளிதாய் அளக்க முடிந்த அவனுக்கு, வட்டத்தை மட்டும் சரிவர அளக்க முடியவில்லை. பெரும் முயற்சிக்குப் பின், அவன் ஒரு அதிசயத்தைக் கண்டறிந்தான். ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் அதன் விட்டத்திற்கும் இடையே ஒரு பொது எண் இருப்பதைக் கண்டான்.  எந்த அளவு வட்டம் என்றாலும், அந்த விகிதம் மாறாமல் இருப்பதைக் கண்டு அதிசயித்தான். அந்த எண் தான் கிரேக்கர்களால் "பை (Pi)" என்று அழைக்கப்படுகிறது!! அந்த மாறில...

இயக்கக் காட்சிகள்- புதுப்பொலிவுடன் உபகரண வசதியுடன் (Dynamic Views with Gadgets)!!

பிளாக்கரில் இயக்கக் காட்சி முறை (Dynamic Views)என்ற புதிய காட்சி முறை இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த முறையை செப்டம்பர் 2011 இல் பிளாக்கர் அறிமுகப்படுத்தியது. இந்த காட்சி முறை பலரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், பதிவர்கள் அதனைத் தங்கள் வலைப்பூவில் பயன்படுத்த தொடர்ந்து தயங்கி வந்தனர். அதன் காரணம்   உபகரணங்களை (Gadgets) சேர்க்க முடியாது. Javascript நிரல்கள் வேலை செய்யவில்லை பக்கப் பட்டி (Side bar) காணாமல் போனது. ஒரு வழியாக, பல மாதங்களுக்குப் பிறகு, பிளாக்கர் தான் வழங்கும் சில உபகரணங்களுக்கு (Gadget) மட்டும் இயக்கக் காட்சியில் இடம் அளித்துள்ளது.  அதற்காக ஒரு மறைநிலை பட்டியை உருவாக்கியுள்ளது. இயக்கக்காட்சி வைத்தவுடன் வலது ஓரத்தில் ஒரு கருப்பு பட்டி தெரிவதைக் காணலாம். அதன் அருகில் சுட்டியைக் (mouse) கொண்டு சென்றால், பட்டி விரியும். இயக்கக்காட்சி ஆதரவு பெற்ற அந்த கெட்ஜெட்கள் இதோ: Profile: நம்மைப் பற்றிய அறிமுகம் கொடுக்கும் விட்ஜெட். Blog Archive: நமது அனைத்து பதிவுகளையும் ஒரு காப்பகத்தில் சேர்த்து காட்டும் உபகரணம்   Labels...

வரலாறு சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டி

12 மார்ச் 2006 இந்த நாளை உலக துடுப்பாட்ட (கிரிக்கெட்) ஆர்வலர்கள் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள். கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நாள் அது. 2005-06 இல் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் 2-2 என்கிற வெற்றியின் கணக்கில் இரு அணிகளும் சம பலத்தில் இருந்தன. இறுதிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருந்தன. இறுதி ஆட்டம் ஜொஹன்னஸ்பர்க் (Johannesburg) நகரத்தில் நடைபெற இருந்தது. அந்த பொன்னான நாளும் விடிந்தது. இரு அணிகளிடையே யார் முதலில் ஆடுவார்கள் என்று நிர்ணயிக்கும் டாஸ் (Toss) இல் ஆஸ்திரேலியா வென்றது. தங்கள் அணி முதலில் பேர் செய்யப் போவதாக ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) அறிவித்தார். அன்றைய போட்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் சவாலாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க அணித் தலைவர் கிரீம் ஸ்மித் ( Graeme Smith) நினைத்திருக்க மாட்டார். ஆட்டம் துவங்கியதில் இருந்தே ரன் மழை பொழிந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் சைமன் காதிட்ச் இருவரும் த...

சிறந்த (ஒட்டு) படம்!! (நம்பாதீங்க- பகுதி 005)

  நம்பாதீங்க- பகுதி 5   நிறைய பேர் உண்மை என்று நம்பிய செய்தி இது: நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமத்தால், 2001 ஆம் ஆண்டு சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்ட படம்: இது தென்னாப்பிரிக்க கடற்கரை அருகில் இங்கிலாந்து ராணுவம் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்தது!!   உண்மை இந்த படம் சிறந்த புகைப்படமாக பலரது பாராட்டுகளை அள்ளிய நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.. நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமம் இந்த தகவலை மறுத்தது . மேலும், இப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லை என்று அறிவித்தது. அவர்கள் வெளியிட்ட மறுப்பு செய்தி : Shark "Photo of the Year" Is E-Mail Hoax ..   கீழ்காணும் இரண்டு படங்களையும் பாருங்கள்.. விடயம் புரியும்!! படம்: லான்ஸ் சீயூங் (Lance Cheung), அமெரிக்க விமானப்படை இடம்:சான்பிரான்ஸிஸ்கோ முதலில் உள்ள படம் சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது.. இதில் பாலம் நன்கு தெளிவாகத் தெரிவதைக் கவனிக்கவும் ..   படம்: சார்லஸ் மாக்ஸ்வெல் ( Charles Maxwell )   இடம்: த...

அவிழ்மடல் பெறும் முதல் விருது - லிபெஸ்டர் பிளாக் (Liebester Blog) - நண்பர்களுக்கு நன்றி!

அன்பு நண்பர்களே, ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல். என்பது வள்ளுவர் வாக்கு .    ( உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை) ஒரு ஆர்வத்தில் வலைப்பூ ஆரம்பித்து, பல நாட்கள் கழித்து நண்பர்கள் சிலர் கொடுத்த ஊக்கத்தால் பதிவுகள் எழுதத் துவங்கினேன். எனது முதல் சில பதிவுகளுக்கு என் நண்பர்கள் மட்டுமே வாசகர்கள். அதன் பின் வந்த வாசகர்களும் என் நண்பர்கள் ஆனார்கள். நண்பர் ' வீடு சுரேஷ் ' அவர்கள் எனக்கு லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) என்கிற விருதினை அளித்துள்ளார். இந்த விருதினை அவர்  விருதுகள் எனும் ஊக்கமருந்து!   என்கிற  பதிவின் மூலம்  அளித்துள்ளார். விருதிற்குக் காரணமான பதிவு:   தானியக்க வங்கி இயந்திரத்தில் திருடர்களை தவிர்ப்பது எப்படி? வலையில் எழுதத் துவங்கிய பின், எனக்கு கிடைத்த முதல் விருது இது தான்.  எனது பதிவுகளை அங்கீகரித்து எனக்கு இந்த விருதினை வழங்கிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள். < லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog)  ...

அலைபேசியின் தயாரிப்பு இடம் தெரியணுமா? (நம்பாதீங்க- பகுதி 4)

இன்று அலைபேசி (Cellphone) பயன்படுத்தாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். எந்த ஒரு பொருளைப் போலவும், அலைபேசியிலும் தரம் மிக முக்கியம். ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு நாட்டுக் கிளைகளில் தயாரிக்கப்படும் அலைபேசிகளின் தரத்தில் வேறுபாடு இருக்குமா ? நமது அலைபேசி எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டறிய எதுவும் வழி உண்டா ? அதன் மூலம் தரத்தை அறிய முடியுமா?                                        நம்பாதீங்க - பகுதி 4 அலைபேசியின் தயாரிப்பைப் பற்றி அறிய வழிசொல்லும் இந்த செய்தியைப் பலரும்  மின்னஞ்சல் வடிவிலோ, குறுஞ்செய்தி வழியாகவோ பெற்று இருக்க வாய்ப்பு உண்டு (தமிழாக்கம்): உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் ச...