முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அணைக்காமல் அணையுங்கள்!!!





நான் சொல்லப்போகும் செய்தி பலருக்குத் தெரிந்திருக்கலாம்...
தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்திலேயே பதிவிடுகிறேன்!! 

நீங்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பல இடங்களில் கீழ்காணும் சொற்தொடரைக் காணலாம்:




பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாடுத் தளங்கள், தன்னியக்க வங்கி இயந்திரம், எரிபொருள் கிடங்குகள், எனப் பல இடங்களில் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்லி வற்புறுத்தும் வாசகங்கள் இருக்கும்!!!



நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டி வந்தால், கண்டிப்பாக உங்கள் அலைபேசியை அணைக்க சொல்வார்கள்!!!


ஏன் அவர்கள் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கண்டிப்பாக தெரிந்து இருக்கும்....

  • அலைபேசியில் பேசுவது பிறருக்கு இடையூராக இருக்கலாம்
  • அலைபேசியின் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அங்கே உள்ள மின்னணு சாதனங்கள் சரி வர இயங்காமல் போகலாம்..

பிறருக்கு இடையூறாக இருக்கும் என்றால் அலைபேசியை அமைதி முறையில் வைப்போம் (Silent)




அமைதி முறையில் அலைபேசி இருக்கும் போது, அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்தால் ஒலி மூலம் அறிவிப்பதற்கு பதிலாக அதிர்வுகள் மூலம் அறிவிக்கும் . இதன் மூலம், அலைபேசி வைத்து இருப்பவர் தகவல் அறிந்து கொண்டு வெளியே சென்று பேசி வரலாம்..

அதற்கான திட்டம் தான் இது!!!

ஆனால், எல்லா இடங்களிலும் இது பொருந்தாதே???
மின்னணு சாதனங்கள் உள்ள அறையில் என்ன செய்வது? 
அந்த அதிர்வுகள் கூட பிற சாதனங்கள் செயல்பட இடையூராக இருக்கலாம் அல்லவா?

அலைபேசியை அணைத்து விடுவது மட்டும் தான் ஒரே வழியா?


அது தேவை இல்லை!!
உங்கள் அலைபேசியை அணைக்காமலே அணைத்த மாதிரி செய்யலாம்

உங்கள் அலைபேசியில் "FLIGHT MODE" (சில அலைபேசிகளில் Offline Mode/ Airplane Mode) என்று இருக்கும்.. அதை இயக்குங்கள்!!!





நோக்கியா அலைபேசி:
Settings --> Profiles --> FLIGHT MODE
கருவிகள் --> சுய விவரங்கள் --> FLIGHT MODE

இப்போது திரையைப் பாருங்கள்!!
உங்கள் அலைபேசி சேவை சக்தி (Network Signal Strength ) மாயமாக போய் இருக்கும் !!



இந்த முறையில் நீங்கள் அலைபேசி சேவை சார்ந்த எந்த வேலையையும் செய்ய முடியாது.. எனவே, அதிர்வலைகள் கிளம்ப வாய்ப்பு இல்லை!!


ஆனால், பிறவற்றை (இசை, விளையாட்டு, நிழற்படம்,படக் கருவி) முதலியவற்றை எந்த தங்கு தடையும் இன்றி செய்யலாம்.. அவற்றால் எந்த பாதிப்பும் வராது!!

இசையைக் கேட்க தலையணி ஒலிவாங்கியைப் பயன்படுத்தவும் !! யாருக்கும் தொந்தரவாகவும் இருக்காது!!

அப்புறம் என்ன, இனி அலைபேசியை அணைக்காமலேயே அதை அணைத்து கொஞ்ச வேண்டியது தானே!!!

கருத்துகள்

  1. nalla karuththu nandri
    surendran
    surendranath1973@gmail.com

    பதிலளிநீக்கு
  2. ஏரொப்லேன் மோடு க்கு செட் செய்து மீண்டும் மாற்றிக்கொள்வதற்கு, அணைத்தே மீண்டும் துவக்கிக் கொள்ளலாமே !


    வீரராகவன்

    பதிலளிநீக்கு
  3. வீரராகவன் சார்,
    //ஏரொப்லேன் மோடு க்கு செட் செய்து மீண்டும் மாற்றிக்கொள்வதற்கு, அணைத்தே மீண்டும் துவக்கிக் கொள்ளலாமே !//

    அணைத்தால், இசை விரும்பிகள் பாடல் கேட்க முடியாதே!!
    அதே போல தான், புகைப்படம் எடுப்பது, விளையாடுதல் போன்றவை! அவற்றை மட்டும் செய்ய சேவை வசதி (Network) தேவையில்லையே!!

    பதிலளிநீக்கு
  4. பாஸ் என் ஃபோனில் அப்படி ஒண்ணும் காணல்லையே.
    ஒருவேளை ஏரோபிளேன் கண்டு பிடிக்கும் முன்னாடியே என் ஃபோனை கண்டு பிடிச்சுட்டாங்களோ?

    பதிலளிநீக்கு
  5. கெளதமன்
    வேறு ஏதாவது பெயரில் இருக்கும்..
    தேடிப் பாருங்கள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...