அன்பு நண்பர்களே, ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல். என்பது வள்ளுவர் வாக்கு . ( உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை) ஒரு ஆர்வத்தில் வலைப்பூ ஆரம்பித்து, பல நாட்கள் கழித்து நண்பர்கள் சிலர் கொடுத்த ஊக்கத்தால் பதிவுகள் எழுதத் துவங்கினேன். எனது முதல் சில பதிவுகளுக்கு என் நண்பர்கள் மட்டுமே வாசகர்கள். அதன் பின் வந்த வாசகர்களும் என் நண்பர்கள் ஆனார்கள். நண்பர் ' வீடு சுரேஷ் ' அவர்கள் எனக்கு லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) என்கிற விருதினை அளித்துள்ளார். இந்த விருதினை அவர் விருதுகள் எனும் ஊக்கமருந்து! என்கிற பதிவின் மூலம் அளித்துள்ளார். விருதிற்குக் காரணமான பதிவு: தானியக்க வங்கி இயந்திரத்தில் திருடர்களை தவிர்ப்பது எப்படி? வலையில் எழுதத் துவங்கிய பின், எனக்கு கிடைத்த முதல் விருது இது தான். எனது பதிவுகளை அங்கீகரித்து எனக்கு இந்த விருதினை வழங்கிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள். < லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog) ...
ஆளுங்க உலகுடன் உரையாடும் வலைப்பூ