நண்பர் "கோவை நேரம்" ஜீவானந்தம் அவர்கள் தனது வலைப்பூவில் தான் வானில் கண்ட அதிசயம் பற்றி "வானில் ஓர் அதிசயம் என்கிற பதிவில் எழுதியிருந்தார்.
அது என்ன அதிசயம்? எப்படி நிகழ்கிறது? இங்கு பார்ப்போம்!!
(அப்பாடா!! நாமளும் ஒரு பதிவு தேற்றியாச்சு)
இந்த நிகழ்வு பரிவேடம் (Halo) என்று அழைக்கப்படுகிறது!!ஒளிவட்டம் என்றும் சொல்லலாம்! இது 22 டிகிரி (22º) ஹாலோ ஆகும்.
இவை சூரியனில் மட்டுமல்ல, நிலவைச் சுற்றியும் வரும்.!!
இது எப்படி ஏற்படுகிறது?
நமக்கு மேலே வானத்தில் சுமார் 5.5 கி.மீ உயரத்தில் உள்ள மேகங்கள் மென்னடுக்கு முகில் (Cirrostratus cloud) என்று அழைக்கப்படுகிறன. இவை பெரும்பான்மையாக பனித்துளிகளால் ஆனவை. இவற்றை வெறும் கண்ணால் பார்ப்பது அரிது.
மேகங்களில் உள்ள பனிக்கட்டிகள் அனைத்தும் அறுகோண (Hexagon) வடிவில் இருக்கும். மேலும், அவை அனைத்தும் அடுக்கி வைத்தது போல ஒரே வரிசையில் இருக்காது!! ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு திசையில் இருக்கும்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் பனித்துகள்களின் மீது விழும் போது, அவை சூரிய ஒளியை திசை திருப்புகிறன (refraction). நாம் இந்த காட்சியைப் பார்ப்பதற்குக் காரணம் சூரிய ஒளியின் பாதைக்கு ஓரளவு செங்குத்தாக இருக்கும் துகள்கள் தான்!!
ஒளிக்கதிர்கள் அவற்றின் வழியே போகும் போது, கதிர்கள் 21.7º - 50º திரும்புகிறன. செங்குத்தான எல்லா படிகங்களின் ஒளியின் கீற்றே நமக்கு ஒளிவட்டமாக தெரிகிறது!!
பெரும்பாலான கதிர்கள் 21.7º திரும்புகிறன. சில வேறு கதிர்கள், துகளின் நிலையைப் 50º வரை திரும்பும்.
எனவே, தான் உள் வளையம் (21.7º) மிகவும் பிரகாசமாகவும், வெளி வளையம் வெளிச்சம் குன்றியும் இருக்கிறது!
இன்னொரு விசயம் கவனித்தீர்களா?
வளையத்திற்கும் சூரியனுக்கும் இடையே இருட்டாக இருக்கிறது!!
அதன் காரணம், 21.7º கோணத்திற்குக் குறைவாக ஒளித்திருப்பல் இருக்காது (Refraction). ஒளி இல்லாத காரணத்தால் அந்த இடைவெளி இருட்டாக இருக்கிறது!!
டிஸ்கி:

பனித்துகளின் முறிவுக்குணகம் (Refracrive Index) n_prism = 1.31
காற்றின் முறிவுக்குணகம் n_medium= 1.00027
அறுகோணத்தின் ஒரு பக்கம் σ = 60º

இதில் உள்ளிட்டால், ஒளி திரும்பும் திசைக் கோணம் δ = 21.7º!!
2. நிலா ஹாலோக்கள் மழை வருகையைக் குறிப்பிடுகிறன. என்றாலும், அவை நம்மூர் வானிலை அறிக்கை போலத் தான்.. வரும்.. ஆனா, வராது!! (உண்மையை 'நிலவ'ன்பனிடம் தான் கேட்கணும்)
3. இதேபோல 46 டிகிரி, 90 டிகிரி ஹாலோக்களும் உண்டு.
நன்றி:
"கோவை நேரம்" ஜீவானந்தம் அவர்கள் (பதிவின் கரு மற்றும் படம்)
Atmospheric Optics , HyperPhysics , Florida Unversity (படம்), Code Cogs (LaTeX)

1. அது என்னய்யா கணக்கு 21.7 டிகிரி (21.7º)
எல்லாம் இயற்பியல் தான்!!

அப்துல் பாஸித் சொன்னது
பதிலளிநீக்கு//எனக்கு Halo வீடியோ கேம் தான் தெரியும். இது புதிய தகவல். //
:) :) :)
நீக்குஎன்னங்க இது.. இங்க என்ன நடக்குது? :D
நீக்குவரலாற்று சுவடுகள்: ஹி..ஹி.. அவர் ஒரு தடவை சொன்னார். நான் இன்னொரு தடவை போஸ்ட் பண்ணேன்! :D
நீக்குஅருமையான, எளிமையான விளக்கம்.. இப்போது ஒளிவட்டம் ஏற்படும் காரணம் என்ன என்பதை தெரிந்துகொண்டேன். பிறருக்கும் விளக்க முடியும்.
பதிலளிநீக்குபகிர்வினுக்கு நன்றி "ஆளுங்க" சார்..!
ஆஹா...!உண்மை தெரிஞ்சிருச்சு.....!
பதிலளிநீக்குஅந்த பதிவில் நான் ‘halo' பற்றிக் கூறினேன். நீங்கள் அதை மேலும் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளீர்கள். இப்பொழுது நன்றாக புரிந்தது. [எனக்கெல்லாம் படம் போட்டு விளக்கினால் தான் புரியும் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?]
பதிலளிநீக்குநன்றிகள்
நண்பரே, எனக்கும் அப்படித் தான்!!
நீக்குபடம் போட்டு விளக்கினால் நன்கு புரியும்!
கருத்திற்கு நன்றி!
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குreal super thanks.
பதிலளிநீக்குWow. Nice. Kovai neram parthen. Arumaiyaana vilakkam. Thx boss. Appadiye namma pakkamum konjam vangalen?
பதிலளிநீக்குhttp://newsigaram.blogspot.com
Wow. Nice. Kovai neram parthen. Arumaiyaana vilakkam. Thx boss. Appadiye namma pakkamum konjam vangalen?