வணக்கம் நண்பர்களே..
நமது "நம்பாதீங்க" தொடர் வெற்றிகரமாக தனது 11 ஆம் பகுதியை வெளியிடுகிறது.
11 என்கிற எண்ணிற்கு என்ன சிறப்போ தெரியவில்லை.. இந்த பதிவும் 11 ஐப் பற்றியது தான்!!
சில மாதங்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.
தமிழில் வந்த செய்தி:
அதிசய தினத்தில் பதினொரு குழந்தைகளை ஒரே தரத்தில் பெற்ற இந்தியப் பெண்
ஒரே தரத்தில் பதினொரு குழந்தைகளைப் பெற்று இந்தியத் தம்பதி சாதனை
இந்த செய்தி எந்தளவு உண்மை??
இது மெய்யாலுமே உண்மையான படம் தாங்க.. எந்த போட்டோசாப்பும் பயன்படுத்தவில்லை.
செய்தி பாதி உண்மை; பாதி பொய்!!
எப்படி?
சூரத் நகரத்தில் உள்ள பிரபலமான மருத்துவமை 21st Century Hospitals. இங்கு வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In vitro fertilisation) மூலம் பல தம்பதிகள் குழந்தை பெற்றுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் பிப்ரவரி 2011 இல் சோதனைக் குழாய் குழந்தைகளைப் பிரசவித்த 30 பெண்களுள் 11 பேர் தங்கள் குழந்தை 11-11-2011 அன்று பிறக்க வேண்டினர். அவர்கள் விருப்பத்தை மருத்துவர்களும் நிறைவேற்றினர்.
அதன் படி, 11-11-11 அன்று 11 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் பிறந்தன.. அதுவும் சோதனைக் குழாய் முறையில்!!
இந்த நிகழ்வு நடக்கப் போவதாக அதற்கு முந்தைய நாள் டைம்ஸ் ஆப் இந்தியா டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது.12-11-11 அன்று ஒரு வட இந்தியப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியைக் கீழே பார்க்கவும்:
இணையத்தில் இது பற்றிய பதிவு: 11 LSCS deliveries on 11.11.11
நன்றி: ஹோக்ஸ்லேயர்
நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண: நம்பாதீங்க- தொடர்

இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது.
இந்தியப் பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார்
என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர்
அறிந்து இருப்பீர்கள்.
உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை
பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும்
சொல்லப்படுகின்றது.
பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை
என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி
இருக்கின்றன.
இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம்.
இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற
பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித்த சாதனையாளர் ஆகி
விடுவார் இந்திய பெண்.
எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இது. தமிழில் வந்த செய்தி:
அதிசய தினத்தில் பதினொரு குழந்தைகளை ஒரே தரத்தில் பெற்ற இந்தியப் பெண்
ஒரே தரத்தில் பதினொரு குழந்தைகளைப் பெற்று இந்தியத் தம்பதி சாதனை
இந்த செய்தி எந்தளவு உண்மை??
இது மெய்யாலுமே உண்மையான படம் தாங்க.. எந்த போட்டோசாப்பும் பயன்படுத்தவில்லை.
செய்தி பாதி உண்மை; பாதி பொய்!!
எப்படி?
சூரத் நகரத்தில் உள்ள பிரபலமான மருத்துவமை 21st Century Hospitals. இங்கு வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In vitro fertilisation) மூலம் பல தம்பதிகள் குழந்தை பெற்றுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் பிப்ரவரி 2011 இல் சோதனைக் குழாய் குழந்தைகளைப் பிரசவித்த 30 பெண்களுள் 11 பேர் தங்கள் குழந்தை 11-11-2011 அன்று பிறக்க வேண்டினர். அவர்கள் விருப்பத்தை மருத்துவர்களும் நிறைவேற்றினர்.
அதன் படி, 11-11-11 அன்று 11 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் பிறந்தன.. அதுவும் சோதனைக் குழாய் முறையில்!!
இந்த நிகழ்வு நடக்கப் போவதாக அதற்கு முந்தைய நாள் டைம்ஸ் ஆப் இந்தியா டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது.12-11-11 அன்று ஒரு வட இந்தியப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியைக் கீழே பார்க்கவும்:
இணையத்தில் இது பற்றிய பதிவு: 11 LSCS deliveries on 11.11.11
நன்றி: ஹோக்ஸ்லேயர்
நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண: நம்பாதீங்க- தொடர்
நன்றி நண்பா., உண்மையை விளக்கியமைக்கு.!
பதிலளிநீக்குநானும் நம்பிட்டேன்...!விளக்கத்துக்கு நன்றி!தொடர்ந்து 11டன் நிறுத்தாமல் அறிவு கண்ணை திறந்து கொண்டே இருங்கள்!
பதிலளிநீக்குஹாஹாஹா..
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்!
அட.... இப்படியும் இருக்காங்களா??
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
அடப் பாவிகளா ! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க ....
பதிலளிநீக்குமுதலில் மக்கள்.. பதினோரு குழந்தைகள் இவ்வளவு பெரியதாக இருந்தால் ஒரு தாயால் பெற்றெடுக்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்..
பதிலளிநீக்கு…
…ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்த பட்சம் 1.5கி.கி நிறை போட்டாலும் 17.5கி.கி நிறை வந்திடும்.. போக பனிக்குடம்.. அதிலுள்ள உயவுத் நீர்மம்.. இப்படி 22கி.கி மேல் வந்திடும்.. இது உறுதியாக நிகழவியலாதது.
…
…மேலும் வயிற்றின் பருமனளவும் மிகவும் முக்கிமானது..
…
…இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே.. குறைந்த எடையுடன் தான் குழந்தைகள் பிறக்கும்..
உண்மை.. நல்ல தகவல்!
நீக்குபடித்து கருத்திட்ட வரலாற்று சுவடுகள், வீடு சுரேஸ்குமார்,அசால்ட் ஆறுமுகம், தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் Math Larks ஆகியோருக்கு நன்றி!!
பதிலளிநீக்கு