முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெற்றிக் கண் (நம்பாதீங்க - பகுதி 7)

இறைவனின் இருப்பைப் பற்றிய விவாதங்களும் சர்ச்சைகளும் இன்னும் தீர்ந்த பாடில்லை. இறைவனை நம்புபவர்கள் அதற்காக பல விவாதங்களை முன்வைக்கிறனர். நாத்திகர்களும் அதற்கு இணையான விளக்கங்களின் மூலம் மறுக்கிறனர்.

நாசாவின் ஒரு புகைப்படத்தை வைத்து பலர் கடவுளைக் காட்டிய கதை இது:



படத்தில் இருக்கும் பொருள் கண் போலவே தோன்றுகிறது அல்லவா?

இந்த படம் பலருக்கு இறைவனைக் காட்டியது. அதைப் பற்றிய  செய்தி (தமிழாக்கம்): 

கடவுள் இருக்கிறார்!!
கடவுள் உண்டா இல்லையா என்பது இன்று வரை சர்ச்சையாக இருக்கிறது.. ஆனால், நாசா எடுத்த ஒரு புகைப்படம் மூலமாக கடவுள் இருப்பது உறுதியாகி விட்டது!!
இது நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி எடுத்த அரிய படம். இது 3000 வருடங்களுக்கு ஒரு முறையே நடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது! இது "கடவுளின் கண்" என்றழைக்கப்படுகிறது..
இதை எளிதாக அஞ்சல் பெட்டியில் இருந்து அழிக்கலாம்.. ஆனால், அதை விட எளிதாக பரப்பலாம்.. கடவுள் நம்மையெல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்!

உண்மை இது தான்

         இந்த படம் நாசாவால் எடுக்கப்பட்டது தான்!! இந்தப் படம் மே 10, 2003 அன்று நாசாவின் "சிறந்த விண்வெளி படம்"  ஆகத் தேர்வு செய்யப்பட்டது.

ஹப்பிள் தொலைநோக்கி மற்றும் அரிசோனாவில் உள்ள கிட் பீக் தேசிய வானோக்குநிலையம் (Kitt Peak National Observatory) ஆகியவற்றில் எடுக்கப்பட்ட படங்களின் கலவை தான் மேலே கண்ட படம்.

ஆனால்.... மற்றவை அனைத்தும் தவறு

இந்த காட்சி 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக் கூடியது அல்ல. என்றும் இதனைக் காணலாம்!

இது நம் சூரிய மண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் சுருளை வான்புகையுரு (Helix Nebula) ஆகும். 

சுருளை வான்புகையுரு ஒரு கோள் விண்மீன் படலம் (Planetary Nebula- நட்சத்திரம் அழியும் போது உருவாகும் வான்புகையுரு) வகையைச் சேர்ந்தது. இது நம் பூமியில் இருந்து சுமார் 650 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

சுருளை வான்புகையுரு பற்றி மேலும் தகவல்களுக்கு : விக்கிபீடியா



'நம்பாதீங்க' தொடரின் அனைத்து பகுதிகளையும் படிக்க: நம்பாதீங்க

முந்தைய பகுதி: பிராட் ஹாக் வாங்கிய சச்சினின் கையெழுத்து




அவிழ்மடல்

கருத்துகள்

  1. நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே அப்படின்னு சொல்றீங்க........

    பதிலளிநீக்கு
  2. புரளியை கிளப்பிவிடுறதில நாம தான் எப்போதுமே டப்புல நண்பரே, தெளிவான தகவலுக்கு நன்றி ..!

    பதிலளிநீக்கு
  3. அரிய அறிவியல் தகவலை ஒரு suspence சேர்த்து சுவையாகத் தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நண்பரே,

    நல்ல பதிவு ...

    முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
    பார்க்க

    தமிழ் DailyLib

    பதிலளிநீக்கு
  5. சமூகத்திற்கு தேவையான பதிவு ஆளுங்க..

    பதிலளிநீக்கு
  6. நம்பாதீங்கன்னு நீங்க சொன்னதை நாங்க நம்புறோம்!

    பதிலளிநீக்கு
  7. பகிர்விற்கு நன்றி சகோ!
    நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  8. அரிய அறிவியல் தகவலுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  9. தெளிவான தகவல் ! வடிவேலுவின் ஒரு ஜோக்ஸ் தான் ஞாபகம் வந்தது ! நன்றி சார் !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...