முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)

நண்பர் "கோவை நேரம்" ஜீவானந்தம் அவர்கள் தனது வலைப்பூவில் தான் வானில் கண்ட அதிசயம் பற்றி " வானில் ஓர் அதிசயம்  என்கிற பதிவில் எழுதியிருந்தார்.  அது என்ன அதிசயம்? எப்படி நிகழ்கிறது? இங்கு பார்ப்போம்!! (அப்பாடா!! நாமளும் ஒரு பதிவு தேற்றியாச்சு) இந்த நிகழ்வு பரிவேடம் (Halo) என்று அழைக்கப்படுகிறது!!ஒளிவட்டம் என்றும் சொல்லலாம்! இது 22 டிகிரி (22 º) ஹாலோ ஆகும். இவை சூரியனில் மட்டுமல்ல, நிலவைச் சுற்றியும் வரும்.!!  இது எப்படி ஏற்படுகிறது? நமக்கு மேலே வானத்தில் சுமார் 5.5 கி.மீ உயரத்தில் உள்ள மேகங்கள்  மென்னடுக்கு முகில் ( Cirrostratus cloud) என்று அழைக்கப்படுகிறன. இவை பெரும்பான்மையாக பனித்துளிகளால் ஆனவை. இவற்றை வெறும் கண்ணால் பார்ப்பது அரிது. மேகங்களில் உள்ள பனிக்கட்டிகள் அனைத்தும் அறுகோண (Hexagon) வடிவில் இருக்கும். மேலும், அவை அனைத்தும் அடுக்கி வைத்தது போல ஒரே வரிசையில் இருக்காது!! ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு திசையில் இருக்கும்.  சூரியனின் ஒளிக்கதிர்கள் பனித்துகள்களின் மீது விழும் போது, அவை சூரிய ஒளியை திசை திருப்புகிறன (refraction). நாம் இந்த காட...

வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?

ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும்.  அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!!            இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம். வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு: https://incometaxindiaefiling.gov.in/ 1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள் . கணக்கை எப்படி உருவாக்குவது? தளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள். அடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு! (user id) ) அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க வேண...

கணித்தமிழ் அமுதம் மறைவு

வணக்கம் நண்பர்களே!! இந்த பதிவினைப் பல நாட்கள் கழித்து வெளியிடுவதற்கு வருந்துகிறேன். நம் தாய்மொழியாம் தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாக பல்வேறு பரிணாமங்களுக்கு இடையே தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்குப் பலரும் பல வழிகளில் பங்காற்றினர். அன்று மன்னர்கள் சங்கம் வைத்து முத்தமிழை வளர்த்தனர். இன்றோ, பல கணிணியாளர்களும் மென்பொருட்கள் மூலம் கணித்தமிழை வளர்க்கிறனர். அவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவர் திரு. ஆண்டோ பீட்டர் அவர்கள்.. இந்த வலைப்பூவினைப் படிக்கிறீர்களே!! அதற்குக் காரணமே அவர் தான்.... தமிழ் எழுத்துருக்களை கட்டற்ற முறையில் (Open source) முதன்முதலில் இலவசமாக உருவாக்கி அளித்தவர் அவர் தான். 1990 களில் கணிணி தமிழகத்தில் அறிமுகமாகிய போது, தமிழில் தட்டச்சு செய்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் மட்டுமே, அதற்கென உருவாக்கப்பட்ட கட்டண எழுத்துருக்களைக் கொண்டு  எழுத வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னலம் பாராது, தான் உருவாக்கிய "அமுதம்" என்னும் எழுத்துருவினை இலவசமாக இணையத்தில் வெளியிட்டார் பீட்டர். எனவே, எழுத்துரு பலரைச் சென்...

Bigrock.in மூலம் தளம் வாங்கியவரா நீங்கள்? உங்கள் கவனத்திற்கு!!

