ஒரு இனிய காலைப் பொழுதில் வானத்தில் இரண்டு சூரியன்களை பார்த்தால் எப்படி இருக்கும் ? உண்மையில் அப்படி இரு சூரியன்கள் தெரியும் கோள்கள் உண்டு!! அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்தது தான் இந்த அதிசயத்தக்க உண்மை!! ஒரு சூரியனைச் சுற்றும் கோள்களைக் கொண்ட சூரிய குடும்பங்களையோ ( Multi-planet systems) , அல்லது இரு சூரியன்களைச் சுற்றும் ஒரே கோளையோ (Circumbinary planetary system) கொண்ட சூரிய குடும்பங்களையோ தான் இதுவரை கெப்லர் கண்டறிந்துள்ளது. தற்பொழுது கெப்லர் கண்டறிந்துள்ள சூரிய குடும்பம் மிகவும் வினோதமானது! அதில் இரண்டு சூரியன்கள் இருப்பது விசித்திரமல்ல! இரட்டைச் சூரியன்களை இரண்டு கோள்கள் சுற்றுவது தான் அதிசயம்!! அந்த கண்கொள்ளாக் காட்சி எப்படி இருக்கும்? ஒரு ஓவியரின் கற்பனை இதோ: என்ன நண்பர்களே? ' நம்பாதீங்க ' படித்து படித்து இதை நம்ப மனம் மறுக்கிறதா? ஆனா, மெய்யாலுமே இதை நம்...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