முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அலைபேசியின் தயாரிப்பு இடம் தெரியணுமா? (நம்பாதீங்க- பகுதி 4)






இன்று அலைபேசி (Cellphone) பயன்படுத்தாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். எந்த ஒரு பொருளைப் போலவும், அலைபேசியிலும் தரம் மிக முக்கியம். ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு நாட்டுக் கிளைகளில் தயாரிக்கப்படும் அலைபேசிகளின் தரத்தில் வேறுபாடு இருக்குமா ? நமது அலைபேசி எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டறிய எதுவும் வழி உண்டா ? அதன் மூலம் தரத்தை அறிய முடியுமா?                                     

 நம்பாதீங்க - பகுதி 4

அலைபேசியின் தயாரிப்பைப் பற்றி அறிய வழிசொல்லும் இந்த செய்தியைப் பலரும்  மின்னஞ்சல் வடிவிலோ, குறுஞ்செய்தி வழியாகவோ பெற்று இருக்க வாய்ப்பு உண்டு (தமிழாக்கம்):

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில்
தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
00 ==> தரமான தொழிற்சாலையில் தயாரித்தது (செல்போன் தரம் மிக மிக நன்று)
01 அல்லது 10 ==> தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து (மிக நன்று)
08 அல்லது 80 ==> தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி
(நன்று)
02 அல்லது 20 ==> ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். (சுமார்)
13 ==> ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான் (மோசம்)

உண்மை என்னவென்று பார்ப்போமா??


உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 - 17 இலக்கங்களில்
தெரியவரும்.. இதுவரை உண்மை தான்...

ஆனால் அதன் பிறகு உள்ளதை கவனிக்க:

அந்த எண்ணை கீழ்காண்பது போல் பிரித்துக் கொள்ளுங்கள்
AA-BBBBBB-CCCCCC-D**

AA - IMEI எண்ணை வழங்கும் அமைப்பின் எண்
BBBBBB - அலைபேசி மாதிரி எண் (Model No)
CCCCCC - அலைபேசி வரிசை எண் ( Serial No)
D** - checksum

இதில் AA-BBBBBB என்பது Type Allocation Code (TAC) எனப்படும்..

உங்கள் அலைபேசி தொலைந்து போனால், வரிசை எண்னைக் கொண்டே அலைபேசியைக் கண்டறியும் முயற்சி நடக்கிறது!!

இதில் உள்ள அலைபேசி மாதிரி எண் IMEI அமைப்பினால் வழங்கப்படுகிறது..
(ஒவ்வொரு அலைபேசி modelக்கும் ஒவ்வொரு எண்).. வரிசை எண் மட்டும் தயாரிப்பு நிறுவனம் தருவது..

எனவே, இந்த எண்ணைக் கொண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கலாம் என்பது வெறும் கற்பிதமே!!!

(உ.தா:
நீங்கள் நோக்கியா அலைபேசி பயன்படுத்தினால், AA என்பது 35 ஆக இருக்கும்..
ஒரே மாடல் பேசிகள் (ஒரே கால கட்டத்தில் வாங்கியவை) இரண்டை வாங்கி பாருங்கள்
- BBBBBB ஒன்றாக இருக்கும்)

உங்கள் அலைபேசி எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய விருப்பமா?

உங்கள் அலைபேசியின் மின்கலத்தை (battery) வெளியே எடுங்கள். மின்கலம் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு முத்திரைச் சீட்டு (label) ஒட்டப்பட்டு
இருக்கும்.


 அதில் உங்கள் IMEI எண்ணும் (*#060# அடித்தால் வரும் அதே எண்) , எங்கு தயாரிக்கப்பட்டது என்கிற விவரமும் இருக்கும்!!








குறிப்பு:

நீங்கள் அரத பழசான அலைபேசியைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியெனில், இது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு..

மேலே சொல்லப்பட்ட IMEI எண் இலக்கணம் 2004 ஆம் ஆண்டிற்கு பின் தயாரிக்கப்பட்ட அலைபேசிகளுக்கே பொருந்தும்!!
அதற்கு முந்தைய எண்களுக்குப் பொருந்தாது!

அப்போதைய IMEI எண் இலக்கணம் AA-BBBB-EE-CCCCCC-*

இதில் AA-BBBB என்பது மட்டுமே என்பது Type Allocation Code எனப்படும்..
(பின்னாளில் மாடல்கள் எண்ணிக்கை உயர்ந்ததும், மேம்பட்ட தொழில்நுட்பமுமே எண்ணிக்கையை மாற்ற காரணம் ஆனது)

EE என்பது எந்த நாட்டில் தயாரானது என்பது.. Factory Allocation Code (FAC)

அப்போதும் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் தவறு.. அவை அலைபேசிகளின் நிறுவனங்களைப் பொறுத்து மாறியது

தயாரிப்பு நாடுகள் வரிசையில் கொரியா, ஜப்பான் (முண்ணணி அலைபேசி தயாரிப்பாளர்களின் நாடுகள்) இல்லை என்பதை கவனிக்க!!

ஆதாரம்: நோக்கியா தளம், GSM, விக்கிபீடியா

பி.கு:
தங்கள் அலைபேசியின் IMEI எண்ணைப் பற்றி மேலும் அறிய வேண்டுவோர் கீழ் காணும் தளத்திலும் அறிந்து கொள்ளலாம்...
IMEI ANALYSIS

நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் வாசிக்க: நம்பாதீங்க!!

தொடரின் முந்தைய பதிவு:  


 
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!





கருத்துகள்

  1. நல்ல தகவல் சோதனை செய்து என் செல்போனை பரிசோதித்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. அன்புடைய நண்பரே! உங்களுடைய பதிவினை ரசித்து! உங்களுக்கு சகபதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஜெர்மானிய Liebster Blog விருதினை என் வலைதளத்தில் வழங்கியுள்ளேன் தாங்கள் ஏற்றுக்கொண்டால் எனக்கு மிக மகிழ்ச்சியிளிக்கும் உங்களை அன்புடன் எதிர்பார்த்து

    அன்புடன்
    வீடு K.S.சுரேஸ்குமார்

    "விருதுகள் எனும் ஊக்கமருந்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவு ஒன்றிற்கு விருது கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் முதன் முதலாக வலையில் பெறும் விருது இது!
      இதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.

      மிக்க நன்றி நண்பரே!!

      நீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...