முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரட்டைச் சூரியன்களைச் சுற்றும் இரட்டைக் கோள்கள் (மெய்யாலுமே நம்புங்க!)

ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தில் இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும்?


உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் கோள்கள் உண்டு!!


அமெரிக்காவில் உள்ள  நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்தது தான் இந்த அதிசயத்தக்க உண்மை!!

ஒரு சூரியனைச் சுற்றும் கோள்களைக் கொண்ட சூரிய குடும்பங்களையோ (Multi-planet systems)  , அல்லது  இரு சூரியன்களைச் சுற்றும் ஒரே கோளையோ (Circumbinary planetary system) கொண்ட சூரிய குடும்பங்களையோ தான் இதுவரை கெப்லர் கண்டறிந்துள்ளது.

 தற்பொழுது  கெப்லர் கண்டறிந்துள்ள சூரிய குடும்பம் மிகவும் வினோதமானது!

அதில் இரண்டு சூரியன்கள் இருப்பது விசித்திரமல்ல! இரட்டைச் சூரியன்களை இரண்டு  கோள்கள் சுற்றுவது தான் அதிசயம்!!

அந்த கண்கொள்ளாக் காட்சி எப்படி இருக்கும்? ஒரு ஓவியரின் கற்பனை இதோ:

 
என்ன நண்பர்களே? 'நம்பாதீங்க' படித்து படித்து இதை நம்ப மனம் மறுக்கிறதா?



ஆனா, மெய்யாலுமே இதை நம்பலாம்!!  

இந்தத் தகவலை நாசா அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அந்த அதிசய குடும்பத்திற்கு கெப்லர் 47 (Kepler 47)  என்று பெயரிடப்பட்டுள்ளது.  நம் பூமியில் இருந்து சுமார் 4900 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ள சிக்னஸ் [Cygnus] நட்சத்திரக் கூட்டத்தில்  உள்ளது!!
[4900 ஒளிஆண்டுகள் = 46 மத்தியம் கி.மீ = 4.6 லட்சம் கோடி கோடி கி.மீ!! {தவறாக இரு முறை கோடி என்று எழுதவில்லை!}]

கெப்லர் 47 குடும்பத்தில் உள்ள ஒரு  நட்சத்திரம் நமது சூரியனின் அளவில் உள்ளது. ஆனால், அதன் ஒளி சூரியனைப் போல் அவ்வளவு பிரகாசமாக இல்லை. சூரியனுடன் ஒப்பிடுகையில், சுமார் 84% பிரகாசமாக  உள்ளது.

மற்றொன்றோ, சூரியனில் மூன்றில் ஒரு பங்கு அளவில், 1% -க்கும் குறைவான பிரகாசத்துடன் உள்ளது. ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கே வரும் போது, 7.5 (பூமி) நாட்களுக்கு ஒரு முறை கிரகணங்கள் ஏற்படுகிறன.

இரட்டை சூரியன்களுக்கு அருகில் உள்ள கெப்லர்  47 b (Kepler-47b) கோள் இவற்றைச் சுற்றி வர சுமார் 50 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இது பூமியைப் போல மூன்று மடங்கு பெரிதாய் இருக்கிறது.  

வெளியில் உள்ள கெப்லர்  47 c (Kepler-47c) நெப்டியூனின் அளவினை விட சிறிது பெரிதாய் இருக்கிறது (பூமியைப் போல 17 மடங்கு). இரு சூரியன்களைச் சுற்றி வர  303 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.



கெப்லர்  47 c உயிர் வாழத் தகுந்த தூரத்தில் (Habitable zone) இருந்தாலும், அது ஒரு வளிமப் பெருங்கோளாக (Gas giant) இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அப்படி இருப்பின், அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பில்லை. ஏனெனில், தண்ணீர் அடர்ந்த நீராவி வடிவத்தில் தான் இருக்கும். இதனைப் பற்றிய ஆய்வுகள் தொடர்கிறன.

"உயிர்களின் செல்ல கோளுக்கான தேடல்" இன்னும் தொடர்கிறது. நமது பூமியைத் தவிர வேறு எதையும் கெப்லர் கண்டறியுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!!


ஆதாரம்:  நாசா வலைத்தளம்

கொசுறு:
  • கெப்லர் 16  கண்டறியப்பட்ட பின்னர்,  கெப்லர் 34, கெப்லர் 35, கெப்லர் 38 என மேலும் மூன்று இரட்டை சூரியகுடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  கெப்லர் 47 நான்காவது ஆகும். 

  • 4900 ஒளிஆண்டுகள் = 46 மத்தியம் கி.மீ = 4.6 லட்சம் கோடி கோடி கி.மீ!!             {தவறாக இரு முறை கோடி என்று எழுதவில்லை!}

அவிழ்மடல்

கருத்துகள்

  1. //

    4900 ஒளிஆண்டுகள் = 46 மத்தியம் கி.மீ = 4.6 லட்சம் கோடி கோடி கி.மீ!! {தவறாக இரு முறை கோடி என்று எழுதவில்லை!}
    //

    இதனை கட்டுரையிலும் மாற்றிவிடுங்கள் நண்பரே!

    ஏனெனில் கொசுறுவை எல்லோரும் படிப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள், புரிதலுக்கு நன்றி!

    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  2. உங்களால் தான் அரிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்... (TM 3)

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் தோழா... எப்போதும் வானியலில் கலக்குகிறீர்களே? உங்கள் பேவரிட்டா?

    பதிலளிநீக்கு
  5. அருமை..எளிமையான விளக்கம். அரிதான தகவல்கள்..!

    இதுதான் ஆளுங்க அவர்களின் திறமை.. !!!

    பதிலளிநீக்கு
  6. படித்து கருத்திட்ட வரலாற்று சுவடுகள், திண்டுக்கல் தனபாலன், ஆட்டோமொபைல்,
    அருண்பிரசாத் வரிக்குதிரை மற்றும் தங்கம் பழனி ஆகியோருக்கு என் நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...

தமிழ் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!

வணக்கம் நண்பர்களே... வழக்கம் போல எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்! அதில் இணைய திரட்டியான தமிழ்10 தளத்தில் இருந்து ஒரு மடல் இருந்தது. "Stenzer உங்கள் இடுகையில் கருத்து தெரிவித்து ள்ளார்" என்று .. 'அடடா... நாம எழுதுறதையும் படிச்சு பார்த்து ஒருத்தர் கமெண்ட் சொல்லியிருக்காங்களே!' என்று ஆர்வமாக அஞ்சலை வாசித்தேன்!!!! வணக்கம் aalunga,  தமிழ்10 தளத்தில் நீங்கள் பகிர்ந்த " அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!" என்னும் இடுகைக்கு "stenzer "கருத்து தெரவித்துள்ளார் . " ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி ( bintajaafar@yahoo.com ) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கி...

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...