
நீங்கள் தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க முற்படும் போது, திருடர்கள் தாக்கினால் என்ன செய்வீர்கள்?
'அது தான் படித்திருக்கோமே.. ATM-இல் PIN எண்ணை உள்ளிடும் போது, அதை Reverse -இல் அடித்தால், உடனே போலீஸ்க்குத் தகவல் போகும். எளிதாகத் தப்பித்து விடலாம்! பிரச்சனை இல்லை ' என்று நினைக்கிறீர்களா?
அப்ப இது உங்களுக்குத் தான்!!
இதைப் பற்றிய ஒரு மிக அருமையான புரட்டு உண்டு (தமிழாக்கம்):

நீங்கள் ஒரு தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க அறையின் உள்ளே நுழைகிறீர்கள்.. அப்போது, இரு திருடர்கள் உள்ளே புகுந்து உங்களைத் தாக்குகிறார்கள்.. பணம் கேட்டு உங்களை மிரட்டுகிறார்கள்.
என்ன செய்வது?
அவர்களிடம் தர்க்கம் செய்ய வேண்டாம்..
வழக்கம் போல் உங்கள் அட்டையைப் பயன்படுத்துங்கள்.. ஆனால், சங்கேத குறியீட்டு எண்ணைத் தலைகீழாக இடுங்கள்.
உ.தா: உங்கள் பின் எண் 1254 என்றால் 4521 என்று அழுத்துங்கள்..
நீங்கள் இப்படி திருப்பி எண்ணை இடும் போது, பணம் வழக்கம் போல் வெளிவரும்.. ஆனால், இயந்திரத்தில் சிக்கி கொண்டு வெளியே வராது.. என்ன முயற்சி செய்தாலும் பணம் வெளியே வராது!!
அதே சமயம், உங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு திருட்டு முயற்சி பற்றிய எச்சரிக்கை சென்று விடும்..
இந்த வசதி எல்லா ATM களிலும் உண்டு.. ஆபத்தையும், ஆபத்து சமயத்தில் உதவி பெறவும் இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது!!
உண்மை:
இதை யாராவது பரிசோதித்துப் பார்த்து இருக்கிறீர்களா?
இது ஒரு மிகப் பெரிய புரளி...
நீங்கள் திருப்பி அடித்தால், PIN NUMBER WRONG என்ற செய்தி வந்து மீண்டும் எண்ணைக் கேட்குமே தவிர, பணம் வராது!!
முயற்சி செய்யுங்கள்!!
இப்படி ஒரு முறையே நடைமுறையில் இல்லை..
உங்களுக்குக் காவல் துறையில் ஒரு நண்பர் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள்!!
1994 ஆம் ஆண்டு ஜோசப் சிங்கர்ட் என்பவர் , மேற்கூறிய திட்டம் உடைய ATM
மென்பொருளை உருவாக்கினார். அவர் பல வங்கிகளுக்கு அதைக் கொடுக்க முயன்றார்..
ஆனால், பலன் இல்லை..
எனவே, திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், செயலாக வில்லை..
திட்டம் செயலாகாமல் போக முக்கிய காரணங்கள்:
* இருவழியொக்கும் எண்களை (Palindromic Numbers) சங்கேத எண்ணாக வைக்க
முடியாது (உ.தா: 1221, 3333). இது வாடிக்கையாளர்கள் தங்கள் சங்கேத எண்ணைத்
தேர்வு செய்வதில் ஒரு தடையை (constraint) உருவாக்குகிறது
* ஒருவர் தவறாக எண்ணைத் திருப்பி அடித்தால் பொய் எச்சரிக்கை வரும்.
* காவல் நிலையம் இயந்திரத்திற்கு மிக அருகில் இருக்க வேண்டும். இல்லையேல், திருடர்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனி காவலரை
நியமிப்பது நடைமுறைக்குச் சாத்தியம் அல்ல.
* திட்டம் அமலாக்கப்பட்டால், இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விழிப்பு ஊட்ட வேண்டும்..வாடிக்கையாளர்களுள் திருடர்கள் மறைந்திருக்க வாய்ப்பு உண்டு.
* திட்டம் அமலாக்கப்பட்டால், சில நாட்களில் திருடர்களுக்கும் இந்த விடயம் தெரிந்து விடும். அதன் பிறகு, இதில் உபயோகம் இல்லை.
ஆதாரம்: ஹோக்ஸ் லேயர்
தொடரின் முந்தைய பதிவு: நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ?
தொடரின் அடுத்த பதிவு: அலைபேசியின் தயாரிப்பு இடம் தெரியணுமா?
தொடரின் அடுத்த பதிவு: அலைபேசியின் தயாரிப்பு இடம் தெரியணுமா?
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
இதுல இப்படியெல்லாம் இருக்கா.. ? ஒரு விழிப்புணர்வு பதிவு.
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அருண்..!!
இறுதியாக உண்மை வெளிச்சமிடப்பட்டது
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !
பதிலளிநீக்குபடித்து கருத்து கூறிய தங்கம் பழனி, சரவண குமார் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கு நன்றி!
பதிலளிநீக்குபயனுள்ள விழிப்புணர்வு பதிவு. நன்றி!
பதிலளிநீக்குஒரு வேழை சரியான பின் இலக்கத்தை கொடுத்து விட்டு பணத்தை எடுக்கும் பொது பின் இலக்கத்தை தலைகீழாக அடிக்கச்சொல்லி இருக்கலாம்
பதிலளிநீக்கு