வணக்கம் நண்பர்களே,
திருமண தேவதையான ஜூனோவின் பெயர் கொண்ட இந்த ஜூன் மாதத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஜூன் 2012 ஐப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கு.. தெரியுமா?
ஒரே மாதத்தில் 5 வெள்ளி, 5 சனி, 5 ஞாயிறு வந்தால் எப்படி இருக்கும்?
இந்த அரிய நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள். சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் !
கொஞ்சம் இருங்க!!மேலே இருப்பது சுத்த அக்மார்க் பொய்!!
இந்த செய்தியை மின்னஞ்சலில் பார்த்து எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியாது!!
முதலில், ஜூன் மாதத்தில் 30 நாட்கள் தான். இது நடக்க சாத்தியம் இல்லை.
மே மாதம் பார்க்க:
அடுத்து, இந்த நிகழ்விற்காக (5 வெள்ளி, சனி, ஞாயிறு) 823 வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை.. மார்ச் 2013 வரை காத்திருந்தால் போதும்!!
ஒரு மாதத்தில் 3 நாட்கள் ஐந்து முறை வர அந்த மாதத்தில் 31 நாட்கள் இருக்க வேண்டும். மேலும், அந்த வாரத்தின் முதல் நாள் தான் அந்த 5 வது வாரத்தின் அடித்தளம்.
அதாவது, 5 வெள்ளி, சனி, ஞாயிறு வர அந்த மாதத்தின் முதல் நாள் வெள்ளியாக இருக்க வேண்டும் !
படங்கள் நன்றி: கூகிள்
பின் குறிப்பு:
சொன்னாலும், சொல்லாவிட்டாலும், இந்த ஜூன் 2012 ஒரு முக்கியமான மாதம் தான். இந்த மாதத்தில் நிகழும் ஒரு மிக முக்கியமான காட்சியை நீங்கள் தவற விட்டால், அதை மீண்டும் காண நீங்கள் குறைந்தபட்சம் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அது என்ன நிகழ்வு? அதைப் பற்றி அடுத்த பதிவில்!!!
நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண: நம்பாதீங்க- தொடர்

திருமண தேவதையான ஜூனோவின் பெயர் கொண்ட இந்த ஜூன் மாதத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஜூன் 2012 ஐப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கு.. தெரியுமா?
அப்படி ஒரு அரிய சிறப்பைப் பெற்றது ஜூன் 2012 !! சந்தேகம் என்றால் நீங்களே காலண்டரைப் பாருங்க!
இந்த அரிய நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள். சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் !
என்னங்க? நிச்சயமா இது ஜூன் ஸ்பெ ஷல் தானே?
கொஞ்சம் இருங்க!!மேலே இருப்பது சுத்த அக்மார்க் பொய்!!
உண்மை:
இந்த செய்தியை மின்னஞ்சலில் பார்த்து எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியாது!!
முதலில், ஜூன் மாதத்தில் 30 நாட்கள் தான். இது நடக்க சாத்தியம் இல்லை.
மே மாதம் பார்க்க:
அடுத்து, இந்த நிகழ்விற்காக (5 வெள்ளி, சனி, ஞாயிறு) 823 வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை.. மார்ச் 2013 வரை காத்திருந்தால் போதும்!!
அப்படியென்றால் மார்ச் 2013 இல் வரும் நிகழ்வு (5 வெள்ளி, சனி, ஞாயிறு) அபூர்வமானதா? அதுவும் கிடையாது!!
இதற்கு முன்பு 5 வெள்ளி, சனி, ஞாயிறு வந்த மாதங்கள்: ஜனவரி 2010, அக்டோபர் 2010, சூலை 2011
அடுத்த வரவு: மார்ச் 2013, ஆகஸ்ட் 2014
ஏப்ரலில் பண்ணவேண்டியதை யாரோ ஜூனில் பண்ணிட்டாங்க.. ஃபிரீயா விடுங்க!!
28 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலண்டர் மீண்டும் திரும்பிவருவது குறிப்பிடத்தக்கது..
ஒரு மாதத்தில் 3 நாட்கள் ஐந்து முறை வர அந்த மாதத்தில் 31 நாட்கள் இருக்க வேண்டும். மேலும், அந்த வாரத்தின் முதல் நாள் தான் அந்த 5 வது வாரத்தின் அடித்தளம்.
அதாவது, 5 வெள்ளி, சனி, ஞாயிறு வர அந்த மாதத்தின் முதல் நாள் வெள்ளியாக இருக்க வேண்டும் !
படங்கள் நன்றி: கூகிள்
பின் குறிப்பு:
சொன்னாலும், சொல்லாவிட்டாலும், இந்த ஜூன் 2012 ஒரு முக்கியமான மாதம் தான். இந்த மாதத்தில் நிகழும் ஒரு மிக முக்கியமான காட்சியை நீங்கள் தவற விட்டால், அதை மீண்டும் காண நீங்கள் குறைந்தபட்சம் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அது என்ன நிகழ்வு? அதைப் பற்றி அடுத்த பதிவில்!!!
நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண: நம்பாதீங்க- தொடர்
//நீங்க என்ன சொல்றீங்க?//
பதிலளிநீக்குநாங்க என்னத்தைச் சொல்றது... :)!!
ஓ.. me the first - ஆ??!!!
பதிலளிநீக்குஆமா...
நீக்குஅடுத்த பதிவுக்கு 105 வருடங்கள் காத்திருக்க வேண்டாமல... ஹி.. ஹி... :):):) :D
பதிலளிநீக்கு105 மணி நேரம் கூடத் தேவையில்லை..
நீக்குஇதோ: http://www.aalunga.in/2012/06/2012-venus-transit.html
தெளிவான ஆதாரங்களுடன் விளக்கங்கள்... "நம்பாதீங்க" தொடரின் நோக்கத்தை சரியாகவே நிறைவேற்றும்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்குதொடர்ந்து ஆதரவு தாருங்கள்!!
அஹா...... என்னே ஒரு சிந்தனை !
பதிலளிநீக்குமெய்யாலுமே சொல்றீங்களா? இல்லை கலாய்க்குறீங்களா??
நீக்குநன்றி...