நண்பர்களே,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகிள் பிளாக்கர் செய்த ஒரு காரியம் பலருக்குப் பெரும் இடியாய் விழுந்தது. blogspot.com என்கிற டொமைன்-ஐ அந்தந்த நாட்டின் தனி டொமைன்களாக மாற்றி விட்டது (இந்தியாவில் blogspot.in). இந்த மாற்றத்தை எவ்வித மின்னறிவிப்பும் இன்றி செய்து முடிந்தது பிளாக்கர்.
இதனால், பல பதிவர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர். பதிவுகளில் பார்வைகளை அளக்கும் அளவீடுகள் (அலெக்ஸா, அனலிடிக்ஸ்) அனைத்திலும் பலரும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். திரட்டிகளில் பதிவுகளை இணைக்கவும் படாத பாடு பட வேண்டி இருந்தது.
தனி டொமைன் வைத்திருந்த அன்பர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை! இன்னும் சில நாட்களில் பிளாக்கரில் இல்லாத பதிவுகளுக்கு Google Friend Connect கிடைக்காது என்று கூகிள் அறிவித்துள்ளது. பிளாக்கருக்கான Friend Connect வசதியினையும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தும் சூழ்நிலை உள்ளது.
இன்னும் சிறிது நாட்களில் பிளாக்கரையே மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிளாக்கரில் எந்த மாற்றம் வந்தாலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு சிறந்த வழிகளுள் ஒன்று நம் வலைப்பூவினைப் பிளாக்கர் அல்லாத டொமைனில் வைப்பது (மற்றொன்று எதுவும் எழுதாமல் இருப்பது).
இதையெல்லாம் பற்றி கொஞ்ச நாட்களாக யோசித்ததால்...

இன்று (19-02-2012) முதல் அவிழ்மடல் தனியொரு திரளத்தில் ( Domain) இயங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
அவிழ்மடலின் புதிய முகவரி: http://www.aalunga.in/
என்னை Google Friend Connect (Follower Gadget) மூலம் தொடர்பவர்கள் ஒரு முறை Unfollow செய்த பின் மீண்டும் Follow செய்யவும்.
(வழிமுறைகளுக்கு: பிளாக்கர் நண்பன் )
பி.கு:
* மாற்றத்திற்குத் தூண்டி பதிவுகள் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்..
* வழிமுறைகளைக் காட்டிய தங்கம் பழனி அவர்களுக்கும், அதில் வலைப்பூவினை இணைக்க வழிகாட்டிய "கற்போம்" தளத்திற்கும் நன்றி!!
<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>
புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா!
நீக்குதங்களின் .in தளத்திற்கு வாழ்த்துகள் ஆளுங்க.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே !
பதிலளிநீக்கு