அன்பு நண்பர்களே,
என்பது வள்ளுவர் வாக்கு .
(உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை)
ஒரு ஆர்வத்தில் வலைப்பூ ஆரம்பித்து, பல நாட்கள் கழித்து நண்பர்கள் சிலர் கொடுத்த ஊக்கத்தால் பதிவுகள் எழுதத் துவங்கினேன்.
எனது முதல் சில பதிவுகளுக்கு என் நண்பர்கள் மட்டுமே வாசகர்கள். அதன் பின் வந்த வாசகர்களும் என் நண்பர்கள் ஆனார்கள்.
நண்பர் 'வீடு சுரேஷ்' அவர்கள் எனக்கு லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) என்கிற விருதினை அளித்துள்ளார். இந்த விருதினை அவர் விருதுகள் எனும் ஊக்கமருந்து! என்கிற பதிவின் மூலம் அளித்துள்ளார்.
விருதிற்குக் காரணமான பதிவு: தானியக்க வங்கி இயந்திரத்தில் திருடர்களை தவிர்ப்பது எப்படி?
வலையில் எழுதத் துவங்கிய பின், எனக்கு கிடைத்த முதல் விருது இது தான்.
எனது பதிவுகளை அங்கீகரித்து எனக்கு இந்த விருதினை வழங்கிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
< லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) விருதினைப் பற்றி தேடியதில் கிட்டிய தகவல்கள்:
இதன் மூலம் ஒரு சங்கிலி தொடர் போல பலருக்கும் வாசிப்பு அனுபவம் கிட்டும். பலரும் தங்களுக்குத் தெரிந்தவர்களை அறிமுகப்படுத்த, பல புதியவர்கள் பார்வைக்கு வருவார்கள்.
இந்த விருதினை என் கையால் (மன்னிக்கவும், பதிவால்) என் நண்பர்களுக்குக் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) விருதினைப் பெறும் பதிவுகள்:
1. அன்பு உலகம்
பி. கு:
* Google Friend Connect எண்ணிக்கை கொண்டே வாசகர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது
* மேற்கண்ட நண்பர்கள் இன்றைய (29-02-2012 இந்திய நேரம் 20:00) நிலவரப்படி 200 க்கும் குறைவான வாசகர்களைக் கொண்டிருக்கிறார்கள்
* என்னை சமீபத்தில் கவர்ந்த 5 பதிவுகளுக்கு விருதினை அளித்துள்ளேன். இதனால், யார் மனமும் புண்பட்டிருந்தால், மன்னிக்க வேண்டுகிறேன்!!
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
indli
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.

- "Liebester" என்பது ஒரு ஜெர்மன் சொல். அதற்கு "பிடித்தமான" என்று பொருள்
- இது பதிவர்களால் பதிவர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருது.
- இந்த விருது 200க்கும் குறைவான வாசகர்களைக் கொண்ட வலைப்பூக்களுக்கு வழங்கப்படுகிறது.
- விருதின் நோக்கம் புதிதாய் எழுதும் பதிவர்களின் ஆர்வத்தை ஊக்குவிப்பதே.
- விருது பெறுபவர் தனக்கு விருது அளித்தவருக்கு (அவரது தளத்திற்கு இணைப்பு கொடுப்பதன் மூலம்) நன்றி தெரிவிக்க வேண்டும்
- விருதினை ஏற்றதன் அறிகுறியாக தன் வலையில் விருதைப் பொறிக்க வேண்டும்
- தான் படித்து ரசிக்கும் ஐந்து புதிய பதிவுகளை அடையாளம் காண வேண்டும் (வலைப்பூக்களுக்கு 200 க்கும் குறைவான வாசகர்கள் (Subscribers) இருக்க வேண்டும்)
- தான் தேர்வு செய்த பதிவுகளுக்கு விருதினைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
- விருது பெறுபவர்களை ஒரு பதிவின் மூலம் அறிவித்திடல் வேண்டும்.
- விருது அளிக்கப்பட்டவர்களுக்கு (கருத்திடல் மூலம்) அறிவிக்க வேண்டும்
இதன் மூலம் ஒரு சங்கிலி தொடர் போல பலருக்கும் வாசிப்பு அனுபவம் கிட்டும். பலரும் தங்களுக்குத் தெரிந்தவர்களை அறிமுகப்படுத்த, பல புதியவர்கள் பார்வைக்கு வருவார்கள்.
