முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செவ்வாய் கிரகத்தில் இரட்டை சூரியன்கள் (நம்பாதீங்க - பகுதி 13)

சமீபத்தில், நாசா அனுப்பிய கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக  தரையிறங்கியதை அறிந்திருப்பீர்கள். கியூரியோசிட்டி படங்களாக எடுத்து தள்ளுவதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

அப்படி அனுப்பிய படம் ஒன்றைப் பார்த்த நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  பல வானியலாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறனர். படத்தைப் பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.





என்ன? ஆச்சரியமாக இருக்கிறதா?
செவ்வாய் கிரகத்தில் தெரியும் இந்த இரட்டை சூரியன்கள் தான் தற்போதைய சூடான சர்ச்சை (Hot topic).

என்னங்க? நீங்களும் ஆராயப் போறீங்களா?
கொஞ்சம் பொறுங்க!!

யாரோ சும்மா விளையாட்டுக்குச் செய்த படம்!!! இது தான் சமீப காலத்தில் அதிகமாக பரப்பப்படும் படம். 


உண்மை

படத்தின் பிண்ணனியில் இருக்கும் மலை / மேடு  ஆகியவை மெய்யாலுமே செவ்வாயில் உள்ளவை தான். (நம்புங்க!!). இந்தக் காட்சியை நாசாவின் தளத்திலும் காணலாம்.
 

இந்தப் படம் கூட கியூரியோசிட்டி எடுத்ததல்ல! 2005 மே 19 அன்று மாலை (செவ்வாய்), நாசா அப்போது அனுப்பியிருந்த ஸ்பிரிட் தரையுளவி (NASA's Mars Exploration Rover Spirit ) எடுத்தது. 


அப்ப அந்த இரட்டை சூரியன்கள்?

ஸ்டார் வார்ஸ் (Star Wars) பார்த்திருக்கீங்களா? (நானும் பார்த்ததில்லை!)
கதையில் இரு சூரியன்களைச் சுற்றும் டேட்டூஇன் (Tatooine) என்ற கிரகம் வரும்.
[Star Wars Episode IV: A New Hope" (LucasFilm, 1977)]

திரைப்படத்தில் வரும் காட்சி:


இப்ப புரியுதா ?

கண்ணா, இரண்டு சூரியனைப் பார்க்க ஆசையா? அப்ப நீங்க போக வேண்டியது கெப்லர் 16 B 

நன்றி : Bad Astronomy , Hoax Slayer

நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண:  நம்பாதீங்க- தொடர்

அவிழ்மடல்

கருத்துகள்

  1. நண்பா புதிய தகவல்கள் நேரம் கிடைக்கும் போது பழசையும் வாசித்து முடிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. நாசா சொன்னாக்கூட நாங்க நம்பமாட்டமில்ல பாஸ்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    பதிலளிநீக்கு
  4. அருமை.. ஆளுங்க. நிறைய பயனுள்ள தகவல்களை சுவராஷ்யமா திரட்டித் தர்றீங்க.. ஆதாரத்தோடு பதிவுகள் எழுதுவதுதான் உங்களுடைய தனித்தன்மை என்று நினைக்கிறேன்..

    தொடர்ந்து எழுதுங்க. என்னுடைய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் நல்ல தகவல்... தினமும் உங்கள் பதிவை எதிர்பார்க்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  6. இது ஒரு சமுதாய சேவை..........மக்களை தவறான தகவல்களிலிருந்து திசை திருப்பும் நல்ல சேவை !

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
    கோப்பை வென்ற இளம் இந்தியா!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

    பதிலளிநீக்கு
  8. திமுகவுல ஏகப்பட்ட சூரியன்கள் இருப்பதாக கேள்வி. :-))))

    பதிலளிநீக்கு
  9. அருமை சார்...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)

    பதிலளிநீக்கு
  10. இரட்டை சூரியன் ஸ்டார் வார்ஸ் உடன் இணைத்து எழுதிய விளக்கம்...பாஸ் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)

    பதிலளிநீக்கு
  11. சும்மா சொல்லக் கூடாது... எப்படியெல்லாம் புரளி கிளப்புறாங்க.. ஸ்டார் வார்ஸ் மூன்று படங்களை மட்டும் தான் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்னதை பார்க்கவில்லை.

    //கண்ணா, இரண்டு சூரியனைப் பார்க்க ஆசையா? அப்ப நீங்க போக வேண்டியது கெப்லர் 16 B
    //

    ஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  12. சிறப்பான பகிர்வு. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...

தமிழ் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!

வணக்கம் நண்பர்களே... வழக்கம் போல எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்! அதில் இணைய திரட்டியான தமிழ்10 தளத்தில் இருந்து ஒரு மடல் இருந்தது. "Stenzer உங்கள் இடுகையில் கருத்து தெரிவித்து ள்ளார்" என்று .. 'அடடா... நாம எழுதுறதையும் படிச்சு பார்த்து ஒருத்தர் கமெண்ட் சொல்லியிருக்காங்களே!' என்று ஆர்வமாக அஞ்சலை வாசித்தேன்!!!! வணக்கம் aalunga,  தமிழ்10 தளத்தில் நீங்கள் பகிர்ந்த " அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!" என்னும் இடுகைக்கு "stenzer "கருத்து தெரவித்துள்ளார் . " ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி ( bintajaafar@yahoo.com ) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கி...

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...