நண்பர்களே, கடந்த வெள்ளி (29-06-2012) மாலை முதல் (எனக்குத் தெரிந்து!!) எனது வலைப்பூ  தனது பிரதான தளத்தில் இருந்து (http://www.aalunga.in) திறக்கவில்லை.. அன்று மாலை ஒரு பதிவு எழுதி வெளியிட்டேன்.. Facebook, Twitter, Google Plus முதலியவற்றில்  தானாக வெளியிட வகை செய்துள்ளதால், அங்கு வெளியாகிவிட்டன. ஏனைய திரட்டிகளில் இணைக்கலாம் என்று தளத்திற்குச் செல்ல முனைந்த போது தான் பிரச்சனை புரிந்தது. Firefox, Chrome  இரண்டிலும்  ஒரே நிலை தான். ஆனால், அலைபேசி மூலம் (opera mini) நன்றாக பார்க்க முடிந்தது.  Feed மூலம் பதிவுகளைப் படிக்கவும் முடிந்தது. ஆனால், தளத்திற்குச் செல்ல முடியவில்லை. அப்போது இருப்பில் (online) இருந்த "கற்போம்' பலே பிரபு அவர்கள் தனக்கு தளம் திறப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எனது தளம் நன்றாக தெரிவதாகவும் சொன்னார். சில வழிமுறைகளைச் சொன்னார். ஒன்றும் பலனளிக்கவில்லை. ஆனால், தங்கம் பழனி அவர்களும், "அட்ராசக்க" செந்தில்குமார் அவர்களும் தங்கள் தளம் திறக்கவில்லை என்று சொன்னார்கள். ட்விட்டர் நண்பரான கூமுட்டை ( @ kuumuttai ) அவர்களோ தனக்குத் தளம் நன...

நியூட்டனின் இயக்க விதிகள்

அறிவியல் படிக்கும் பலருக்கும் முதலில் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் நியூட்டனின் மூன்று விதிகள் தான்... விதிகள் எளிமை என்றாலும், அவற்றை நினைவில் கொள்வது மாணவர்களுக்குச் சற்று சிரமமான காரியம் தான்... அவற்றை நினைவில் வைக்க எளிய வழியாய் உருவாக்கப்பட்டதே இந்த கதை!! நியூட்டன் தன் மூன்று விதிகளையும் எப்படி கண்டுபிடித்து இருப்பார் என்பதனை இப்படி எல்லோருக்கும் எளிதாக புரியும் வண்ணம் சுருக்கமாக சொல்லலாம் ------------------------------ ------------------------------ -------------------  ஒரு மாடு நடந்து போய்கொண்டு இருந்தது. நியூட்டன் அதை நிறுத்தினார்..மாடும் நின்றது. உடனே முதல் விதி உதயமானது ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது Every object continues in its state of rest, or of uniform motion in a straight line, unless compelled to change that state by external forces acted upon it அதன் பிறகு தன் பலம் முழுவதையும் சேர்த்து மாட்டிற...

தமிழ் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!

வணக்கம் நண்பர்களே... வழக்கம் போல எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்! அதில் இணைய திரட்டியான தமிழ்10 தளத்தில் இருந்து ஒரு மடல் இருந்தது. "Stenzer உங்கள் இடுகையில் கருத்து தெரிவித்து ள்ளார்" என்று .. 'அடடா... நாம எழுதுறதையும் படிச்சு பார்த்து ஒருத்தர் கமெண்ட் சொல்லியிருக்காங்களே!' என்று ஆர்வமாக அஞ்சலை வாசித்தேன்!!!! வணக்கம் aalunga,  தமிழ்10 தளத்தில் நீங்கள் பகிர்ந்த " அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!" என்னும் இடுகைக்கு "stenzer "கருத்து தெரவித்துள்ளார் . " ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி ( bintajaafar@yahoo.com ) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கி...

இந்தியப் பெண் பெற்ற 11 குழந்தைகள் (நம்பாதீங்க - பகுதி 11)

வணக்கம் நண்பர்களே.. நமது "நம்பாதீங்க" தொடர் வெற்றிகரமாக தனது 11 ஆம் பகுதியை வெளியிடுகிறது. 11 என்கிற எண்ணிற்கு என்ன சிறப்போ தெரியவில்லை.. இந்த பதிவும்  11 ஐப் பற்றியது தான்!! சில மாதங்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது. இந்தியப் பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார் என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர் அறிந்து இருப்பீர்கள். உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி இருக்கின்றன. இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம். இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித...