வணக்கம் நண்பர்களே!!
இந்த பதிவினைப் பல நாட்கள் கழித்து வெளியிடுவதற்கு வருந்துகிறேன்.
நம் தாய்மொழியாம் தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாக பல்வேறு பரிணாமங்களுக்கு இடையே தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்குப் பலரும் பல வழிகளில் பங்காற்றினர்.
அன்று மன்னர்கள் சங்கம் வைத்து முத்தமிழை வளர்த்தனர். இன்றோ, பல கணிணியாளர்களும் மென்பொருட்கள் மூலம் கணித்தமிழை வளர்க்கிறனர். அவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவர் திரு. ஆண்டோ பீட்டர் அவர்கள்..
இந்த வலைப்பூவினைப் படிக்கிறீர்களே!! அதற்குக் காரணமே அவர் தான்.... தமிழ் எழுத்துருக்களை கட்டற்ற முறையில் (Open source) முதன்முதலில் இலவசமாக உருவாக்கி அளித்தவர் அவர் தான்.
1990 களில் கணிணி தமிழகத்தில் அறிமுகமாகிய போது, தமிழில் தட்டச்சு செய்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் மட்டுமே, அதற்கென உருவாக்கப்பட்ட கட்டண எழுத்துருக்களைக் கொண்டு எழுத வேண்டி இருந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னலம் பாராது, தான் உருவாக்கிய "அமுதம்" என்னும் எழுத்துருவினை இலவசமாக இணையத்தில் வெளியிட்டார் பீட்டர். எனவே, எழுத்துரு பலரைச் சென்றடைந்தது.
Tiff , Tam, Tab, Unicode முதலிய வகை தமிழ் எழுத்துருக்களை (font) உருவாக்கியதில் பெரும்பங்காற்றிவர் பீட்டர். இன்று "amma" என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் "அம்மா" என்று தமிழில் எழுதும் படி செய்யும் பொனடிக் (phonetic) முறை உட்பட அனைத்து வகை விசைப்பலகை அமைப்புகள் உருவாக்கியதிலும் அவருக்கு பங்கு உண்டு.
அது மட்டுமா?
தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை (Multimedia) அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.
முதன்முதலில் "தமிழ்சினிமா" என்கிற தமிழ் இணைய இதழைத் துவங்கியதும் அவரே!!
கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிய ஆண்டோ பீட்டர் அவர்கள் சாப்டுவியூ (Softview) என்னும் மென்பொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் அவர்கள். கணித்தமிழுக்கு பெரும் பங்காற்றிய ஆண்டோ பீட்டர் அவர்கள் கடந்த சூலை 12 ஆம் நாள் (12-07-2012) அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
இது தான் மறைந்த ஆண்டோ பீட்டர் அவர்களின் அறையை அலங்கரித்த வாசகம். இதனைப் பின்பற்றுவதே அன்னாருக்கு நாம் செய்யும் மரியாதை!!
இயன்ற அளவு தமிழைப் பயன்படுத்துவோம்..
கணித்தமிழ் பற்றிய விழிப்புணர்வை அளிப்போம்!!
அன்னாரது வலைப்பூ: கணியரசு
அவரைப் பற்றி விக்கிபீடியாவில் உள்ள கட்டுரை: ஆண்டோ பீட்டர்

தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கள்
இது தான் மறைந்த ஆண்டோ பீட்டர் அவர்களின் அறையை அலங்கரித்த வாசகம். இதனைப் பின்பற்றுவதே அன்னாருக்கு நாம் செய்யும் மரியாதை!!
இயன்ற அளவு தமிழைப் பயன்படுத்துவோம்..
கணித்தமிழ் பற்றிய விழிப்புணர்வை அளிப்போம்!!
அன்னாரது வலைப்பூ: கணியரசு
அவரைப் பற்றி விக்கிபீடியாவில் உள்ள கட்டுரை: ஆண்டோ பீட்டர்
மிக பெரிய இழப்பு தமிழுக்கு
பதிலளிநீக்குதமிழ் இணையங்களில் வளர்ந்து புதிய பரிணாமத்தை அடைய காரணமாக இருந்த திரு. ஆண்டோ பீட்டர் பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி!
பதிலளிநீக்குதிரு. ஆண்டோ பீட்டர் இழப்பு ஈடு செய்ய இயலாதது!
பதிலளிநீக்குமறக்க முடியாத இழப்பு...
பதிலளிநீக்குஒவ்வொரு சொல்லையும் ஆங்கிலத்தில் டைப் செய்து விட்டு space bar அழுத்தும் போதெல்லாம் அவை சொல்லும் அவரது பெயரை.....
அவரின் தளத்திற்கு செல்கிறேன்.....
நன்றி... (த.ம. 3)
திண்டுக்கல் தனபாலன்
தமிழுக்கு அரும்தொண்டாற்றிய ஆண்டோ பீட்டர் அவர்களை இழந்திருக்கிறோம்.. என்னுடைய அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..
பதிலளிநீக்குமிகச் சிறந்த மனிதர். அவரின் இழப்பு தமிழ் கணினி உலகுக்கு பெரிய அதிர்ச்சி. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
பதிலளிநீக்குஅவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! ஆனால் அவர் தமிழால் வாழ்கின்றார்!சாதனையளர்கள் மரிப்பதில்லை......
பதிலளிநீக்குஒரு நல்ல மனிதர்... கம்ப்யூட்டர் தமிழுக்கு அரும் தொண்டாற்றியவர்... அவரது இறப்பு தமிழ் நல்லுலகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 45 வயதிற்குள் அவர் மிகப்பெரிய சாதனைகளை செய்துவிட்டார். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... என்னும் வரிகளுக்கு ஏற்ப வாழ்த்து காட்டியவர் திரு. ஆன்டோ பீட்டர் அவர்கள்... அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...
பதிலளிநீக்குதமிழுக்குப் பெருமை சேர்த்த அந்த மாமனிதரின் மறைவு குறித்து வருந்தும் அதே நேரத்தில் அவரை நினைவு கூர்ந்த தங்களின் கடமை உணர்வைப் போற்றுகிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
ஆழ்ந்த இரங்கல்கள்..!!
பதிலளிநீக்குஇதனை கேள்விப்பட்ட அன்றே என்னால் நம்ப முடியவில்லை. தமிழ் உலகுக்கு பெரிய இழப்பு.
பதிலளிநீக்குஅய்யோ மாபெரும் மனிதன் ஆயிற்றே அவர்.....!
பதிலளிநீக்குஎன்னுயிரும் தமிழ் பேசி மடிய வேண்டும் என்று நம்மை விட்டு பிரிந்தாரோ....அன்னாருக்கு என் ராயல் சல்யூட்டும், அஞ்சலிகளும்...
ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்கு