கூகிள் ஒரு அருமையான தேடல் களம். அதே நேரம் ஒரு கண்ணாடி. நாம் என்ன விரும்புகிறோமோ அதனை பிரதிபலிக்கும் திறம் கொண்டது. நீங்கள் கூகிள் தேடுபொறியில் (Google Search Engine) சில குறிச்சொற்களைக் (keywords) கொண்டு தேடும் போது, உங்களுக்காக பல அதிர்ச்சிகள் காத்து இருக்கலாம். நீங்களே விரும்பாத தளங்கள், சொற்களின் பயன்பாட்டால், தேடலின் முதல் பக்கத்தில் குவியலாம். காமக்களியாட்டங்கள் அல்லது விரும்பத்தகாத செய்திகளை உள்ளடக்கிய வலைத்தளங்களை உங்கள் தேடலில் வராமல் எப்படி தவிர்ப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்ப சரியான இடத்திற்குத் தான் வந்து இருக்கீங்க!! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்: கூகிள் தேடலின் போது வலது பக்கம் பாருங்கள். அங்கு இருக்கும் சக்கரத்தைச் சுட்டுங்கள். அதில் ' Search Settings' ஐ சொடுக்குங்கள். அடுத்து வரும் பக்கத்தின் முதலிலேயே "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!! வரும் பக்கத்தில் , "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