இந்த விருதினை என் கையால் (மன்னிக்கவும், பதிவால்) என் நண்பர்களுக்குக் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) விருதினைப் பெறும் பதிவுகள்:
1. அன்பு உலகம்
இந்த வலைப்பூ ரமேஷ் அவர்களின் அன்பினால் உருவான உலகம். அனைவருக்கும் பயன்படும் பல மருத்துவ தகவல்கள் நிறைந்த தளம் இது. அனைவரும் ஆரோக்கியமாக வாழ எழுதி வந்த நண்பர் என்ன காரணத்தாலோ, நம்மிடம் இருந்து தற்காலிகமாக விடை பெற்றுள்ளார்.
தூக்கம் வராதவர்களுக்கு பதினைந்து வழிகள் என்று பலர் தூங்குவதற்கு வழி சொன்னதற்காக அவருக்கு இந்த விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வழக்குரைஞர் பி. ஆர். ஜெயராஜன் அவர்களின் பார்வையே நம் அனைவருக்கும் சட்டத்தைச் சொல்லித் தருகிறது. இவரது பதிவுகள் பலருக்கும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துகிறன. சட்டம் மட்டுமின்றி, நல்ல சிந்தனைகளையும் அழகாய் தொகுத்து வழங்கியுள்ளார்.
இவர் மதனப்பெண் என்கிற பெயரில் ஒரு தொடரையும் எழுதி வருகிறார்.
நுகர்வோர் மத்தியில் விழிப்பு ஏற்பத்துவதற்காக, உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி, இவர் எழுதிய நுகர்வோருக்காக வழக்கிடும் அவரது முகவர் வழக்குரைஞராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
என்கிற பதிவிற்காக இந்த விருதினை மகிழ்வுடன் வழங்குகிறேன்
3. தமிழ் CPU
நண்பர் ந.ர.செ. ராஜ்குமார் அவர்களின் முயற்சியால் கணிணியின் மையச்செயலாக்கமும் (CPU) தமிழில் பேச முனைகிறது. கணித்தலைப் பற்றி அறியாதவர்களும் புரிந்து கொள்ளும் படி கணிணி மொழிகளைப் பற்றி எழுதி வருகிறார்.
கணிணி மொழி என்றாலே பலருக்கும் C, C++, VB, ஜாவா போன்றவை தான் நினைவில் வரும். தனியுரிமை மொழிகளான அவற்றிற்கு இணையான திறமூல கணிணி மொழியான பைத்தான் (Python) என்கிற ஒப்பற்ற மொழியினை அறிமுகம் செய்து வைத்த பைத்தான் - உன்னதமான புரோகிராமிங் மொழி என்கிற பதிவிற்காக இந்த விருதினை இவருக்கு வழங்குவதில் பெருமையடைகிறேன்.
4. விருட்சம்
இந்த பதிவினைப் பதிவர் திரு அருண் அவர்கள் நடத்தி வருகிறார். இணையம், திரைப்படம் என பல துறைகளிலும் பதிவுகள் எழுதி வருகிறார்.
தமிழர் தம் பெருமையை உணர்த்தும் வகையில் இவர் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். நீண்ட அந்த கட்டுரை பல தமிழர்களின் கண்களில் படவில்லை என்று நினைக்கிறேன்.
அவரது உலகில் முன்தோன்றிய தமிழனின் குமரி கண்டம் நாகரிகம் என்ற பதிவிற்காக இந்த விருதினை அவருக்கு வழங்குகிறேன்.
5. வாங்க பழகுவோம் பேசுவோம்

கற்றல் மேல் காதல் கொண்ட நெல்லி மூர்த்தி அவர்கள் படித்தல் தனக்குப் பிடித்த மற்றும் பாதித்த செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தான் கண்டு சிரித்த கேலிச்சித்திரங்களை (Cartoons) நம்மிடம் காட்டி, அவற்றைக் கண்டு குலுங்குவதோ குமுறுவதோ நமது விருப்பம் என்று விட்டுவிடுபவர்.
இன்றும் கீழை நாடுகளில் பணிபுரிய சென்று அங்கிருக்கும் சட்டங்களால் அவதியுறும் மக்கள் ஏராளம். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அந்த சட்டத்திட்டங்களின் மொழிபெயர்ப்பான அவசியம் தெரிஞ்சுக்கோங்க - சவூதியில் பணிபுரிய விரும்பறவங்க... என்ற பதிவிற்காக இந்த விருதினை அன்புடன் வழங்குகிறேன்.
பி. கு:
* Google Friend Connect எண்ணிக்கை கொண்டே வாசகர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது
* மேற்கண்ட நண்பர்கள் இன்றைய (29-02-2012 இந்திய நேரம் 20:00) நிலவரப்படி 200 க்கும் குறைவான வாசகர்களைக் கொண்டிருக்கிறார்கள்
* என்னை சமீபத்தில் கவர்ந்த 5 பதிவுகளுக்கு விருதினை அளித்துள்ளேன். இதனால், யார் மனமும் புண்பட்டிருந்தால், மன்னிக்க வேண்டுகிறேன்!!
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
indli
உங்களிடம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! விருதை பற்றிய தகவல்களை நீங்கள் தேடி பதிவிட்டது வியப்பை ஏற்படுத்தியது.....உண்மையில் பாராட்டுகள் நண்பரே!
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி நண்பரே!
நீக்குவாழ்த்துக்களும், பாராட்டுக்களும் அருண்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குவாழ்த்துக்கள் அருண்.
பதிலளிநீக்குநன்றி அண்ணே!
நீக்குவாழ்த்துக்கள் அன்பரே
பதிலளிநீக்குநன்றி இனிய நண்பரே! உங்கள் அவிழ்மடல் சிறக்க வாழ்த்துக்கள் ....
பதிலளிநீக்குஎனக்கும் விருது கொடுத்திருக்கீங்க. நன்றிங்கண்ணாவ்... எங்கிருந்து இந்த விருதை கண்டுபிடிச்சீங்க.. நல்ல ஆளுங்க நீங்க.. :) எனக்குப் பிடித்த ஐந்து பதிவுகளை (< 200 உறுப்பினர்கள் கொண்டிருக்கும் வளரும் பதிவர்களின்) வெளியிட்ட பின்னர் இந்த விருதினைப் பெற்றுக் கொள்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பா!..
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குhttp://tamilcpu.blogspot.in/2012/03/blog-post.html
நீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குவிருந்தும், விருதும் உறவுகளை பேணுவதிலும், உழைப்பினை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கிடைக்கும் நேரத்தினில் வலைப்பூ உலகில் உலாவருவது வழக்கம். பதிவுகளின் கருத்தாக்கங்கள் வாயிலாக என்னை கவர்ந்தவர்களும், தமிழ் உலகம் அறியவேண்டியவர்களும் என வலைப்பூவினில் குறிப்பிடும்படி நிறைய பேர் உள்ளனர். அவர்கள் குறித்து ஒரு பதிவினை வெளியிட வேண்டும் என நீண்ட நாட்களாக ஆவல் கொண்டிருந்தேன். அதை எப்படி துவக்குவது என்ற சூழலில் தங்களின் விருது ஒரு வாய்ப்பினை அமைத்துவிட்டது. தங்களின் அன்பிற்கும் விருதிற்கும் மனமார்ந்த நன்றி! விரைவில் பதிவிட்டு அவ்விருதினை பெற்றுக்கொள்கின்றேன்.
பதிலளிநீக்குவிருது குறித்த விளக்கமும், அவர்களை தேர்ந்தெடுத்த விதமும் தங்களின் தனித்துவத்தினை விளக்குகின்றது. தொடர்ந்து கலக்குங்க... வாழ்த்துக்கள்!
இந்த விருதின் நோக்கமே புதியவர்களை அடையாளம் காட்டுவதும், வாசிப்பினைக் கூட்டுவதும் தானே நண்பரே!
நீக்குகருத்திற்கு நன்றி!
விருதிற்கு மனமார்ந்த நன்றி நண்பரே ! வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்கு